06-30-2003, 09:04 PM
முதன்மை நினைவகங்கள் (Random Access Memory or Main Memory)
இதை எழுமாற்று நினைவகம் (Random Access Memory) எனக் குறிப்பிடக்காரணம் இங்கு சேமிக்கப்படும் தகவல்கள் தொடர்ச்சியாகவோ அல்லது ஒழுங்காகவோ சேமிக்கப்படுவதில்லை மாறாக ஒரு தரவு வாசிக்கப் படும்போதோ அல்லது சேமிக்கப் படும்போதோ எழுந்தமானமாக ஒரு குறிப்பிட்ட முகவரியில் சேமிக்கப்படும் அதேபோல் அந்த முகவரியை வைத்தே வாசிக்கப்படும்.
Static Random Access Memory (SRAM)
இது Flip Flop களால் ஆன கலங்கள் பலவற்றைக்கொண்ட ஒரு அமைப்பு. Flip Flop என்பது மூவாயிகளின் மூலம் உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சுற்று. இது நாம் கொடுக்கும் மின்னழுத்தத்தை சேமித்து வைத்திருக்கும். மின்னழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அதில் 1 ம், மின்னழுத்தம் பிரயோகிக்கப்படாத நிலையில் 0 ம் இருக்கும். இவ்வாறு தரவுகள் சேமிக்கப்படும். Cache எனப்படும் இடைமாற்று நினைவகங்கள் SRAM வகையைச் சார்ந்தன காரணம் SRAM தரவுப் பரிமாற்றத்திற்கு வேகமானது (DRAM இல் தரவுகளை அடிக்கடி மீளப்பதித்துக் கொள்ள நேரம் தேவைப்படும்...SRAM இல் அந்தத் தேவை இல்லை..நேரம் மிச்சம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ...DRAM பற்றி அடுத்த பந்தியில்...)
Dynamic Random Access Memory (DRAM)
இது மூவாயி மற்றும் கொள்ளளவியினாலான கலங்கள் பலவற்றைக் கொண்ட அமைப்பு. கொள்ளளவியானது நாம் கொடுக்கும் மின்னேற்றத்தை சேமித்து வைத்திருக்கும்...இருந்தாலும் அதனால் அந்த ஏற்றத்தை நீண்ட நேரம் சேமித்து வைக்க முடியாது....ஏற்றக் கசிவு மூலம் நேரத்துடன் ஏற்றத்தை இழந்துகொண்டிருக்கும். ஆகவே இதிலுள்ள ஏற்றத்தை மீண்டும் மீண்டும் நிரப்பிக்கொள்வது இன்றியமையாதது! ஆகவே இந்த வகை நினைவகத்தில் தரவுகளை அடிக்கடி மீளப்பதித்துக் கொள்ளவேண்டும்......இந்த தெழிற்பாட்டுக்கும் வேறு சில இயக்க நிலைத் தொழிற்பாடுகளுக்கும் மூவாயிகள் பயன்படுகின்றன.
எமது கணணிகளுக்கு இந்த வகை(DRAM) முதன்மை நினைவகத்தையே பாவிக்கிறோம் ஏனெனில் இது SRAM ஐ விடக் குறைந்த செலவில் செய்யக்கூடியது, அத்துடன் சிறிய இடம் பிடிக்கும். DRAM ற்கு மீளப்பதித்தல் செய்முறை இல்லாவிட்டால் தரவுகள் அழிந்துபோகுமல்லவா...இதனால்தான் கணணியின் முதன்மை நினைவகத்தில் சேமிக்கப்படும் தகவல்கள் நாம் கணணியை நிறுத்தியவுடன் அழிந்து போகின்றன.
ஆனால் எமது கணணிகளில் பாவிக்கப்படுவது SDRAM அல்லவா?
Synchronous Dynamic Random Access Memory (SDRAM)
இங்கு நான் முன் குறிப்பிட்ட எழுந்தமானமான நினைவகம் எனும் கொள்கை சிறிதளவு விலக்கப்பட்டு வேகமான தகவல் பரிமாற்றத்திற்காக தரவுகளில் பெரும்பாலானவை தொடர்ச்சியாக சேமிக்கப்படும். ஆகவே இதை புதிய பெயர்கொண்டு அழைக்கிறோம்.
DDR SDRAM
Double data rate Synchronous Dynamic Random Access Memory
இதுதான் இப்போதய புதிய தொழில்நுட்பம். இதுவும் SDRAM வகையே ஆனால் இங்கு தரவுகள் இரட்டை வேகத்தில் பரிமாறப்படும்...இது எவ்வாறு எய்தப்படுகிறது என விளக்க கணணியின் Clock ம் அதன் செயற்பாடுகள் பற்றிச் சொல்ல வேண்டும்...அவை சிறிது இலத்திரனியல் சிக்கலானவையாதலால் தவிர்ப்போம்.
இதை எழுமாற்று நினைவகம் (Random Access Memory) எனக் குறிப்பிடக்காரணம் இங்கு சேமிக்கப்படும் தகவல்கள் தொடர்ச்சியாகவோ அல்லது ஒழுங்காகவோ சேமிக்கப்படுவதில்லை மாறாக ஒரு தரவு வாசிக்கப் படும்போதோ அல்லது சேமிக்கப் படும்போதோ எழுந்தமானமாக ஒரு குறிப்பிட்ட முகவரியில் சேமிக்கப்படும் அதேபோல் அந்த முகவரியை வைத்தே வாசிக்கப்படும்.
Static Random Access Memory (SRAM)
இது Flip Flop களால் ஆன கலங்கள் பலவற்றைக்கொண்ட ஒரு அமைப்பு. Flip Flop என்பது மூவாயிகளின் மூலம் உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சுற்று. இது நாம் கொடுக்கும் மின்னழுத்தத்தை சேமித்து வைத்திருக்கும். மின்னழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அதில் 1 ம், மின்னழுத்தம் பிரயோகிக்கப்படாத நிலையில் 0 ம் இருக்கும். இவ்வாறு தரவுகள் சேமிக்கப்படும். Cache எனப்படும் இடைமாற்று நினைவகங்கள் SRAM வகையைச் சார்ந்தன காரணம் SRAM தரவுப் பரிமாற்றத்திற்கு வேகமானது (DRAM இல் தரவுகளை அடிக்கடி மீளப்பதித்துக் கொள்ள நேரம் தேவைப்படும்...SRAM இல் அந்தத் தேவை இல்லை..நேரம் மிச்சம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ...DRAM பற்றி அடுத்த பந்தியில்...) Dynamic Random Access Memory (DRAM)