03-20-2004, 12:07 AM
Manithaasan Wrote:விமர்சனம் என்பது குறை நிறை இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தால் மட்டுமே விமர்சன கலையாகும். திட்டி தீர்த்து மட்டம் தட்டுவதும் ஆகh ஓகோ... அபாரம் அற்புதம் என இல்லhததைச் சொல்லி <span style='color:red'><b>முதுகு சொறிவதும்வதும் விமர்சனம் ஆகாது. </b>நாற்பது ஆண்டுகளாக ஈழவர் திரைக்கலை குழந்தையாகவே இருக்கிறது என்பது உண்மை. அதற்கு பொறுப்பாளிகள் படைப்பாளிகள் மட்டுமா?
உங்களைப்போன்ற அரைவேக்காடு விமர்சகர்களும்...இத்தகைய விமர்சனங்களை நம்பியோரும்,இவங்கள் என்ன செய்யப் போறாங்கள் என பார்க்காமலே ஆதரவு தர மறுக்கும் எமது ரசிகர்களும் பொறுப்பாளிகள். இல்லையெனச் சொல்ல உங்களால் இயலுமா?</span>
[size=15]நன்றி மணிதாசன்
நான் தேசத்தில் உள்ள விமர்சனத்துக்கு பதில் அளிக்வேயில்லை. காரணம் அழியாத கவிதையைத் தவிர அடுத்த எந்தவொரு படைப்பையும் நான் முழுமையாக பார்க்கவில்லை.
அடுத்து தேசத்தின் விமர்சனமே குளறுபடியும் சிறுபிள்ளைத்தனமுமான விமர்சனம்.
சினிமா விமர்சனம் எழுதுவதற்கு ஒரு முறையிருக்கிறது.தேசத்தில் எழுதப்பட்டிருக்கும் விமர்சனம் வேலை வெட்டியற்றவர்கள் ஊர்த் திண்ணைகளிலும் பாதையோர பாலங்களிலும் இருந்து வம்பபளப்பவர்களின் தரத்திலானது. இப்படியான எண்ணங்களை உங்கள் கருத்து என்று வேண்டுமானால் நேரடியாக உரியவர்களிடம் கூறுங்கள் அல்லது கருத்தரங்குகளில் முன் வையுங்கள். அவற்றுக்கு பதில் கிடைக்கும். கலைஞர்களும் சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள்.
அதைவிடுத்து மேதாவி போல் சினிமா விமர்சனம் என்ற பெயரில்
<b>தனியாக சட்டத்தரணியிடம் செல்கிறார்.கடற்கரைக்கு செல்கிறார்.கதவை தட்டியதும் அவரே திறந்து பதிலளிக்கிறார்.........................</b>
என்று எழுதியிருப்பதைப் பார்த்தால் 3ம் 4ம் வகுப்பு குழந்தைகள் எழுதிய கட்டுரை போல் இருக்கிறது.
:?: ஊரிலிருந்து லண்டன் வரை வந்த ஒரு மனிதனால் லண்டனில் உள்ள ஒரு இடத்துக்கு தனியாக போக முடியாதபடி ஏதாவது தடுப்புச் சட்டம் இருக்கிறதா?
:?: இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழருக்கு ஆங்கிலம் தெரியும். எனவே இது ஒரு பாரிய பிரச்சனையா?
:?: ஒருவர் கதவை தட்டினால், கதவை திறக்கக் கூடாதா?
(ஒரு சிலர் தொலைபேசியையே எடுப்பதில்லை. யார் என்ற குரல் தெரியும் வரை இருந்து விட்டு, பின்னர்தான் தொலைபேசியையே எடுப்பார்கள். இவர்களுக்கு ஒரு முதியவர் கதவைத் தட்டியதும், திறப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான்?)[/color]
தயவு செய்து உங்கள் நிலையிலிருந்து அடுத்தவர்களைப் பார்க்காதீர்கள். லண்டனில் உள்ளவர்களை விட நன்றாக ஆங்கிலம் மட்டுமல்ல எத்தனையோ வேற்று மொழிகளை சரளமாக பாவிக்கும் பலரை நான் இலங்கையில் கண்டிருக்கிறேன்.
உங்களைப் போல் மற்றவர்களையும் கிணற்றுத் தவளையாக நினைக்காதீர்கள்.:!: எந்த ஒரு விடயத்தை விமர்சிப்பதற்கும் அதற்கான தகுதி இருக்க வேண்டும்.அப்படியில்லாதவிடத்து மௌனமாக இருப்பதே சாலச் சிறந்தது.
hock: ஐரோப்பாவில் பலர் இப்படைப்புகளைப் பார்த்திருக்கிறார்கள்.ஐரோப்பிய புலம் பெயர் கலைஞர்கள் இங்கு பங்கு கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களது கருத்துகள் முதலில் வரட்டும் என்றே விமர்சனத்தை இடம்பெற வைத்தேன். <b>எனது பதிலை வெகு விரைவில் தருகிறேன்.</b>:roll: மணிதாசன் உங்களுக்கு விபரம் தெரிந்தால் குமுறுபவர்கள் யார் என்பது புரியும்?
எனது பட்டறை படங்ளை வைத்து புலம் பெயர் திரைக்காவலர் பட்டம் வாங்கியவர் எழுதிய அரை வேக்காடு விமர்சனத்தை ஏற்க வேண்டுமென்று பட்டம் கொடுத்தவர் குமுறுகிறார்.
நியாமானதுதான்?.
:twisted: ஒருவருடைய குழந்தையை, வேறு ஒருவருடைய குழந்தை என்று அடையாளம் காட்டுவது போல, யாருடைய படைப்பென்றே இனம் கண்டு கொள்ள முடியாமல் ,கண்ணிருந்தும் குருடர்கள் போல் விமர்சனம் செய்தவர்கள், தம்மை முதலில் திருத்திக் கொள்ளட்டும்.
நெற்றிக் கண் சுட்டினும் குற்றம் குற்றமே என்று ,சாம்பலாகி நிலைத்த நக்கீரர் மத்தியில் ,குறைக்கு ஏற்றாற் போல பரிசுத் தொகையை கேட்கும், தருமிகள் போன்ற , வணிக சுயநல விமர்சகர்களும் எம்மோடு இல்லாமலில்லை.
hock: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பது போல, இவரது அனைத்து கட்டுரைகளையும் , விமர்சனங்களையும் இது போலவே எடுத்துக் கொள்ளலாம்.______________________________________________________________________________________________ AJeevan

