03-21-2004, 02:13 PM
<b>தமிழகத்திலிருந்து யோ.திருவள்ளுவர் எழுதிய:
கருணாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்</b>
அன்பு திரு.கருணா அவர்களுக்கு,
தமிழகத்து தமிழனின் வணக்கம். இந்த செய்தி தாங்கிவரும் என் கடிதம் பல லட்சம் தமிழர்களின் உணர்வலைகள். ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றை என் 13 வயது முதல் கவனமாக அறிந்து வருகிற எனக்கு, உங்களது கடந்தகால வீரம்செறிந்த வரலாறு வியக்க வைத்தது உண்மை. கடந்த காலத்தில் நீங்கள் ஒரு இலட்சியம் மிக்க போர் வீரன் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது. இந்த மாதம் இடியென வந்த உங்கள் செய்திகளை படித்து வேதனை கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இந்த கடிதம் உங்களுக்கு.
ஈழத்து போராட்டங்களில் நேரடியாக எந்த பங்கும் ஆற்றாதவன் என்ற நிலையில் நின்று உங்கள் இந்த பிரதேச வாதத்தை பார்க்கும் போது எனக்கு உங்களிடம் சில கேள்விகள் எழுகிறது. தமிழீழம் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட எல்லையை (தாயகத்தை) மீட்டெடுக்கவே இதுவரை போராட்டங்களில் பல ஆயிரம் பொதுமக்களும,; போராளிகளும் உயிரை தியாகம் செய்தார்கள். அவர்கள் மட்டும் ஊர், பிரதேசம,; மாவட்டம், வட்டம் என பிரிந்து போயிருந்தால் இன்று நீங்களும் பாதுகாப்பற்று அலைந்திருப்பீர்கள் அல்லது கல்லறையில் கருக்கப்பட்டிருப்பீர்கள். இதை தெரிந்தும் ஒன்றும் அறியாத விடலைப் பெடியன் போல ஒரு போராளியாய் இருந்த நீங்கள கிணறு வெட்ட புறப்பட்ட புூதமாய்; மாறிய இரகசியம் என்ன?
உங்கள் பேட்டிகளில் படித்த விடயங்களில் சில சம்பந்தமான கேள்விகள்:
1) வன்னிக்கு 1000 வீரர்களை அனுப்ப தலைமை கேட்டதாகவும், அந்த போராளிகளை பலிகொடுக்காமல் காப்பாற்றவும் வேண்டி இந்த முடிவு எடுத்ததாக சொல்லியிருக்கிறீர்கள். இது உண்மை என்றால் எதற்கு ஒரு உப்பு சப்பில்லாத உழுத்துபோன பிரதேச வாதம் தேவைப்படுகிறது உங்களுக்கு? போராட்ட களத்தில் படைகளை அதன் தேவைகளுக்கு ஏற்ப தந்திரமாக நகர்த்துவதில் தான் வெற்றி இருக்கிறது என்பதை அறியாத அப்பாவியில்லை நீங்கள். எதுவாக இருந்தாலும் கட்டளைகளை கடைப்பிடிப்பது தான் ஒரு படையணியின் ஒழுக்கம்.
தலைமை உங்களை விசாரிக்க அழைத்ததன் பேரில் ஏற்பட்ட உயிர் பயம் தான் இன்று நீங்கள் விளையாடும் இந்த சறுக்கல்கள் என்பது உங்களுக்கும், உங்கள் நெருக்கமானவர்களுக்கும் மட்டுமல்ல உலகத்துக்கே தெரிந்த இரகசியம். போராளிக்கு இருக்க கூடாத உயிர்பயம் உங்களில் முளைவிட என்ன காரணம்?
2) தமிழீழ தேசியத் தலைமை அதிகாரத்தை பிரித்து கொடுக்காமல், தான் இடும் கட்டளைகளை செயல்படுத்துவதாக கூறியிருக்கிறீர்கள். இது தான் ஒரு போராட்ட வரலாற்றில் மிக பாதுகாப்பான தந்திரோபாயங்களை தரவல்லது என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் இருப்பது ஒரு விடுதலை பெற்ற சூழல் இல்லை என்பதை மறந்து விட்டீர்களா?
உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போராளிகளுக்கு கட்டளை பிறப்பிப்பது நீங்கள் தானே? அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தான் நீங்கள் அவர்களை கட்டுப்பாடில் வைத்திருப்பதன் இரகசியம் என்ன என்பது உங்களுக்கு மட்டுமா தெரியும்?
3) உளவுப்பிரிவுப் பொறுப்பாளர், காவல்த்துறை பொறுப்பாளர், நிதிப் பொறுப்பாளர் என இந்த மூவரையும் நீக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளீர்கள். ஒரேயொரு கேள்வி. எதற்காக இவர்களை பார்த்து அச்சம் கொள்கிறீர்கள்? உங்கள் மடியில் கனமில்லை என்றால் எதற்கு இந்த பயம் கலந்த சிறுபிள்ளைத்தனமான கோரிக்கைகள்?
4) ஆயுதங்களை பி.பி.சி நிருபருக்கு காட்டுவதற்காக மீனகம் முகாமை நீங்கள் திறந்தது உங்களது இயலாமையையும், பரிதாபம் கலந்த பய உணர்வையும் எதிரிக்கும் காட்டியிருக்கிறது. உங்களை கடந்தகால புகைப்படத்தில் பார்க்கும் போதெல்லம் ஒரு கம்பீரம் தெரியும், இப்போதைய பி.பி.சி புகைப்படத்தை பார்த்தபோது ஒரு குறுநரியின் நடை தெரிகிறது.
5) நேர்காணலொன்றில், பல வரலாறுகளை படித்ததாக சொல்லியிருந்தீர்கள்;. கியுூபாவின் விடுதலைப் போராட்டதையும் அதில் பிடல் காஸ்ட்ரோ, செகுவேரா இவர்களது அளவுகடந்த பற்றுறுதியையும், நட்பையும், தலைமை முறையையும் ஒருமுறை படியுங்கள். கல்நெஞ்சம் கொண்டாலும் நீங்கள் உண்மை போராளி என்றால் உங்கள் செயலுக்கு கண்ணீர் விடுவீர்கள்!
உங்களது இந்த தரம்தாழ்ந்த செயலால் பாதிப்பு பல இலட்சோப இலட்சம் தமிழ் மக்களுக்கு. நீங்கள் உங்கள் நிலையை உணர்ந்து மாற்றிக்கொள்ளாவிட்டால் உங்களது தலைமுறைக்கும் இதன் பழி வந்து சேரும். தலைமுறை எல்லாம் தலைகவிழ்ந்து நடப்பது தான் மானம்மிகு போராளிக்கு அழகா? இன்று அருகில் இருந்து ஆதரவு தரும் வல்லமை மிக்க உங்களது புதிய நண்பர்கள் உங்களை விட நல்ல இடம் கிடைத்ததும் உங்களை முதல் பலி கொடுப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
கடைசியாக எனது எளிய ஆலோசனை உங்களை இந்த சிக்கலிலிருந்து விடுவித்துக்கொள்ள. பொது மன்னிப்பை ஏற்று விசாரணைக்கு உட்பட்டு நியாயமாக நடந்துகோள்ளுங்கள். தமிழ் மக்கள் உங்களது உயிரையும் மிச்சமிருக்கும் மானத்தையும் காப்பற்றுவார்கள்.
துரோகி என்ற பட்டம் சுமந்து வசதியாக வேதனையில் வாழ்வதை விட, திருந்தி மன்னிக்கப்பட்டவன் என்பது மேலான இடம். தமிழீழ தேசத்தில் மன்னிப்பு என்ற ஒரு அத்தியாயத்தை துவக்கி வையுங்கள் அதில் புடம் போடப்படும் முதல் போராளியாக.
இல்லையேல் துரோகி என்ற இழிச்சொல் சுமந்து உங்களது குடும்பம், தலைமுறையை பழிச்சொல்லுக்கு இரையாக்குங்கள். முடிவு உங்களிடம். வரலாற்றில் நீங்கள் எந்த பக்கத்தில் என்பது உங்களது இப்போதைய முடிவு தான் தீர்மானிக்கும்.
யோ.திருவள்ளுவர்
தமிழகத்திலிருந்து
நன்றி : தமிழ்நாதம்