03-18-2004, 10:45 AM
நல்லது நண்பனே எனக்கு புதுக் கவிதை மரபுக் கவிதை இரண்டுமே பிடிக்கும்
மரபுக் கவிதையை பண்டிதத் தமிழ் என்று வெறுமனே ஒதுக்கி விடாதீர்கள் புதுக் கவிதைக்கு நிகராக ஏன் அதற்கு மேலான சுவை மரபுக் கவிதையில் உண்டு
முக்கியமாக எனக்குப் பிடித்தது வெண்பா அதன் இலக்கண இலக்கியங்களை களத்தில் விரிவாக எழுத ஆசை எனக்கிருக்கும் புலமையோ சிறு துரும்பு நேரமோ அதனிலும் குறைவு
எனவே இவற்றை நிவர்த்தி செய்து கொண்டுவிரைவில் அனைவருக்கும் விளங்கும் வகை அவற்றைத் தருகின்றேன்
கவிதை கேட்டாய்,
கொடுக்கலாம்..
ஆனால்,
தலைப்பு?
யோசிப்போம்.
மனது...
அசை போட,
ஒத்துவராத எழுத்துகளை
கை...
கிழித்துப் போட்டது,
இயற்கை...
ஊகூம்.
காதல்....
நிறைய எழுதியாயிற்று.
மனிதர்...
ம்ம்.
ஏன்?
மனதில் தோன்றியவை...
இதையே தலைப்பாக்கினால்.
ஆகா!!!
தலைப்புக் கிடைத்துவிட்டது.
எழுதிவிடுவோம்,!
பேனாவை எடுத்தால்..
ஒன்று உறைத்தது!!!
மனம் தான்
கசங்கிக் கிடக்கிறதே....
தலைப்பு வராமல்,
நான்!!
கசக்கிப் போட்ட
காகிதத் தாள்கள் போல!!!

\" \"