03-16-2004, 08:18 PM
sOliyAn Wrote:அங்கே வாழ்ந்த பல பென்சனியர்மார் தாயகத்தில் வந்து வாழ்ந்ததையும் அறியலாம். மற்றும் அந்த நாடுகளில் சட்ட திட்டங்கள்... வாழ்க்கைமுறைகள் ஓரளவாவது பொருந்தக்கூடியது. ஆனால் மேற்குலக நாடுகளின் போக்கு அப்படியல்ல.. மற்றும் பெரும்பாலான தமிழர்கள் 83க்கு பிறகு கல்வி வேலை வாய்ப்புக்காக இடம்பெயரவில்லை. இருப்பைப் பாதுகாக்கவே இடம்பெயர்ந்தார்கள். அவுஸ்ரேலியாவில் வெள்ளையர்கள் அந்த நாட்டுக்கு உரிமையுள்ளவர்களாக வாழுகிறார்கள். ஆனால் தமிழர்கள்?!
நீங்கள் சொல்லும் பென்சனியர்மார் திரும்பி வந்தது காலை ஆட்டிக்கொண்டு வெளிநாட்டு பவிசையும் காட்டிக்கொண்டு இருந்து சாப்பிடுவதற்காக. இன்றைக்கு பிரைச்சனை தீர்ந்தால் எவ்வளவு மக்கள் திரும்பி வருவார்கள் என்று சொல்கின்றீர்கள்? வெகு சிலராகத்தான் இருக்கும். மற்றவர்கள் வயசு போக போய் இருக்கத்தான் வேணும் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். 83க்கு பின்பு புலம் பெயர்ந்தவர்கள் எல்லாருமே உயிருக்காகதான் புலம் பெயர்ந்தார்கள் என்று சொல்லமுடியாது. ஆரம்பத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். நாள் செல்ல செல்ல எல்லாம் வசதி வாய்ப்புக்களை தேடித்தான். முதலாவது இரண்டாவது சந்ததி எப்போதும் புலம் பெயரந்த இடத்தில் பிரைச்சனைகளை சந்திக்கும் அடுத்த சந்த்தியுடன் அவர்கள் அந்த நாட்டிலேயே ஐக்கியமாகி விடுவார்கள். இப்பொது அவர்கள் நடந்து கொள்ளும் முறை எப்படி இருக்கின்றது என்று நினைத்து பாருங்கள்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

