Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனிமேஷன்
#1
ஐந்து நிமிடத்தில் அனிமேஷன் கற்றுக்கொள்ளுங்கள் .. !

அனிமேட்டிங் படங்கள் உங்களின் இணையப்பக்கத்துக்கு ஒரு கவர்ச்சியை அளிக்கின்றன என்றால் அது மிகையாகாது.. அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களைவிட மனிதனின் கவனத்தைக் கவரும் என்று உளவியல் கூறுகிறது.. அத்தகைய அனிமேட்டிங் படங்கள் செய்வது பற்றி மிகச்சுருக்கமாகப் பார்க்கலாம் ...

1.அனிமேட்டிங் செய்ய முதலில் நமக்குத் தேவை தனித்தனிச் சட்டங்கள்(frames).. அதாவது படங்கள்.. உங்களுக்குத் தேவையான படங்களை நீங்களே தயாரித்துக்கொள்ளலாம்.. அல்லது www.google.com - ல் image search பயன்படுத்தித் தேவையான படங்களை எடுத்து அல்லது "paint" போன்ற ஏதாவது ஒரு மென்பொருளில் வரைந்து,வெட்டி, ஒட்டி...... உருவாக்கிக் கொள்ளுங்கள்... படங்கள் எந்த வரிசையில் இயங்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வரிசையில் முதலில் பெயர் கொடுத்துக்கொண்டீர்களானால் வசதியாக இருக்கும் .. எடுத்துக்காட்டாக .. 1.jpg , 2.jpg , 3.jpg .....

2.சரி.. இப்போது தனித்தனிப் படங்களைத் தயாராக வைத்துக்கொண்டுவிட்டோம்..அடுத்ததாக அந்தப் படங்கள் அனைத்தையும் ஒரே பைலாக விரும்பிய வரிசையில் தைக்க வேண்டும்.

3.பின்னர் ஒரே படமாகத் தைத்த பைலை இயங்குகின்ற gif பைலாக மாற்றவேண்டும்..
அவ்வளவுதான் இப்போது நீங்கள் இயங்கும் gif படம் செய்துவிட்டீர்கள்.....

இப்போது நம் அனைவருக்கும் வருகின்ற சந்தேகம்... பல படங்களை எப்படி ஒரே படமாகத் தைப்பது? .. அதனை எப்படி இயங்கும் gif பைலாக மாற்றுவது? என்பதுதான்... இதைப்பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப் படவேண்டாம்.. இந்த வேலையை செய்ய உங்களுக்கு நிறைய மென்பொருட்கள் உள்ளன.. அதில் எளிமையான ஒரு மென்பொருளை நீங்கள் இணையத்திலிருந்து இறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்... இதற்காக நிறைய மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கிறது... அவற்றில் ஒன்று "அனிமேட்டர்9" என்பது. இது இந்த இணைப்பில் இலவசமாய்க் கிடைக்கிறது..

http://www.vvcool.com/animator9/download/animator.exe

அந்தக் கோப்பை இறக்கி உங்களின் கணினியில் சேமித்துப் பின்னர் அதன்மேல் இருமுறை கிளிக் செய்தீர்களானால் எந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கேட்கும்.. இடத்தைத்தேர்வுசெய்து நிறுவிக்கொள்ளுங்கள்.. இந்த பைலின் அளவு 500 KB க்கும் குறைவுதான்...

இந்த "animator9" மென்பொருளைப் பயன்படுத்துவது மிகவும் எளிது... இதிலுள்ள "stitch" என்ற பட்டனைத் தட்டி உங்களின் படங்களைத் தேவையான வரிசையில் தேர்வு செய்து "done" என்ற பட்டனைத் தட்டி அனைத்தையும் ஒரே படமாகத் தைத்துக் கொள்ளலாம்.... பின்னர் "play" என்ற பட்டனை அழுத்தினால் படம் எவ்வாறு இயங்கும் என்று நமக்குத் தெரியும்.. படங்கள் இயங்கும் வேகத்தை "control" என்ற option - ஐ பயன்படுத்திக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.. அதன் பின்னர் "make" என்ற பட்டன் அழுத்தினால் உங்களின் அழகான இயங்கும் படம் தயார்... அப்புறமென்ன .... உங்கள் படம் இயங்குவதைப் பார்த்து ரசிக்கவேண்டியதுதான்..


அனிமேட்டர்9 போன்ற எளிதான மென்பொருள்களும் பல உள்ளன.. அவற்றில் ஒன்று .. மேஜிக் மார்ப் என்பதாகும் ... அதனை இங்கேயிருந்து இறக்கிக்கொள்ளலாம் ( http://www.effectmatrix.com/ ) .. இந்த மென்பொருளைப் பயன்படுத்து பல படங்களைத் தயாரிக்கலாம் ..


என்ன .. நண்பர்களே .. ! இப்போதே நீங்களும் இயங்கும் படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .

நன்றி - முத்து
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
அனிமேஷன் - by Mathan - 03-15-2004, 08:50 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 12:12 AM
[No subject] - by anpagam - 03-27-2004, 12:33 AM
[No subject] - by Paranee - 03-27-2004, 05:13 AM
வணக்கம் - by TMR - 03-27-2004, 06:37 AM
[No subject] - by TMR - 03-27-2004, 06:38 AM
[No subject] - by anpagam - 03-27-2004, 10:19 AM
[No subject] - by sOliyAn - 03-27-2004, 01:40 PM
[No subject] - by TMR - 03-27-2004, 03:23 PM
[No subject] - by sOliyAn - 03-27-2004, 11:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)