03-20-2004, 01:02 PM
<b>சிங்கப்பூரில் வீட்டு வேலைக்கு செல்ல விருப்பமா? செல்வியை பாருங்க!</b>
சிங்கப்பூரில் வீட்டு வேலைக்குச் சென்ற, செல்வி என்ற இந்தியப் பெண் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூர் பணக்கார நாடு மட்டுமல்ல; சட்டங்களை கடுமையாக அமல்படுத்தும் நாடு என்ற பெருமையும் உள்ளது. ஆனால், அங்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 1999ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதால், சித்ரவதை செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் ஏராளமான பெண்கள் வீட்டு வேலை செய்கின்றனர். இந்தோனேஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் வீட்டு வேலைக்காக இந்நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறத்தப்படுகின்றனர். சிலசமயம், செக்ஸ் சித்ரவதையும் நடக்கிறது.
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வந்த செல்வி என்ற இந்தியப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட கொடுமை நேர்ந்துள்ளது. பெயரை வைத்து பார்க்கும் போது, அநேகமாக இவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரைப் பற்றிய முழு விபரம் தெரியவில்லை.
செல்விக்கு 35 வயது. குள்ளமான உருவம். பெரிய கண்கள். அடர்த்தியான புருவம். செல்வியின் முதலாளி, இவருடைய உள்ளங்கையில் மெழுகை சுடச்சுட ஊற்றி சுட்டுள்ளார். அடித்து சித்ரவதை செய்துள்ளார். பல நாட்கள் இக்கொடுமையை அனுபவித்த அவர் சமீபத்தில் அந்த வீட்டில் இருந்து தப்பி, சிங்கப்பூரில் இதுபோன்ற பெண்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இவரைப் போன்ற பல பெண்கள் அங்கு உள்ளனர்.
நன்றி: தினமணி