03-15-2004, 02:01 AM
சரி.. இந்த கருத்து நீக்கப்படலாம்.. எனினும் எழுதுவது எனது கடமை. ஒரு போராளியோடு (கிழக்கு மாகாணத்தவரல்ல) பேசியபோது.. அரசியல் பிரிவாக்கள் கார்களில ஓடித் திரியுறாங்கள்.. நாங்கள் கஸ்டப்படுறம் என்றார்.. இப்படி நுணுக்குக்காட்டிகளாய் ஆராய்ந்தால் குற்றம் குறைகள் எங்குமே உண்டு. ஆனால் அதிலே எதற்காக இணைந்தார்கள் .. அதன்படி நடக்கிறார்களா என்பதுதான் முக்கியம். இல்லையா?! எல்லாருக்கும் எல்லாவற்றையும் செய்து திருப்திப்படுத்த முடியாது.. அதே நேரத்தில் தியாகம் தீரம் என்று போனவர்கள் அத்தகைய குணங்களுடன் தமது சலுகைகளையும் பேசிப் பெற்றிருக்கலாம்! வெளிநாட்டுக்கு ஒரு பிரதிநிதியாய் வருமளவுக்கு செல்வாக்குப் படைத்தவரால் பிரிவைத் தவிர்த்து உரிமைகளைப் பெற்றிருக்க முடியாதென கருத இடமுணடா?!
.

