03-16-2004, 06:14 PM
அப்படி இங்கே இல்லை.. பாடங்களில் சராசரியாக 3 புள்ளிகள் பெற்றால் அந்த மாணவன்'ஜிம்னாசியம்' என்ற பிரிவுக்கு தகுதியாகிறான்.. இங்கே மொழி முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. நான் தெரிய சராசரியாக 1 தொடக்கம் 2 புள்ளி பெற்ற எத்தனையோ மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. ஒரு மாணவனுக்கு.. அவர் தானாக படித்திருக்க முடியாது.. மேலதிகமாக 'ரியூசன்' எடுத்திருக்க வேண்டும்.. அதனால் அனுமதிக்க முடியாது எனக் காரணம் கூறப்பட்டுள்ளது.. இன்னொருவருக்கு 'நீர் தொடர்ந்து படிக்க உமது பொருளாதாரம் இடம் கொடுக்காது.. அதற்கு உத்தரவாதமில்லை' என்று கூறப்பட்டுள்ளது.. இப்படி நொண்டிக் காரணங்கள் பற்பல. ஆகவே, மேலெழுந்தவாரியாக பெற்றோர்களை குறைகூற முடியாது.. அதுவும் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அக்கறையாகவே உள்ளார்கள்.
.

