03-16-2004, 10:14 PM
sOliyAn Wrote:அப்படி இங்கே இல்லை.. பாடங்களில் சராசரியாக 3 புள்ளிகள் பெற்றால் அந்த மாணவன்'ஜிம்னாசியம்' என்ற பிரிவுக்கு தகுதியாகிறான்.. இங்கே மொழி முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. நான் தெரிய சராசரியாக 1 தொடக்கம் 2 புள்ளி பெற்ற எத்தனையோ மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. ஒரு மாணவனுக்கு.. அவர் தானாக படித்திருக்க முடியாது.. மேலதிகமாக 'ரியூசன்' எடுத்திருக்க வேண்டும்.. அதனால் அனுமதிக்க முடியாது எனக் காரணம் கூறப்பட்டுள்ளது.. இன்னொருவருக்கு 'நீர் தொடர்ந்து படிக்க உமது பொருளாதாரம் இடம் கொடுக்காது.. அதற்கு உத்தரவாதமில்லை' என்று கூறப்பட்டுள்ளது.. இப்படி நொண்டிக் காரணங்கள் பற்பல. ஆகவே, மேலெழுந்தவாரியாக பெற்றோர்களை குறைகூற முடியாது.. அதுவும் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அக்கறையாகவே உள்ளார்கள்.
ஜெர்மன் கல்விமுறை கொஞ்சம் சிக்கலானது தான். அதுவும் பிரித்தானிய கல்விமுறையை பின்பற்றுகின்ற எங்கள் நாட்டில் இருந்து அங்கு சென்றவர்களுக்கு அந்த கல்விமுறை இன்னும் சிக்கலாக தெரியும். மொழி நன்றாக தெரியாதுதான் முதல் பிரைச்சனை. பெற்றோர்களால் அந்த கல்விமுறையை சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை.
ஜெர்மன் கல்விமுறையில் நிறைய நல்ல விடயங்களும் இருக்கின்றன, அது ஒரு தொழில்நுட்ப நாடு என்பதால் அவர்களது கல்விமுறை தொழில் கல்வியை அடிப்படையாக கொண்டது. எந்த வேலை செய்தாலும் அதை முறையாக கற்பித்து ஒரு சான்றிதழ் கொடுத்து சரியான வழிமுறையில் செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள். அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா போல இல்லாமல் அவர்களுடையது இலவச பல்கலைக்கழக கல்வி.
ஆரம்பத்தில் பிள்ளைகள் பாலர் பாடசாலைக்கு (Kindergarten) செல்கின்றார்கள். இது மூன்று வயதிலிருந்து ஐந்து வயதுவரை. அதற்கு பின்பு ஆரம்ப பாடசாலை (Grundschule). இது இது ஆறு வயதிலிருந்து ஒன்பது வயதுவரை. இந்த ஆரம்ப நிலைக்கு அப்புறம் இடைநிலையில் சோழியன் சொன்ன ஜிம்னாசியம் (Gymnasium) தவிர இன்னும் Gesamtschule, Realschule,Hauptschule போன்ற இடைநிலை பாடசாலைகள் இருக்கின்றன. ஆரம்ப பாடசாலையில் பெற்ற புள்ளிகளையும் ஆசிரியரின் பரிந்துரையும் வைத்துதான் பத்து வயதில் எந்த இடைநிலை பாடசாலைக்கு பிள்ளை செல்லலாம் என்று தீர்மானிக்கின்றார்கள். அப்படி தீர்மானிக்கும்போது பெற்றோர் ஆலோசனையும் கேட்பார்கள். பிள்ளையின் ஆற்றலுக்கு ஏற்ற வகையில் பாடசாலையை தீர்மானிப்பது நல்லது தானே. மெதுவாக கிரகிக்கும் தன்மையுள்ள் ஒரு பிள்ளை வேகமாக கற்பிக்கும் பாடசாலைக்கு சென்றால் அந்த பிள்ளைக்கு தானே கூடாது? அதிக புள்ளிகள் பெற்றவர்கள் ஜிம்னாசியம் பாடசாலைக்கு செல்லலாம். நமது இலங்கை தமிழர்கள் எல்லாம் தமது பிள்ளை ஜிம்னாசியம் பாடசாலைக்கு செல்லவேண்டும் இல்லை என்றால் படிப்பே இல்லல என்று நினைக்கின்றார்கள். அங்குதான் தவறு நிகழ்கின்றது. பாடசாலையை பிள்ளையின் திறனை வைத்தே தீர்மானிக்கவேண்டுமே தவிர பெற்றோர்களின் சுய விருப்பு வெறுப்பை வைத்து அல்ல. ஜிம்னாசியம் பாடசாலைக்கு போகாவிட்டால் வேலை கிடக்காதா இல்லை தொழில் கல்விதான் பெறமுடியாதா? அந்தந்த தகுதிக்கு ஏற்றவாறு வேலை கொடுக்கின்றார்கள் தானே? அப்புறம் அந்த கல்விதிட்டத்தில் என்ன பிரைச்சனை?
குறிப்பு - எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன். தவறு இருந்தால் திருத்துங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

