![]() |
|
துளிதுளியாய் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிதுளியாய் (/showthread.php?tid=7309) Pages:
1
2
|
துளிதுளியாய் - Paranee - 03-21-2004 மீண்டும் <b>துளிதுளியாய் </b> கவிதை தொகுப்பிலிருந்து. . உங்களுடன் <img src='http://home.hetnet.nl/~bodhi-creations/gardenfaerie-painted-copyright-bodhi-creations.jpg' border='0' alt='user posted image'> 1) மழையறியா ஓர் மண் உண்டோ ? என் மனதறியா ஓர் மனம் உண்டோ ? நீயே என் வானமானபின்பு வாழ்வில் இனி என்ன வெறுப்பு வாழ்ந்து காட்டவேண்டும் - இவ் வையகம் என்னை வாழ்த்தவேண்டும் வீழ்ந்துகிடந்தபோது வீசிய ஏளன விழிகள் யாவும் விக்கித்து நிற்கவேண்டும் 2) எனக்கான வானம் நீயானபின்பு - நான் இறகுகள் விரித்து என் இளமை என்னும் வானத்தில் வாழ்வின் நீள அகலங்களை உன் பரிபாசைகளால் அளந்து சுகிக்கின்றேன் 3) மலர்வனத்தில் மஞ்சமிட்டு வண்டுகளோடு வம்பளந்து உனக்காய் காத்திருந்தேனே உச்சிவெயில் உணர்ந்துவீழ்ந்தும் உதிரம் என்னை உசுப்பிவிட்டும் நீ மட்டும் வரவேயில்லை 4)முகமது மறைத்து முகவரி தொலைத்து புலமதில் புகுந்து புழுவாய் நெளிகின்றோம் சொந்தமண் அங்கு சோதனைகள் சுமக்கின்றது சொந்தமாய் நாம் இங்கு சோடித்த வாழ்கின்றோம் சொகுசாய் இருக்கின்றோம் 5) ஏங்கவைக்கின்றாய் ஏக்கத்தவிப்பில் ஏதேதோ செய்திட துணிகின்றேன் மழையில் நனைந்த ஆடைகள் போல மனது பாரம் சுமக்கின்றது கவனச்சிதைவு கருத்தப்புரிதலிலும் தவறுகள் நிகழ்த்தியபடி காலைநேர காதல் மொழி மதியநேர மனசுரையாடல் மாலைநேர செய்யவிளையாட்டு எதுவுமின்றி ஏங்கி நிற்கின்றேன் 6) அதிகாலை ஆதவன் அலுப்பில்லாமல் இன்றும் அந்திமறைந்த வெளிச்சம் ஆவலுடன் இன்றும் கூடுதிரும்பிய பறவைகள் வான்வெளியில் இன்றும் எல்லாமே வழமையான செயற்பாட்டில் நான்மட்டும் எதிலுமே பிரக்ஞையற்று எங்கேயோ வாழ்வை தொலைத்தவன் போல உன் தொலைபேசி அழைப்பிற்காய் காத்துக்கிடக்கின்றேன் 7) செய்த தவறை திருத்திக்கொள்வதில் எனக்காய் ஏசிய வார்த்தைகளிற்காய் நொந்து அழுவதிலும் உன் காதல் பாசம் எல்லாம் மேலும் மேலும் என்னை தவறுசெய்ய துூ}ண்டுதடி தெரியாமல் செய்த தவறிற்காய் நீ தந்த தண்டனைகள் தெரிந்தும் தவறுசெய்ய உந்துகின்றன தண்டிக்கவும் கண்டிக்கவும் எனக்காய் ஜனித்தவள் நீ - உன் பாசத்தை பகிர்ந்துகொள்ள இதுவல்லவா நேரம் ந.பரணீதரன் - sWEEtmICHe - 03-21-2004 கவிதை எனக்கு புரியவில்லை .பரணீ நண்பா மன்னிக்கவும்...சில வார்தைகள் தான் புரிந்தது<img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_surprised.gif' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 03-21-2004 <img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_sweetmiche~0.jpg' border='0' alt='user posted image'> - shanmuhi - 03-21-2004 Quote:முகமது மறைத்து கவி வரிகள் அருமை. வாழ்த்துக்கள். சொந்தமாய் நாம் இங்கே சோடித்து, சொகுசாய் வாழ்ந்தாலும் சோகங்கள் உண்டு. - Paranee - 03-22-2004 அதுதான் கவிதை sWEEtmICHe Wrote:கவிதை எனக்கு புரியவில்லை .பரணீ நண்பா மன்னிக்கவும்...சில வார்தைகள் தான் புரிந்தது<img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_surprised.gif' border='0' alt='user posted image'> - nalayiny - 03-22-2004 சகல கவிதைகளும் மிக அருமை. நல்ல பல சொல்லாடல்கள் . பிரமிக்க வைக்கிறது. - sWEEtmICHe - 03-22-2004 பரணீ!பரணீ!பரணீ!............<img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_confused.gif' border='0' alt='user posted image'> - Eelavan - 03-22-2004 என்ன அம்மையார் போர்ப்பரணி பாடுகிறாரா? - phozhil - 03-22-2004 கரவை (கூத்து) கண்டிருக்கிறேன்;போற்றி! பரணி வாசித்திருக்கிறேன்;போற்றி! கரவை பரணீ தரித்த காதல்,உணர்கிறேன்;போற்றி!. - Eelavan - 03-22-2004 4)முகமது மறைத்து முகவரி தொலைத்து புலமதில் புகுந்து புழுவாய் நெளிகின்றோம் சொந்தமண் அங்கு சோதனைகள் சுமக்கின்றது சொந்தமாய் நாம் இங்கு சோடித்த வாழ்கின்றோம் சொகுசாய் இருக்கின்றோம் ஆகா காதல் கவிதைக்குள்ளும் மண்ணின் வாசமா? - Eelavan - 03-22-2004 என்ன தடூராரே ஏற்கனவே உங்களூர் அரசன் ஒருவன் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து தமிழை வாழ வைத்த பெருமையைத் தனதாக்கினான் நீங்கள் எமது அரசவைக் கவிஞரை ஒரு வழி பண்ணுவது என்று முடிவா? - Paranee - 03-22-2004 நன்றி நண்பர்களே ! - sWEEtmICHe - 03-24-2004 பரணீ உங்களுக்கு என் மேல் கோவமா
- phozhil - 03-24-2004 Eelavan Wrote:என்ன தடூராரே------------------------------------------------------ வழிவழி வரு வழிமொழியும் அல்ல , ஒரு வழி பண்ணும் முடிவும் அல்ல. வழிந்த ஈடிகை வழித்தலுக்கு ஒரு வழிபாடு பண்ணினேன் அவ்வளவே. ----------------------------------------------------- ஈடிகை=தூவல்=தூரிகை=எழுதுகோல். - Paranee - 03-24-2004 கோபமா அப்படி என்றால் sWEEtmICHe Wrote:பரணீ உங்களுக்கு என் மேல் கோவமா - Paranee - 03-24-2004 நன்றி பொழிலாரே ஒரு வழியோடு தான் வந்திருக்கின்றீர்கள். உங்கள் வழிகாட்டல் எனக்கு வலுவுூட்டட்டும். தங்கள் தமிழ் கண்டு உள்ளம் களிக்கின்றது நன்றி phozhil Wrote:Eelavan Wrote:என்ன தடூராரே------------------------------------------------------ - sWEEtmICHe - 03-24-2004 .பரணீ, முகமது மறைத்து கோபம் என்ற முகவரி தொலைத்து விட்டேன் என்ன செய்வது .....தெரிய வில்லை.... என்னுடன் நிங்களும் பேசவில்லை அதுனால் கேட்டேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- AJeevan - 03-24-2004 <img src='http://www.intamm.com/kavithai/jayabaskar/images/title.jpg' border='0' alt='user posted image'> [b]<span style='color:green'>நீயும் நானும் <i>[size=15]பழகாத டிரைவரையும் பார்க்காத பிரேக்கையும் நம்பித்தான் நாள்தோறும் தொடர்கிறது நமது பஸ் பயணம் கதிர் வீச்சு நிகழாது எனும் நிம்பிக்கையில்தான் கல்பாக்கத்திற்கு அருகிலேயே குடும்பம் நிடத்துகிறேன் நான். கடை நிடத்துகிறாய் நீ. அணுகுண்டுகளை வைத்திருப்பார்களே தவிர வீச மாட்டார்கள் எனும் நம்பிக்கையில்தான் எல்.ஐ.சி.க்கு தள்ளாடித் தள்ளாடி தவணை கட்டுகிறேன் நான் வேளச்சேரியில் வீடு கட்டுகிறாய் நீ. இப்படியாக சாகிற வரைக்கும் பிறரை சார்ந்தும், நம்பியும் வாழ்ந்தாக வேண்டிய சக விலங்குகள் தான் மளிகைக் கடைக்காரனான நீயும் - உன்னிடம் மளிகை சாமான் வாங்க வந்த நானும் இருந்தும் ஒரே ஒரு தேங்காயை எனக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு எப்படி சொல்ல முடிகிறது உன்னால் இந்தக் காலத்தில் யாரையுமே நிம்ப முடியவில்லை என்று...........</span></i> http://www.intamm.com/ - Eelavan - 03-24-2004 யதார்த்தத்தைப் போட்டுடைப்பதில் கவிஞர்கள் கெட்டிக்காரர்கள் சாதாரண தேங்காய் கடன் வாங்குவதிலேயே இவ்வளவு விடயம் இருக்கிறது என்றால் மற்றையவை - Paranee - 03-24-2004 விடிய விடிய பேசிக்கொண்டிருக்கலாம் காலம் வீண்விரயம் ஆகாமட்டும் ம் கோபம் என்ற வார்த்தையே சுடுகின்றது து}க்கி வீசுங்கள் து}ரமாய் எங்கே கவிதைகளை காணவில்லை அள்ளித்தெளியுங்கள் sWEEtmICHe Wrote:.பரணீ, |