03-19-2004, 01:24 AM
[b]பிரதேசவாத 'நச்சுத்தனத்துக்கு" எதிராக குரல் கொடுப்பது கிழக்கு புத்திஜீவிகள், மக்களின் கடமை.
இலங்கையில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் அமிர்தலிங்கம் வரை சாத்வீக முறையில் முன் வைக்கப்பட்ட தமிழர்களுக்கு கூடிய அளவு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென்கிற நியாயமான கோரிக்கைகள், சிங்கள சமூகத்தினரால் நிராகரிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக உலகம் காணாத வகையில் தமிழர்கள் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டுவரை இனக்கலவரங்கள், இனப் படுகொலைகள் தமிழர் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தமிழருக்கெதிரான பாரபட்சங்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டனர். தமிழ் இளைஞர்கள் இவ்விதமான கொடூரங்களை இனிமேலும் பொறுக்க முடியாதென்ற காரணத்தினால், ஆயுதம் ஏந்தி விடுதலை பெற வேண்டுமென்ற நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த விடுதலை இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமை தாங்கினார்.
1983 முதலே அரச படைகளுக்கு எதிராகச் செயல்பட்டாலும், 1983 இலிருந்து 2001 வரை ஆரம்பகட்டத்தில் கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு பின்பு மரபுவழி யுத்தத்தில் பாரிய வெற்றிகளைப் பெற்றனர். இதன் பயனாக இன்று வடகீழ் பிராந்தியத்தில் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் 63மூ வீதம் நிலப்பரப்பு இருக்கின்றது. பிரபாகரனின் கட்டுப்பாட்டு பகுதியில் நடைபெறும் நிர்வாகத்தை பயங்கரவாத ஆட்சியென்று ஆரம்பத்தில் சொன்னாலும் இன்று சர்வதேச மட்டத்தில் சகல ராஜதந்திரிகளும் கிளிநொச்சிக்கு சென்று வருகிறார்கள். இந்தக் கட்டுப்பாட்டுப்பகுதியில் மத வேறுபாடுகளுக்கு இடமில்லை. எல்லா மதங்களையும் ஒரே தராசில் தான் வைத்து மதிக்கின்றனர். உயர்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதி என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரதேசவாதம் அல்லது பிரிவினை வாதம் போன்றவைக்கு இடமில்லை. புலிகளின் நிர்வாகத் துறையில் தகுதி ஒன்று தான் அளவு கோலாகக் கணிக்கப்படுகின்றது.
இந்தக் கொள்கைகள் மிகவும் போற்றத்தக்க கொள்கைகள். மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா என்பவர் இந்த புலிகள் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து பிரபாகரனுடைய மதிப்பையும் பெற்றுவிட்டார். அவர் தமது திறமையை வெளிப்படுத்திய காரணத்தினால், பிரபாகரன் அவரில் நம்பிக்கையை வைத்திருந்தார். காலப்போக்கில் கருணா தனது திறமைகளைக் காட்டி பிரபாகரன் வைத்திருந்த நம்பிக்கைக்கு படுமோசடி செய்துவிட்டார்.
கருணாவினுடைய ராஜத்துரோக செயல்பாடுகளையும், அதனுடைய சர்வதேச தாக்கங்களையும், விளைவுகளையும் அநேக கோணங்களிலிருந்து அலசுவது அவசியம். அவர் செய்த ராஜதுரோகத்தை சொல்வதென்றால் குர்;லிங் அல்லது காக்கை வன்னியன் அல்லது எட்டப்பன் அல்லது கதிர்காமர் முதலியவர்களுடைய செயல்பாடுகளை விட ஆயிரம் மடங்கு நச்சுத்தன்மையும் துரோகத்தன்மையும் கொண்டதாகும்.
இராணுவ ரீதியாகவும், இராணுவ கோணங்களிலிருந்தும் கருணாவின் துரோகத்தை அலசுவது அதிமுக்கியம். விடுதலைப்புலிகளின் அமைப்பு ஒரு இறுக்கமான இராணுவ அமைப்பு. இந்த அமைப்பில் இணைந்தவர்கள் சத்தியப் பிரமாணங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. இதன் பிரகாரம் விடுதலைப்புலிகளின் தலைவருடைய கட்டளையை எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தச் சூ ழ்நிலையிலும் செயல்படுத்துவேனென்று சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இராணுவ விதிகள், இராணுவக் கட்டுப்பாடுகள், இராணுவக் கோட்பாடுகள் எல்லாம் தெளிவாக இருக்கின்றன.
கருணா சகல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கோட்பாடுகளையும் உதறித்தள்ளிவிட்டார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கருணாவை தன்னை வந்து காணும்படி உத்தரவு கொடுத்தும், கருணா அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. இந்த ஒரு குற்றத்துக்கே இராணுவ விதிகளின் படி, அவரை பதவி நீக்கம் செய்து அவரை கைது செய்திருக்க முடியும். கருணா பிரபாகரனை தனது தெய்வமாகக் கருதுகிறேனென்று கடிதம் எழுதினாலும் அதே தினத்தில் அவருடைய கையாட்கள் மட்டக்களப்பில் பிரபாகரனுடைய படத்தை எரித்தார்கள். இந்த விடயம் அவருக்குத் தெரியாமலிருக்க முடியாது.
தமிழ்த் தேசியத் தலைவனாகிய பிரபாகரனுடைய படத்தை சிங்கள சமூகமோ, அல்லது முஸ்லிம் சமூகமோ இதுவரை எரிக்கவில்லை. ஆனால், மட்டக்களப்பில் அவருடைய படம் எரிக்கப்பட்டது. அது அவருடைய படத்தை மட்டுமல்ல தமிழ்த் தேசிய படத்தை எரித்ததற்கு ஒப்பானது. இந்தப் படத்தை எரித்த விர்மிகள் கருணாவினுடைய கையாட்கள்.
கருணாவின் துரோக நாடகத்திலிருந்து சில உண்மைகள் நன்கு வெளிப்பட்டுவிட்டன. அவர் மூ ன்று முக்கிய துறைகளுடைய தலைவர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார். அவையாதெனில், நிதித்துறைப் பொறுப்பாளர், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், காவல்துறைப் பொறுப்பாளர். கரிகாலன் கொடுத்த பேட்டியிலிருந்து இதற்கான சகல விடயங்களும் வெளிவந்துவிட்டன.
கருணா, நீதியான, நேர்மையான விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சிங்கள இராணுவத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு புறம்பான அந்தஸ்து வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இதிலிருந்து சிங்கள இராணுவத்தின் மீது தான் இவருக்கு அதிக பாசம் உள்ளதென்பது வெளிப்பட்டுவிட்டது. இவர் பத்திரிகைகளுக்கு கொடுத்த அறிக்கைகளிலிருந்து தனக்கு சுதந்திர தமிழ் ஈழத்தில் நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல கிழக்கு மாகாணம் தமிழ்பேசும் மாகாணமாகத் தான் கருதவில்லையென்றும் சொல்லிவிட்டார்.
கருணாவின் துரோகத்தன்மைக்கு சிங்கள ஆங்கில நாளேடுகள் நல்ல ஆதரவு கொடுக்கின்றன. இதனுடைய மர்மம் என்ன என்பது தான் முக்கிய கேள்வி?
சிங்கள ஆங்கில நாளேடுகளை விட தமிழ்நாட்டு பிராமணித்துவ ஊடகப்பத்திரிகைகள் மகிழ்ச்சிகரமாக கருணாவுக்கு ஆதரவு கொடுக்கின்றன. இதிலிருந்து நாம் அறியக்கூடியது யாதெனில் பிரபாகரனை வீழத்துவதில் தெற்கு இலங்கை இனவாத சக்திகளும் தமிழ்நாட்டு பிராமணித்துவ ஊடகங்களும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. ஆகவே, மிகவும் கடும் போக்கான சிங்கள கட்சிகள் கருணாவுக்கு ஆதரவு கொடுக்கின்றன. யுத்தமொன்று வெடித்தால் கருணாவும் அவர்களுடைய கையாட்களும் சிங்கள இராணுவத்துடன் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்பதற்கு ஒருவித ஐயமுமில்லை.
கருணாவுக்கு இனிமேல் சிங்கள அரசியல் கட்சிகளும், சிங்கள இராணுவமும் மறைமுக உதவி செய்யக் கூடும், விடுதலைப்புலிகளுக்கெதிரானதமிழ் குழுக்களுக்கு எவ்விதம் சிங்கள அரசாங்கங்கள் உதவி செய்கின்றனவோ அவற்றை விட அதிகபட்சமாக கருணாவுக்கு சகல விதமான உதவிகளும் செய்யக் கூடும். இராணுவ உதவியும் செய்வதற்கு வாய்ப்பு உண்டு. வெளிநாட்டுச் சக்திகளைப் பொறுத்தவரை இந்தியாவும், அமெரிக்காவும் தான் இதில் ஈடுபட வாய்ப்புக்கள் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை, பிராமணித்துவ ஊடகத்துறை நிலைப்பாடு தெட்டத்தெளிவாக இருக்கின்றது. இந்த ஊடகத்துறையினர் விடுதலைப்புலிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் அழிக்கப்படவேண்டுமென்று பகிரங்கமாகச் சொல்லுகிறார்கள். இவர்களுடைய நிலைப்பாட்டுக்கு மத்திய அரசின் புலனாய்வுத்துறையினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்களென்பது சகலருக்கும் தெரிந்த விடயம்.
புலனாய்வுத் துறையினர் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சகலவிதமான ஆதரவுகளையும் வழங்குகின்றார்கள் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இதன் பயனாக கிழக்கு மாகாணத்தில் புலிகளுடைய ஆதிக்கத்தை குறைத்து விடலாமென்று எண்னுகின்றார்கள்.
இந்திய மத்திய அரசு இலங்கையில் ஏப்ரல் 2 ஆம் திகதி நிகழப்போகும் பொதுத் தேர்தலை விரும்பவில்லை என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். ஏனெனில், வடகிழக்கில் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினைந்திலிருந்து இருபத்திரண்டு ஆசனங்கள்வரை பெற்றுவிடுமென்ற பீதி, இதன் விளைவாக புலிகளுடைய சர்வதேச அந்தஸ்து இன்னும் உயர்ந்துவிடும் என்ற ஒரு அச்சம். புலிகள் தான் தமிழருடைய ஏகப்பிரதிநிதிகள் என்பதும் ஒரு காரணமாக இருக்கும். ஆகவே இந்தத் தேர்தலை குழப்பி அடிப்பதற்கு கருணாவுக்கு ஆதரவு கொடுத்தால் புலிகளுடைய இராணுவ ஆதிக்கமும் அரசியல் ஆதிக்கமும் சர்வதேச மதிப்பும் நன்கு குறைந்து விடும் என்று இந்திய புலனாய்வுத்துறையினர் பகற்கனவு காண்கின்றார்கள்.
கருணாவினுடைய நிலைப்பாடு வெற்றிபெற்றால் மட்டக்களப்பு மண்ணும் அம்பாறை மண்ணும் சிங்கள ஆதிக்கத்துக்குள் அகப்பட்டுவிடும். ஆகவே இதை தவிர்ப்பதற்கு அம்பாறை, மட்டக்களப்பு மக்கள் கருணாவினுடைய பிரதேசவாத நச்சுத்தன்மைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
இது மட்டக்களப்பு, அம்பாறை புத்திஜீவிகளின் முக்கிய கடமை. இவ்விதம் புத்திஜீவிகள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தாவிடில் மட்டக்களப்பு அம்பாறை சிங்கள பிரதேசமாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நன்றி : தினக்குரல்.