Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகலிடத் தமிழர்
#34
<b>கருணாவின் பிரதேசவாத பிரசாரத்துக்கு கிழக்கு மக்கள் முழுமையாக ஆப்பு.</b>

முற்றாக அலட்சியப்படுத்தியது சர்வதேச சமூகம்

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட கருணாவின் 'கலகம்" இடம்பெற்று சுமார் இரு வாரங்களை எட்டி விட்ட நிலையில், அவரின் பிரதேசவாதப் பிரசாரமும், வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதி மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டுவதற்கான கருணாவின் முயற்சி தோல்வியையே தழுவியுள்ள அறிகுறி தென்படுவதாக இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

'கலகம் பிசுபிசுத்து விடும்" என்று செங்கலடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதே கருத்தை மட்டக்களப்பைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவரும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள குறிப்பிட்ட சில வர்த்தக, பல்கலைக்கழக சமூகங்களின் நலன்களுக்காக அவர்களின் கருவியாக கருணா பயன்படுத்தப்படுகிறார் என்று விடுதலைப் புலிகளின் அமைப்புக்குச் சார்பற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பிரதேச சபையின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

உள்@ர், சர்வதேச தமிழ் ஊடகங்கள் கருணாவை முற்றாகப் புறக்கணித்துள்ளன. சர்வதேச ஊடகங்கள் மட்டுமே கருணாவிடமிருந்து செய்திகளைப் பெற்று வெளியிடுகின்றன. ஆனால், இது உள்நாட்டைப் பொறுத்தவரை எந்தவிதமான பிரயோசனத்தையும் பெறவில்லை.

கருணாவிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்திலேயே ஊடகங்கள் முழுமையான கவனத்தையும் திருப்பியுள்ளன.

கருணாவின் சொந்த இடத்திலேயே அவர் குறிப்பிட்ட சில வெளிநாட்டு, இலங்கைச் சக்திகளின் அடிவருடியாக செயற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழரின் ஐக்கியத்தைக் குலைக்கும் நடவடிக்கையாக மக்கள் இதனைப் பார்க்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பாரிய தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட இயக்கத்தைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக மக்கள் இதனைக் கருதுகிறார்கள். புலிகள் அமைப்பால் இவர் வெளியேற்றப்பட்ட பின் துரோகி என்ற பட்டமும் அவருக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கு மட்டும் கருணா துரோகியல்ல. தமிழரின் ஒருமைப்பாட்டிற்கும், குறிக்கோளுக்கும் துரோகம் இழைத்தவராகவே கருதப்படுகிறார் என்று மட்டக்களப்பிலுள்ள சில வட்டாரங்கள் இந்துஸ்தான் ரைம்ஸிற்குக் கூறியுள்ளன.

கருணா மீது அன்பு செலுத்துகின்ற தரப்பினர் கூட தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் பாரிய துரோகத்தைச் செய்துவிட்டார் என்று கூறுகின்றனர்.

முன்னுக்குப் பின் முரணான நிலை

கருணா கடந்த 6 ஆம் திகதி மட்டக்களப்பில் தெரிவித்திருந்த கருத்துக்கும், பின்னர் அவர் தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பிரபாகரனைக் கடவுளாக மக்கள் கருதுவதாகவும், ஆனால், அவர்கள் மீது அவர் சேறு பூசி விட்டார் என்றும் முதலில் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் புலிகளை வெல்ல முடியாது என்பது ஒரு மாயை என்று அவர் கூறியிருந்தார். அத்துடன், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் அல்ல என்று ராய்ட்டருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆனால், பின்னர் தமிழீழ இராணுவம் தமிழீழத்தை உருவாக்குவதற்குப் பாடுபட வேண்டுமென்று கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இது இவ்வாறிருக்க, கருணாவின் கட்டுப்பாட்டிpருந்து ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் விலகிச் சென்றிருப்பதாக தகவலறிந்த உள்@ர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலைக்கும், வன்னிக்கும் அவர்கள் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவு எண்ணிக்கையான போராளிகளைப் பராமரிக்க முடியாத நிலையாலும், அதிகளவு பணம் தேவைப்படுவதனாலும் அவர்களைச் செல்வதற்கு கருணா அனுமதித்திருக்கலாம் என்று புலிகளின் இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

உண்மையில், கருணாவைப் பொறுத்தவரை, நிதிப் பற்றாக்குறை பாரிய விடயமென அவர் தெரிவித்தார். குறுகிய காலத்திற்கு அல்லாவிடினும், நீண்ட காலத்தைப் பொறுத்தவரை நிதி விடயம் பாரிய பிரச்சினையாகும். மாதாந்தம் 5 இலட்சம் அமெரிக்க டொலர் அவருக்குத் தேவைப்படும் என்று அந்த ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

[u]வெளிநாடுகளில் உள்ள தமிழரிடமிருந்து தான் நிதியுதவியைப் பெறுவார் என்று கருணா கூறியிருந்தார். ஆனால், இதனை முக்கியமான விடயமாகக் கவனத்தில் எடுக்க முடியாது. ஏனெனில், வெளிநாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தையும், வட பகுதியையும் சேர்ந்தவர்கள்.

பிரதேசவாதத்தைக் கருணா எழுப்பிய படியால், வெளிநாடுகளிலுள்ள தமிழரிடமிருந்து உதவி பெறுவதென்பது சிறிதளவும் சாத்தியமற்ற விடயம்..
தோல்வியைத் தழுவிய பிரதேசவாதம்

கலகத்தை ஆரம்பித்த வேளை கருணா எழுப்பிய பிரதேசவாதம், கிழக்கிலுள்ள மக்கள் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சிங்கள, தமிழ் மோதல்களுக்கு முன்னரும், சுதந்திரத்திற்கு முன்னரும் பிரதேசவாதம் இருந்தது. ஆனால், 20 வருட யுத்தத்திற்குப் பின்னர் தமிழர்கள் சாதியம், பிரதேசவாதம், மத வேறுபாடுகள் என்பவற்றை நிராகரித்து ஒன்றுபட்டுள்ளனர். மக்களின் சிந்தனையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கிழக்கிலுள்ள கத்தோலிக்க மதகுரு ஒருவர் தெரிவித்தார்.

பிரதேசவாத உணர்வுகளை எழுப்புதல் துரோகத்தனமானது என கிழக்கிலுள்ள தமிழர்கள் உட்பட தமிழ் மக்கள் யாவருமே கருதுகிறார்கள். சிங்கள ஊடகங்கள் இதனால் ஆனந்தப் படுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இலங்கை அரசியல் சக்திகள் தமிழர்களை வடக்கு, கிழக்கு எனப் பிரித்து தமிழர்களின் ஐக்கியத்தைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

தமிழ் ஊடகங்கள் முற்றாக புறக்கணிப்பு

தமிழ் ஊடகங்கள் கருணாவின் கருத்துகளை முற்றாகப் புறக்கணித்துள்ள நிலை காணப்படுகின்றது. தமிழ் சாராத ஏனைய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களுமே அவரின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தமிழ்த் தேசியவாத உணர்வில் அநேகமான தமிழ் ஊடகங்கள் திளைத்திருப்பதால் இந்நிலை காணப்படலாம் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் கூறுகிறது.

'தமிழ் ஊடகம் என்றால் தமிழ் ஊடகம் தான்" என்று மட்டக்களப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பெருமையாகக் கூறினார்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவற்ற நிலை

சர்வதேச சமூகம் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் அமைப்பின் பக்கமே முழுமையாக நிற்கிறது. பிரதேசவாதங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தால் வட, கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியம் என்பதை உணர்ந்து அவை செயற்படுகின்றன. ஒரு பலமான சக்தியுடனேயே அவை விடயங்களைக் கையாள விரும்புகின்றன.

பிரிட்டிர்;, நோர்வேஜிய சமாதான மத்தியஸ்தர்கள் செயற்பட்ட விதம் இதனையே வெளிப்படுத்துகிறது. பிரதான ஐரோப்பிய சக்திகள் பிரபாகரனுக்கே ஆதரவாக உள்ளன. அவர்களின் தூதுவர்கள் வன்னியில் தமிழ்ச்செல்வனைச் சென்று சந்தித்தார்களே தவிர, கருணாவை அல்ல.

கருணா பலவீனமடையும் சாத்தியமே இருப்பதாக கிழக்கிலுள்ள அநேகமான மக்கள் கருதுகின்றனர். அவர் தன்னை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தும் தன்மை காணப்படவில்லை. அவருடைய அரசியல் இயந்திரம் பலவீனமாகவும், செயற்பட முடியாமலும் உள்ளது. அவர் அரசியல் ரீதியாக கூர்மதி உடையவரோ, பொது அறிவுடையவரோ அல்ல. அவரிடம் யுத்தப் பிரிவைத் தவிர வேறெந்த அமைப்பும் கிடையாது

நன்றி:தினக்குரல் (10.03.04)
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-14-2004, 08:08 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 09:13 PM
[No subject] - by tharma - 03-14-2004, 10:11 PM
[No subject] - by shanmuhi - 03-14-2004, 10:28 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 10:40 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 10:41 PM
[No subject] - by shanmuhi - 03-14-2004, 10:52 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 10:58 PM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 12:23 AM
[No subject] - by Mathivathanan - 03-15-2004, 12:32 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 12:40 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 12:46 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:02 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:07 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:12 AM
[No subject] - by Mathivathanan - 03-15-2004, 01:13 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:14 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:16 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:17 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 01:18 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:18 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:19 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:21 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:27 AM
[No subject] - by Mathivathanan - 03-15-2004, 01:33 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 01:35 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 01:50 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 02:05 AM
[No subject] - by tharma - 03-15-2004, 04:46 AM
[No subject] - by anpagam - 03-15-2004, 09:40 AM
[No subject] - by Mathivathanan - 03-15-2004, 12:41 PM
[No subject] - by anpagam - 03-15-2004, 02:05 PM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 11:48 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 12:31 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 12:32 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 12:35 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 12:42 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 12:47 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 12:57 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 01:14 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 01:20 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 01:27 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 01:35 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 01:42 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 01:52 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 02:16 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 03:49 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 02:29 PM
[No subject] - by nalayiny - 03-16-2004, 05:01 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 05:27 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 05:33 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 05:43 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 05:52 PM
[No subject] - by nalayiny - 03-16-2004, 06:02 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 06:14 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 06:18 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 07:53 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 08:18 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 08:23 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 08:28 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 08:33 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 08:36 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 08:45 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 08:53 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 10:14 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 10:19 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 10:31 PM
[No subject] - by anpagam - 03-17-2004, 12:36 AM
[No subject] - by sOliyAn - 03-17-2004, 01:35 AM
[No subject] - by Rajan - 03-18-2004, 05:31 PM
[No subject] - by nalayiny - 03-18-2004, 05:54 PM
[No subject] - by nalayiny - 03-18-2004, 09:36 PM
[No subject] - by sOliyAn - 03-18-2004, 11:37 PM
[No subject] - by sOliyAn - 03-18-2004, 11:47 PM
[No subject] - by anpagam - 03-18-2004, 11:52 PM
[No subject] - by adipadda_tamilan - 03-19-2004, 07:10 AM
[No subject] - by adipadda_tamilan - 03-19-2004, 07:13 AM
[No subject] - by adipadda_tamilan - 03-19-2004, 07:17 AM
[No subject] - by sOliyAn - 03-19-2004, 01:55 PM
[No subject] - by nalayiny - 03-19-2004, 08:58 PM
[No subject] - by nalayiny - 03-19-2004, 09:17 PM
[No subject] - by sOliyAn - 03-19-2004, 11:10 PM
[No subject] - by AJeevan - 03-20-2004, 01:02 PM
[No subject] - by nalayiny - 03-20-2004, 01:03 PM
[No subject] - by nalayiny - 03-20-2004, 01:28 PM
[No subject] - by Aalavanthan - 03-20-2004, 01:31 PM
[No subject] - by Rajan - 03-20-2004, 04:39 PM
[No subject] - by nalayiny - 03-20-2004, 07:44 PM
[No subject] - by sOliyAn - 03-21-2004, 01:33 AM
[No subject] - by nalayiny - 03-21-2004, 09:12 AM
[No subject] - by Aalavanthan - 03-21-2004, 04:55 PM
[No subject] - by Manithaasan - 03-21-2004, 05:06 PM
[No subject] - by shanmuhi - 03-21-2004, 08:00 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 08:11 PM
[No subject] - by Mathivathanan - 03-21-2004, 08:17 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 08:33 PM
[No subject] - by adipadda_tamilan - 03-22-2004, 12:46 AM
[No subject] - by Aalavanthan - 03-22-2004, 08:43 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 11:50 PM
[No subject] - by Mathan - 04-05-2004, 12:11 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 01:07 PM
[No subject] - by இளைஞன் - 04-08-2004, 01:25 PM
[No subject] - by Manithaasan - 04-08-2004, 02:33 PM
[No subject] - by Paranee - 04-08-2004, 02:38 PM
[No subject] - by இளைஞன் - 04-08-2004, 04:41 PM
[No subject] - by Eelavan - 04-08-2004, 04:43 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 10:45 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 03:56 PM
[No subject] - by Manithaasan - 04-10-2004, 09:57 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 05:32 AM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:49 PM
[No subject] - by tamilini - 05-24-2004, 10:06 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:34 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:37 PM
[No subject] - by Mathan - 06-03-2004, 05:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)