Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துளிதுளியாய்
#1
மீண்டும் <b>துளிதுளியாய் </b> கவிதை தொகுப்பிலிருந்து. . உங்களுடன்

<img src='http://home.hetnet.nl/~bodhi-creations/gardenfaerie-painted-copyright-bodhi-creations.jpg' border='0' alt='user posted image'>
1)
மழையறியா ஓர் மண் உண்டோ ?
என் மனதறியா ஓர் மனம் உண்டோ ?
நீயே என் வானமானபின்பு
வாழ்வில் இனி என்ன வெறுப்பு
வாழ்ந்து காட்டவேண்டும் - இவ்
வையகம் என்னை வாழ்த்தவேண்டும்
வீழ்ந்துகிடந்தபோது வீசிய
ஏளன விழிகள் யாவும்
விக்கித்து நிற்கவேண்டும்

2)
எனக்கான வானம்
நீயானபின்பு - நான்
இறகுகள் விரித்து என்
இளமை என்னும் வானத்தில்
வாழ்வின் நீள அகலங்களை
உன் பரிபாசைகளால்
அளந்து சுகிக்கின்றேன்

3)
மலர்வனத்தில் மஞ்சமிட்டு
வண்டுகளோடு வம்பளந்து
உனக்காய் காத்திருந்தேனே
உச்சிவெயில் உணர்ந்துவீழ்ந்தும்
உதிரம் என்னை உசுப்பிவிட்டும்
நீ மட்டும் வரவேயில்லை

4)முகமது மறைத்து
முகவரி தொலைத்து
புலமதில் புகுந்து
புழுவாய் நெளிகின்றோம்
சொந்தமண் அங்கு
சோதனைகள் சுமக்கின்றது
சொந்தமாய் நாம் இங்கு
சோடித்த வாழ்கின்றோம்
சொகுசாய் இருக்கின்றோம்

5)
ஏங்கவைக்கின்றாய்
ஏக்கத்தவிப்பில் ஏதேதோ செய்திட துணிகின்றேன்
மழையில் நனைந்த ஆடைகள் போல
மனது பாரம் சுமக்கின்றது
கவனச்சிதைவு கருத்தப்புரிதலிலும்
தவறுகள் நிகழ்த்தியபடி

காலைநேர காதல் மொழி
மதியநேர மனசுரையாடல்
மாலைநேர செய்யவிளையாட்டு
எதுவுமின்றி ஏங்கி நிற்கின்றேன்

6)
அதிகாலை ஆதவன் அலுப்பில்லாமல் இன்றும்
அந்திமறைந்த வெளிச்சம் ஆவலுடன் இன்றும்
கூடுதிரும்பிய பறவைகள் வான்வெளியில் இன்றும்
எல்லாமே வழமையான செயற்பாட்டில்
நான்மட்டும் எதிலுமே பிரக்ஞையற்று
எங்கேயோ வாழ்வை தொலைத்தவன் போல
உன் தொலைபேசி அழைப்பிற்காய்
காத்துக்கிடக்கின்றேன்

7)
செய்த தவறை திருத்திக்கொள்வதில்
எனக்காய் ஏசிய வார்த்தைகளிற்காய் நொந்து அழுவதிலும்
உன் காதல் பாசம் எல்லாம்
மேலும் மேலும் என்னை
தவறுசெய்ய துூ}ண்டுதடி
தெரியாமல் செய்த தவறிற்காய்
நீ தந்த தண்டனைகள்
தெரிந்தும் தவறுசெய்ய உந்துகின்றன
தண்டிக்கவும் கண்டிக்கவும் எனக்காய்
ஜனித்தவள் நீ - உன்
பாசத்தை பகிர்ந்துகொள்ள
இதுவல்லவா நேரம்

ந.பரணீதரன்
[b] ?
Reply


Messages In This Thread
துளிதுளியாய் - by Paranee - 03-21-2004, 05:29 AM
[No subject] - by sWEEtmICHe - 03-21-2004, 05:40 PM
[No subject] - by sWEEtmICHe - 03-21-2004, 06:41 PM
[No subject] - by shanmuhi - 03-21-2004, 07:53 PM
[No subject] - by Paranee - 03-22-2004, 05:16 AM
[No subject] - by nalayiny - 03-22-2004, 07:50 AM
[No subject] - by sWEEtmICHe - 03-22-2004, 08:05 AM
[No subject] - by Eelavan - 03-22-2004, 02:09 PM
[No subject] - by phozhil - 03-22-2004, 02:10 PM
[No subject] - by Eelavan - 03-22-2004, 02:11 PM
[No subject] - by Eelavan - 03-22-2004, 02:14 PM
[No subject] - by Paranee - 03-22-2004, 03:17 PM
[No subject] - by sWEEtmICHe - 03-24-2004, 06:50 AM
[No subject] - by phozhil - 03-24-2004, 08:26 AM
[No subject] - by Paranee - 03-24-2004, 08:49 AM
[No subject] - by Paranee - 03-24-2004, 08:53 AM
[No subject] - by sWEEtmICHe - 03-24-2004, 11:12 AM
[No subject] - by AJeevan - 03-24-2004, 11:28 AM
[No subject] - by Eelavan - 03-24-2004, 11:31 AM
[No subject] - by Paranee - 03-24-2004, 12:02 PM
[No subject] - by Paranee - 03-24-2004, 12:05 PM
[No subject] - by sWEEtmICHe - 03-24-2004, 02:16 PM
[No subject] - by sWEEtmICHe - 03-24-2004, 02:23 PM
[No subject] - by Paranee - 03-24-2004, 03:15 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 03:52 PM
[No subject] - by sWEEtmICHe - 03-24-2004, 04:26 PM
[No subject] - by sWEEtmICHe - 03-24-2004, 05:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)