03-20-2004, 10:36 AM
Eelavan Wrote:இராணுவம் புலிகளிடம் அனுமதி கேட்டது எனது கருத்து அல்ல உண்மைச் செய்தி
சக்தி நீங்கள் இருக்கும் நாட்டில் தெரிகிறதா என்ன அலைவரிசை
அன்னை பூபதி நினைவு அனுஷ்டானம்
அம்பாறை - மட்டு.மாவட்டங்களில்
தமிழீழ விடுதலைக்காகவும், உரி மைகளுக்காகவும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் உண்ணாவிரதம் இருந்து தனது இன் னுயிரை நீத்த அன்னை பூபதியின் 16ஆவது நினைவுதினம் நேற்று அம்பாறை மாவட்டக் கரையோரத் தமிழ்ப் பிரதேசங்களில் அனு~;டிக் கப்பட்டது.
அன்னை பூபதி 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி உண்ணா விரதத்தை ஆரம்பித்தார் என்பதும், ஒரு மாத காலத்தில் ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்நீத்தார் என்பதும் தெரிந் தவையே.
அன்னை பூபதி நினைவாக நேற்று 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல் முனையில் அரச அலுவலகங்கள், வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந் தன.
போக்குவரத்துக்கள் இடம்பெற்ற போதிலும் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன.
கல்முனையில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அலுவல கத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டி ருந்தன.
பாடசாலை மாணவர்கள் பலர் கோயில்களுக்குச் சென்று பிரார்த்த னையில் ஈடுபட்டதைக் காணக் கூடிய தாக இருந்தது.
கல்முனையில் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் மாமாங் கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்தனர்.
மட்டக்களப்பில்
அன்னை பூபதியின் 16ஆவது ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி மட் டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு கள் மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றி லில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்க ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பாடசாலை மாணவர் களும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் புலிக்கொடி ஏற்றப்பட்டது டன், பொதுச்சுடர், ஈகச்சுடர் என்ப னவும் ஏற்றப்பட்டன.
உண்ணாவிரத நிகழ்வு நடை பெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை மாவட்டத்தின் பல இடங்களிலிருந் தும் ஊர்வலங்களும் சென்றடைந்தன.
நேற்று ஆரம்பமான அடையாள உண்ணாவிரத நிகழ்வு ஒருமாத காலம் நடைபெறும் எனத் தெரிவிக் கப்படுகிறது. நிகழ்வுகளில் விடுத லைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணாவுக்கு ஆதரவான சுலோக அட் டைகளைச் சிலர் தாங்கியிருந்தனர்.
Aalavanthan Wrote:ம்.. ம்.. சக்தி ரிவியிலை நிஜமான காட்சிகள் காட்டுறாங்கள்Mathivathanan Wrote:Eelavan Wrote:எது மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களால்,மக்களுக்காக நடத்தப் படுகின்றதோ அது உரிமைப் போராட்டம் எது தனிப்பட்டவரின் நலனுக்காக மக்களை மிரட்டி நடத்தப்படுகிறதோ அது அடக்குமுறைப் போராட்டம்ஓமோம் போராட்டம் எப்பிடி நடக்கிறதென சக்தி ரிவியில் இன்றும் காட்டினார்கள்.. இரண்டுநாளுடன் பிசுபிசுத்துப்போன போராட்டத்தை உள்ளதை உள்ளபடி காட்டினார்கள்..
அதுசரி தாத்தா கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலே எப்போது பலாலிப் பாதை திறந்தார்கள்
விடுமுறையில் தெற்கு செல்லும் இராணுவத்தினரை விமான மார்க்கமாக கொண்டு செல்வது செலவும் சிரமமும் கூடியதால் தரை மார்க்கமாக கொண்டு செல்ல விடுதலைப் புலிகளிடம் அனுமதி வேண்டப்பட்டதும் ஆயுதங்களுடன் பயணம் செல்வதைத் தவிர்த்தால் அனுமதிக்கலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்ததும் பாதுகாப்பு இல்லை என்று இராணுவம் கைவிட்டதும் செய்திகளாக வந்தனவே பார்க்கவில்லையா
மற்றது மட்டக்களப்பு மாவட்டத்தினதும் திருகோணமலை மாவட்டத்தினதும் எல்லைப் பகுதி இன்னமும் புலிகளிடம் தான் உள்ளது
உள்ளே போவதற்கு இராணுவப் பாதுகாப்பு என்பது தேவையா?
ஒவ்வொருமுறையும் புலிகள் இரானுவப்பிரதேசத்துக்குள் ஆயுதமில்லாமல் செல்வதற்குக்கூட அனுமதி வேண்டுகிறார்கள் என்ற உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்..
இராணுவம் தங்களது போராளிகளை விடுமுறைக்கு அனுப்பும்போதுகூட (உலங்கு) ஹெலியை உபயோகிக்கும்போது உங்கள் கூற்றுக்களுக்கு வலிமை இல்லையென்பது எனக்குநன்றே தெரியும்..
சிவில் உடையில் சிலர் போய் வருகிறார்கள் அத வேறுவிடயம்.. அதற்கு அனுமதி தேவையில்லை..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஏன் TBC வானொலியில் <b>படம்</b> காட்டுகின்றார்களே. பார்க்கவில்லையா.
அதுசரி உங்கள் தோழர் ராம்ராஜு் மட்டக்களப்பிலாம் உண்மையா?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

