03-17-2004, 01:35 AM
Quote:மற்றும் தாயக கல்விசூழல் பிள்ளைகளை குழப்பவில்லை அவர்களை வழிநடத்தும் பெற்றோர்களை குழப்புகின்றது. ஏன் என்றால் அவர்கள் தாயக கல்விசூழலில் கல்வி கற்றவர்கள் தானேதவறான வழிநடத்தலுக்கு பெற்றோர் சென்றுவிட சந்தர்ப்பம் மிகவும் அரிது. ஆகக் குறைந்தது 3 மாதத்துக்கு ஒருமுறையாவது ஆசிரியர்கள் பெற்றோரை வரவழைத்து உரையாடுகிறார்கள். குறையுள்ள பிள்ளைகளை வேறு விசேட பாடசாலைக்கு அனுப்புகிறார்கள் அல்லது மருத்துவ மனோதத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறார்கள். ஆகவே, சாப்பாட்டைப்போல பிள்ளைகளுக்கு தமது இஸ்டங்களைக் கல்வியில் திணிக்க பெற்றோர்களுக்கு சந்தர்ப்பமில்லை.
.

