03-21-2004, 02:16 PM
<b>சிறையிலிருந்து ஒரு கடிதம் </b>
எம் அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கு...
அன்புள்ள எங்கள் தமிழ் உறவுகளுக்கு வந்தனங்களுடன் தமிழர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தென்னிலங்கைச் சிறையில் அரசியல் கைதிகள் கைதிகள் என்கிற பெயருடன் சமாதான சூழ்நிலையிலும் சிறைவாசம் அனுபவிக்கும் உங்கள் உறவுகள் மிகுந்த மனவேதனையுடன் எழுதும் அன்பு மடல்.
இன்று எமது ஈழத்தமிழ் தேசத்தில் உருவாகியுள்ள பிரிவினைப்பேச்சு பிளவுகளினால் ஏற்பட்டுள்ள கவலைக்குரிய விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து தினம் தினம் மனவேதனையினால் புழுங்கிடழுகின்றோம்.
தமிழர்கள் ஆகிய எங்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு பலம்பொருந்திய பேரினவாத சக்திகளினால் அடக்கி ஒடுக்கப்பட்டு நலிவுற்று எங்கள் இனம் கிடந்தபோது தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றி எங்கள் இனத்தை மானத்துடன் தலைநிமிரச் செய்த எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்குதமிழ் எனும் உணர்ச்சி பிரவாகம் மிகுந்த நிகழ்வில் தேசியத்தலைவரின் உருவப்படங்களை உங்கள் கரங்களில் சுமந்து - ஏகோபித்த குரலாய் எங்கள் தலைவர் எங்கள் தலைவர் என்று நீங்கள் ஆக்ரோசித்ததை கேட்டு இன்புற்று ஆனந்தக்கண்ணீர் வடித்தோம்.
இனி எங்கள் தமிழ் இனத்தின் ஒற்றுமையை எந்தப் பலவானாலும் சீரழித்து சீர்குலைக்கவே முடியாது என்று உறுதிபுூண்டிருந்தோம். எங்கள் தாயகத்தின் வீரத்தையும், ஒற்றுமையையும் உரிமைக்கான உறுதிப் போராட்டத்தையும் எங்கள் தலைவரின் ஆளுமையையும் கண்ட உலகத்தமிழர்களும் ஏனையோரும் பிரமித்து நின்றார்கள். மகிழ்ந்தோம் ஆனால் இன்று?
எங்கள் தலைவரின் உருவப்படங்களிற்கு, தமிழ் தேசியத் தலைவரை தெய்வமாக மதித்து புூஐpக்கின்ற உங்கள் மத்தியில் உள்ள ஒருசில விஷமிகளின் து}ண்டுதலின் காரணமாக தீயிட்டு கொளுத்துகின்றார்கள். எங்கள் இதயங்கள் சுக்குநு}றாக நொருங்கி கண்ணீர் வடிக்கின்றது. இவ்வாறான அபகீர்த்தியான - கொடுரமான - செயல்தனை உங்கள் மத்தியில் உள்ள ஒருவரே செய்யும்போது இதை நீங்கள் எவருமே தட்டிக்கேட்காமல் இருப்பது ஏன்? மானமுள்ள, உணர்வுள்ள தமிழர்கள் ஆகிய நாங்கள் இவ்வாறான துர்ச்செயல்களைக் கண்டு கண்ணீர் வடிப்பது எங்கள் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கண்கெட்டவர்களிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. கீரியும் பாம்புமாக இருந்தாலும் இந்தவோர் விடயத்தில் பேரினவாத சக்திகள் தங்களுக்கு இடையிலான ஒற்றுமையை காட்டாமல் இல்லை. இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதற்கு யார் பொறுப்பு?
இதற்கான முழுப்பொறுப்பினையும் இன்று வடக்கு-கிழக்கு பிரிவினைவாதத்தினை, எதுவுமே அறியாத மக்கள் மத்தியில் பரப்பி தனது சுயலாபத்திற்காக பிழையான வழியில் மக்களை வழிநடத்திச் செல்லும் கருணா அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கருணா அவர்களே!
நீங்கள் தமிழர்கள் ஆகிய எங்களது உரிமைக்காக போராடினீர்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளுகின்றோம். உங்களை மதிக்கின்றோம். ஆனால், இன்று உங்களுடைய இன்னோரன்ன பிழைகளை மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களைப் பலி கடாக்களாக்க நினைக்கின்றீர்களே. இது நியாயமா?
வடகிழக்கு பிரிவினையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு உங்களுடைய இத்தகைய செயல்பாடுகள் வலுச்சேர்க்கும் என்பதனை நீங்கள உணரவில்லையா?
சமாதானம் உருவாகி ஈழத்தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மைகளும் கிடைக்கப்பெறாத இந்த தருணத்தில், நீங்கள் இத்தகைய பிரதேசவாத சிந்தனையுடன் செயற்படுவதன் உள்நோக்கம் என்ன? ஒரே தலைவன் என்கின்ற கொள்கையின் கீழ் தமிழர்களுக்கான விடுதலை உரிமைப் போராட்டத்தில் தங்களை இணைத்து, தங்களுடைய இன்னுயிரை தலைவனின் ஒரே கொள்கைக்காக ஈந்த மாவீரர்களை இன்று நீங்கள் பிரதேசவாத அடிப்படையில் பிரித்துப்பேசுவது சரிதானா? தியாக உணர்வுடன் மடிந்த மாவீரர்களுடைய ஆத்மா களங்கம்உறாதா?
நீங்கள், ஒரு அந்நிய சக்திக்கு விலை போயிருக்கக்கூடும் என்கின்ற கருத்து இங்குள்ள சிங்களவர்களிடையேயும் நிலவுகின்றது. நீங்கள் இவ்வாறு விலை போய் இருந்தால் தங்களுக்கே வெற்றி என்கிற எண்ணத்துடன் அவர்கள் இன்புற்றிருக்கின்றார்கள். நீங்கள் அந்நிய சக்திக்கு விலைபோய் இருக்கக்கூடும் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் உங்களுக்குச் சார்பாக உங்களை ஆதரித்து ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தும் எதுவுமே அறியாத பாமர மக்கள் செய்யும் அறியாத்தன செயல்களே!
இவ்வளவு காலமும் உலகில் உள்ள மானமுடைய தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தெய்வமாக புூஐpத்த எங்கள் தலைவரின் உருவப்படங்களை உங்களுடைய மறைமுக து}ண்டுதலினால் அல்லது கட்டாய வற்புறுத்தலின் அடிப்படையினால் தீயிட்டு கொளுத்துகின்றார்கள். இதற்கு மக்களுடைய தீயவழிச்செயல் மனமாற்றத்திற்கு நீங்கள் அந்நிய சக்திக்கு விலைபோய் மக்களை தீயவழியில் வழி நடத்துகின்றீர்களாம். உங்களுடைய அறிக்கைகளும், வெளிநாட்டு ஊடகங்கள், அரச ஊடகங்களுடனான தொடர்புகளும் சிங்கள மக்களுடைய கருத்துக்களை நிருபித்துள்ளன.
நீங்கள் மாத்தையா தேசத்துரோகி என்கின்றீர்கள் அப்படியென்றால் நீங்கள் யார்? இன்று கிழக்கு மாகாணத்திற்கென ஏதோ ஏதோவெல்லாம் முன்வைத்து இவற்றையெல்லாம் எங்கள் தலைவர் தரவில்லை பிரதேசபேதம் பார்க்கின்றார். எங்கள் மாகாணத்தை புறக்கணிக்கின்றார் என்று நீங்கள் மக்கள் மத்தியில் கூறி, எதுவுமே அறியாத பாமர மக்களை குழப்புகின்றீர்களே நீங்கள் இப்போது கிழக்கு மாகாணத்திற்கான மறுக்கப்பட்ட உரிமைகள் என்கின்ற பெயரில் தமிழ்த் தேசிய தலைமை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீங்கள் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்ட ஏன் தவறினீர்கள்? நீங்கள் இப்போது முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களிடையே ஒருசில யதார்த்த உண்மைகள் இருப்பதாக கருத்தில் எடுத்துக்கொள்ள முனைந்தாலும் நீங்கள் ஏன் இதற்காக பிரதேசவாதத்தை முன்வைத்தீர்கள்? இன்று மக்கள் மத்தியில் நீங்கள் உயர்வாக பேசப்படுவதற்கு உங்களுக்கு பக்கத்துணையாக நின்று களமாடிய கிழக்கு மாகாண தளபதிகள் கூட, உங்களுடைய இன்றைய பிரதேசவாத கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது தலைமைப்பீடத்தை நாடியுள்ளனர். இவ்வேளையில் நீங்கள் மாத்திரம் ஏதோ ஓர் உள்நோக்குடன் தனி மனிதனாக இதை ஏன் மக்கள் மத்தியில் திணித்து அவர்களை குழப்பியடிக்கின்றீர்கள்?
இன்றைய சமாதான சூழ்நிலையை உங்களுடைய இந்த பிரதேசவாத பிரசாரச் செயற்பாட்டினால் கேள்விக்குறியாக உள்ளது. உங்களுடைய இத்தகைய நயவஞ்சகச் செயலினால் மீண்டுமோர் யுத்தம் மூண்டு - எங்கள் தமிழ் தாயகத்தில் இரத்த ஆறு ஓடுமேயானால், இது நீங்கள் எங்கள் உயிர் தமிழ் இனத்திற்கு செய்த கொடிய கோரத்துரோகம் ஆகும். இதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். இறுதியாக உங்களிடம் ஒன்று கூறுகின்றோம் எங்கள் தமிழ் இனத்தை அந்நியனுக்கு விலைபேசி விற்றுவிடலாம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.
கிழக்கின் அன்பார்ந்த புத்திஐPவிகளே!
எதையுமே ஆராய்ந்து உணர்ந்து, தவறானவற்றை சுட்டிக்காட்டி ஒரு சமூகத்தை நல்வழியில் வழிநடத்தும் பாரிய பொறுப்பு உங்களையே சார்ந்தது. இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் கிழக்கு வாழ் மக்கள் உண்மையான யதார்த்தத்தை புரியவைத்து அவர்களை விழிப்படையச் செய்ய வேண்டியது உங்கள் ஒவ்வொருவருடைய தலையான கடமையாகும். இன்று நீங்கள் உயிருக்குப் பயந்து வாயடைத்து மௌனிகளாக இருப்பது சரிதானா? உரிமைப் போராட்டத்தின் ஆழமான வேரோடிய நிதர்சன உண்மைகளை பாமர மக்களுக்கு உணரச் செய்யுங்கள்.
ஆகவே புத்திஐPவிகளே! உங்களிடம் இரந்து கேட்கின்றோம். இச்சூழ்நிலை சுமூகமாக வேண்டுமேயானால் நீங்கள், உங்களுடைய மக்களுக்கு உண்மை நிலவரத்தை புரியவைத்து நீதி, நியாய யதார்த்த உண்மையின் பக்கம் மக்களை வழிநடத்துங்கள்.
புலம்பெயர்ந்த அன்புறவுகளே!
உங்கள் தேசப்பற்றையும், நாட்டுணர்வையும் சிரம்தாழ்த்தி ஆராதிக்கின்றோம். இன்றைய ஈழ நிலவரத்தின் யதார்த்த உண்மை உங்களிற்கு நிதர்சனமாகும் என்று நம்புகின்றோம். பிரதேசவாதத்தின் அடிப்படையில் இங்கு நிலவுகின்ற பிரச்சனையின் காரணமாக நீங்கள் குழப்பம் அடைந்து விடாதீர்கள்.
எங்கள் அன்பார்ந்த புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே! இங்கு நிலவுகின்ற கபடத்தனத்துடன் கூடிய பொய்யான பிரதேசவாத அடிப்படையற்ற கருத்துக்களுக்குள் நீங்களும் உள்வாங்கப்படாமல் எம்தேசத்தின் விடிவிற்காக போராடும் எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையே என்றும்போல் என்றென்றும் நேசிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம். இங்கு நிலவுகின்ற உண்மையான நிலவரத்தை இங்குள்ள எங்கள் உறவுகள் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.
பொறுப்புவாய்ந்த அரசசார்பான தமிழ் ஊடகங்களுக்கு
அன்பானவர்களே! தயவுசெய்து இன்றைய நிலைமையில் உங்களுடைய பொறுப்பற்ற செயல்களினால் மக்கள் மத்தியில் வீணான பிரச்சினைகளை வளர்த்துவிட ஏதுவாக இராதீர்கள். உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்த்து பிரச்சினைகளை மேலும் மேலும் வளர்க்கும் சக்தியாகவில்லாமல், மக்களுக்கு உண்மைகளை புரியவைத்து மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் சக்தியாக செயற்படுங்கள்.
அன்பானவர்களே!
நாங்கள் இந்த சிறைக்கூண்டுக்குள் இருந்து இவ்வாறு எழுதுவதனால் நாங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்று பிழையான கண்ணோட்டத்துடன் தயவுசெய்து எங்களை நோக்க வேண்டாம். இன்று எமது தமிழ் தாயகத்தில் உருவாகி இருக்கின்ற இந்த பிரச்சனையினால் மிகவும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் நாங்கள். கைது செய்யப்பட்டு இவ்வளவு காலமும் இங்குள்ள அதிகாரிகளிடம் ஒற்றுமையான சமூகத்தை சார்ந்தவர்கள் என்கின்ற மதிப்பும், மரியாதையும் எங்களுக்கு இருந்தனர். ஆனால், இன்று இங்குள்ள அதிகாரிகள் எங்களை மிகவும் மிகவும் கேவலமாக உற்றுநோக்குகின்றார்கள்.
இப்போதைய குழறுபடிகளினால் எங்களுக்கு எப்போதுமே விடுதலை கிடைக்கவே போவதில்லை என எங்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றார்கள். இத்தகைய உளத்தாக்கங்களின் காரணமாகவேதான் இந்த மடலை நாங்கள் உங்கள் எல்லோருக்கும் எழுதுகின்றோம்.
எங்களுடைய மன ஆதங்க உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்படுவீர்கள் என நம்பி இருக்கின்றோம். இன்றைய காலகட்டத்திலும் எங்கள் தமிழ் இனத்திற்கு விடிவு கிடைக்காவிடின் இனி எப்போதுமே கிடைக்கப்போவது இல்லை. தந்தை செல்வா அவர்கள் தமிழ் இனத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று கூறியது உண்மையாகவே போய்விடும். அந்நிய சக்திக்கு விலை போனவர்களுடைய கருத்துக்களிற்கு செவிமடுக்காமல் உண்மையின் பக்கமே உங்கள் எல்லோரது பயணமும் இருக்கட்டும்.
இப்படிக்கு,
தமிழ் அரசியல் கைதிகள், களுத்துறை சிறைச்சாலை.
1. பரணிதரன் (2194) 2. கே.றொபேட் (4825) 3. ஆர்.மகேசன் (3426) 4. எஸ்.சிவகுமார் (27104) 5. வி.வரதாரஐன் (5747
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (21.03.04) & தமிழ்நாதம்