03-21-2004, 09:39 AM
மதி கவலை வேண்டாம் இங்கை ஒரு செய்தி சிவப்பிலை போட்டதை உற்று கவனியுங்கோ.
BBC Wrote:[size=14]பிரபாகரனுடன் இணைந்து செயல்பட கருணா முடிவு?
கொழும்பு:
தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து போராட, அந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கிழக்கு பகுதி தளபதி கருணா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மட்டக்களப்பு பகுதியில் கருணா தலைமையிலான விடுதலைப் புலிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையை வெளியேறக் கூறி 1988ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பூபதி என்ற வீரரின் நினைவாக இந்த பேரணி நடைபெற்றது. இதில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் கருணா தலைமையிலான படையின் அரசியல் பிரிவு தலைவர் விசு பேசியதாவது:
தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் பிரபாகரனுடன் இணைந்து செயலாற்ற கருணா முடிவெடுத்துள்ளார். இதற்கான புதிய ஒப்பந்தம் விரைவில் போடப்படும். மட்டக்களப்பு அம்பாரை பகுதி மக்களுக்கான பிரச்சனையில் கருணா தலைமையில் தனித்துப் போராடுவோம். கருணாவை இயக்கத்தில் இருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
நன்றி - தட்ஸ் தமிழ்
இந்த செய்தியை பத்தி என்ன சொல்ல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan

