03-15-2004, 01:22 AM
'பெண்கள் எனக்கு பிடிக்கும். அவர்களின் முகம் தரும் பிரகாசத்தால் எனக்கு புத்துணர்வு வருகிறது. ஆனால் அவர்கள் எப்பொழுதும் வாயை முடிக்கொண்டு இருக்க வேண்டும்' என்று பெண்களை பற்றி பிரபல கவிஞர் பெர்னார்ட்ஷா இப்பொழுது உயிருடன் இருந்து சொல்லி இருந்தால் வெளியே அவரால் தலை காட்ட முடியாது. ஆனால் இன்றும் பெண் சுதந்திரம் இல்லை என்று குரல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இது குறித்து பலரிடம் கேட்ட போது :
"வியர்வை சிந்தி சமைத்து குடும்பத்திற்கு உழைக்கும் பெண் அவளது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடையும் பொழுது அப் பெண்ணின் துன்பங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும் என பெண்மையை பற்றி பழமையான கருத்து ஒன்று உண்டு. ஆனால் என்னைப் பொறுத்த வரை எனக்கு கை கால் வலியும் சோர்வு தான் ஏற்படுகிறது" என நகைச்சுவையுடன் பேசும் தீபா ஒரு மின் வாரிய ஊழியர். "உழைக்கும் பெண்களுக்கு ஒரு நாள் விழா வேண்டும் என்று அதற்கு உலக மகளிர் தினம் என கோபன் கேகனில் பெயர் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றும் உடல் உழைப்பில் வாழும் கிராமப்புறப் பெண்களின் நிலை மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது. நகரப்புறப் பெண்களின் நிலையில் தான் முன்னேற்றம் இருக்கிறது. ஒரு தனி ஆணிற்கு இருக்கும் சுதந்திரம் ஒரு தனி பெண்ணிற்கு இன்று இல்லை.
"இன்று பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரங்கள் அனைத்தும போராட்டங்களால் பெறப்பட்டவைகள்தான். ஆண்கள் தங்களது கல்லூரி நண்பர்களை பார்க் பீச் போன்ற இடஙகளில் சந்தித்து தங்களத நட்பை புதிப்பித்துக் கொள்கின்றனர் ஆனால் ஒரு பெண்ணால் அப்படி இருக்க முடியவில்லை. திருமணம் ஆனவுடன் தனது குடும்பம் தனது உறவு என்று பெண்ணின் வாழ்க்கை வட்டம் சுருங்கி மெழுகுவர்த்தி போல் கரைந்து விடுகிறாள். இச்சமுக மாற்றமும் நடைமுறையும் மாற வேண்டும்.
இன்றைய திரைப்படங்கள் முதல் தொலைக்காட்சிகள் வரை உள்ள வெகுஜன ஊடகங்கள் பெண்ணியத்தை தூக்கிப் பிடிக்கவில்லை என்றாலும் பெண் சாதனையாளர்களும் அதிகாத்துக் கொண்டு தான் வருகின்றனர்.
பெண் உரிமை பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்ட போது,
"ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இன்பம், துன்பம், உறவுகள், வலிகள், நெருக்கடிகள் சோதனைகள், சவால்கள் இருக்கின்றன. ஆண்களுக்குப் பிரச்சினைகளின் எண்ணிக்கை ஆறு என்றால் பெண்களுக்கு ஆண்களையும் சேர்த்து ஏழு பிரச்சினைகள். இருவருக்குமே பிரச்சனைகளின் எண்ணிக்கை ஆறு என்று வரும் பொழுது பெண் உரிமை பெண் விடுதலை கிடைத்துவிட்டதாக நம்பலாம் என்று பெண் உரிமை பற்றி பிரபல பெண்ணிய கவிஞர் தாமரை ஒரு முறை கூறி கருத்து தான் நினைவிற்கு வருகிறது. இன்றைக்கு பெண்ணுரிமை என்பது கிராமப்புறங்களில் மதிப்பு இழந்து காணப்படுகிறது. ஏனெனில் அங்கு ஆணும் பெண்ணும் உடல் உழைப்பினைச் சார்ந்து வாழ்கிறார்கள். அங்கு வீட்டு வேலைகளை மனைவி செய்தால் தனது மாடு ,ஆடு போன்றவைகளை வீட்டில் கவனித்துக் கொள்ளும் பணியை கணவன் செய்கிறான்.அவர்களுக்குள் பணிப் பிரிப்புச் செய்து கொள்கின்றனர். ஆனால் நகரங்களில் ஆண் பெண் வேலைக்குச் செல்வதால் அலுவலக பிரச்சினை, ஈகோ போன்ற காரணத்தால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனை புரிந்து கொண்ட ஆண்கள் பணிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளாத இடங்களில் பிரச்சனைகள் என்று ஆகி விடுகிறது. என்னைப் பொறுத்த வரை கடந்த 15 வருடமாக பெண் சமுக முன்னேற்றத்தைப் பார்க்கையில் ஆண்களைவிட அவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் பெண் பார்க்க மாப்பிள்ளை வரும் காலம் போய் மாப்பிள்ளை பார்க்க பெண்கள் வந்து விடுவார்கள் பாருங்கள்" என்கிறார் இவர்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>