03-19-2004, 08:58 PM
உண்மையான ஒரு உழைப்பாளிக்கு ஓய்வு என்பது மரணம் தான். ஊரில் 55 வயதில் பென்சன் . அதனை மேலதிகமாக கேட்டு சேவை செய்வதை காணமுடிகிறது.( அறுபது வயது வரை) என்ன இங்கு 65 வயது வரை. மனது இடம் கொடுத்தால் 65 வயதென்ன 70 வயதிலும் வேலை செய்யலாம்.எம்மில் பலர் இப்போது வாழ்க்கையை அனுபவியாது பென்சன் எடுத்துவிட்டு அனுபவிக்கலாம் என நினைத்து வாழ்க்கைக்காலத்தை துன்பமாக்கிவிடுகிறார்கள்.இப்போதைய வாழ்க்கை காலத்தை சந்தோசமாக்க முடியாதவர்களால் பென்சன் காலத்தில் சந்தோசமாக்கிவிட முடியுமா? அப்போது மரணபயம் வந்து தொல்லை தருமோ என்னவோ? பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மனசு துடிக்குமோ? யார் அறிவார்?
இன்றய நாளை இனிதாக வாழ்தலே நன்று.ஊன உணர்வுகளை துடைத்தெறிந்து வாழுதலே வாழ்க்கையின் பண்பு.( இனவெறி மொழிவெறி(துவேசம் வெள்ளையனுக்கு இல்லையொ இருக்கொ தெரியேலை ஆனா நம்மவரிடம் தாராளமாகவே தாள்வு மனப்பான்மை கொட்டி குவிந்து கிடக்கு.)

[b]Nalayiny Thamaraichselvan