03-16-2004, 09:35 PM
thampu Wrote:மோகன் Wrote:வணக்கம்,அன்பர் மோகன்
சமீப நாட்களாக யாழ் இணையத்திற்கு மிகப்பெரும்தொகையானேரின் வருகையினால் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிவந்தது. அதாவது தளத்தின் பாவனை அளவினைவிட மேலதிகமாக பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சில மாற்று நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
சிலமேலதிக update செய்ய வேண்டியுள்ளதால் அடுத்து வரும் சில நாட்களில் சில தற்காலிகத்தடைகள் வரலாம் என்பதையும் முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றோம்.
தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யாழ் இணைய தளத்தில் களமாடிகளின் வரவு அண்மைக்காலங்களில் அதிகமாய் இருப்பது கண்டு பேர் உவகை கொள்ளும் உள்ளங்களில் நானும் ஒருவன்.
உங்களுக்கென ஒரு பார்வை ஒவ்வொரு விடயத்திலும் இருக்கலாம்...ஏன் ....இருக்கவும் கூடும்..... அது யதார்தமானதே.
இருப்பினும் களத்தில் கருத்து மோதல்கள் வரும் போது [b]''காய்தல் உவர்தல்''இன்றி யாழ் தளம் இயங்க வழிகோலிவீர்கள் எனில் காலம் கடந்தும் உங்கள் இணைய தளம் பேசப்படும்: உங்கள் அணுகுமுறை மற்றைய தளங்களுக்கு தலைமைதாங்கும்.
தமிழில் ஒரு ஆரோக்கியமான கருத்துக் களம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு உங்கள் கைகளில் கருவுற்றுருப்பது ஒரு வரலாற்றுப்பதிவு.
அது என்ன ''காய்தல் உவர்தல்'' ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

