Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்...
அலைகள் சிறுகதை 08.01.2004

மியாவ் !

பிள்ளைகள் பராமரிப்பு நிலையம்..

சிறியதும் பெரியதுமாக குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.. டேனிஸ், துருக்கி, தமிழ், சோமாலி என்று பல இனங்கள்... நண்பர்களாக, எதிரிகளாக ஓடுவதும், பாடுவதும், மோதுவதுமாக... சத்தம் காதைப் பிளந்தது..

சில அந்தச் சத்தங்களே தாலாட்டுக்கள் என்று எண்ணி ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தன..

தள்ளுவண்டியில் ஒரு குழந்தையை படுக்கவைத்து வெளியில் விட்டிருந்தார்கள்.. நெற்றியில் காய்ச்சிய கருஞ்சாந்துப் பொட்டு, கன்னங்கரேலென்ற கேசம்... அங்கிருப்பவர்களைப் பார்த்து அலறிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் மானின் மிரட்சி..

மூக்கால் சளி கொத்துக் கொத்தாகக் கொட்டுப்பட்டது.. கண்களில் தாயைத் தேடிய தவிப்பு.. அம்மா ... அம்மா .. என்ற அதன் மழலைத் தமிழ் அழைப்பு காற்றில் கரைந்து எங்கோ பறந்து தாய் இளமதியை அந்த இயந்திரத் தெருக்களில் தேடியது...

குழந்தை உறங்கும் என்ற நினைப்புக்களோடு தாய் வேலைத் தலத்தில் போராடிக் கொண்டிருந்தாள். மார்பில் பாலின் கனம்.. குழந்தை தமிழினி இரவும் சரியாக உறங்கவில்லை... என்னமோ ? ஏதோ.. அவளுள் தாய்மையின் தவிப்பு...

குழந்தை மேலும் குரலெடுத்து அழுதது... வயிற்றுவலியோ.. காய்ச்சலோ.. காதுக்குடைவோ... யாரறிவார்... அழுகை பலமாக இருந்தது.

அதன் அழுகை கேட்டால் கடவுளும் வானத்தில் இருந்து இறங்கியே தீருவார்...

மரத்தால் தாவிப் போன பூனையொன்று சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தது.. குட்டி போட்ட பூனை... அதன் கண்களில் தாய்மையின் ஏக்கம் தெரிந்தது.. குழந்தையின் குரல் அசாதாரணமென்பதை அந்த மிருகம்கூட கண்டுவிட்டது..

,மியாவ் ! மியாவ்!, பூனை பதிலுக்குக் குரல் எழுப்பியடி அருகில் ஓடிவந்து குழந்தையைப் பார்த்தது...

பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்யும் இரண்டு மூன்று டேனிஸ் பெண்கள் தங்களுக்குள் எதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.. அவர்களின் தலைவி கிரேட்டா சிகரட்டை குத்தி அணைத்தாள்..

, யாரோ அழுது கேட்கிறதே ! , இது சுசேனா.

, புதிதாக வந்த தமிழ் குழந்தை ரமிலினிதான் அழுகுது.. , கத்தரினா சொன்னாள்.

, ஓகே ! ஓகே ! புதுசா வந்தால் அப்படித்தான்... போகப்போக சரியாகியிடும்!,

, அழுகைச் சத்தம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே.. , சுசேனா முகத்தில் சிறு கலவரம்.

, சுசேனா ! நீ வேலைக்குப் புதுசு.. அதுதான் உனக்கு அப்பிடியிருக்கு .. புதுசா சிறைச்சாலை வாற கைதிபோலத்தான்... இதுவும்... அழுகை ஒப்பாரி , கிரேட்டா சமாதானம் சொன்னாள்.

குழந்தை தமிழினி விக்கிவிக்கி தாயைத் தேடி... தகப்பனைத் தேடி... எதுவுமே நடக்காமல் ஞானப்பால் வழங்க வரும் அம்மையப்பனை தேடுவதுபோல அழுதது. அந்தப் பரிதாபத்தைப் பார்த்து அருகில் கிடந்த கற்கள், மரங்கள் எல்லாம் அழத்துடிப்பது போல இரங்கின...

, சுசேனா நேற்று நீ தொலைக்காட்சி பார்த்தியா ? ,

, இல்லையே... ,

, கடைசி ரெக்ஸ் hP வியைத் தன்னும் தட்டியிருக்கலாம்... ,

, விN ம்... ,

, இரண்டாவது தலைமுறையா வந்திருக்கிற வெளிநாட்டுப் பெண்கள் எல்லாம் இப்ப கனக்க கனக்க பிள்ளையள் பெறுகினம்... அவர்களோடை ஒப்பிட்டால் டெனிஸ் பெண்கள் பெறும் அளவு அரைவாசியாத்தான் இருக்குதாம்... இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ ? , கிரேட்டா ரெக்ஸ் hPவி கதையைச் சொன்னாள். அவளுடைய முகத்தில் இனம் புரியாத கவலை.

தமிழினி விக்கி விக்கி அழுதது.. குரல் உடைந்து ... நின்று .. அழுது... அதன் நம்பிக்கை மெல்ல மெல்லக் குலைகிறது.. கள்ளங்கபடமற்ற அந்த குழந்தை உள்ளம் கோடி கோடி துண்டுகளாக உடைகிறது... உள்ளம் விறைப்படைகிறது... அழுகை மெல்ல மெல்லக் குறைகிறது...

பூனை தயக்கத்துடன் வாலை ஆட்டியாட்டி நடக்கிறது.. ஏதோ தவறு நடப்பதுபோல அது கலவரப்படுகிறது பின் வாலை ஆட்டியபடி நிற்கிறது.. அது வாயில்லா ஜீவன்.

குழந்தை அழுகையை முற்றாக நிறுத்துகிறது..

பிள்ளைகள் உளவியலை பேசுவதற்கு பிரபல பெண்; உளவியலாளர் ஒருவர் வரப்போகிறார் என்ற தகவலை அறிவித்தல் பலகையில் போட்டுவிட்டு நேரத்தைப் பார்க்கிறாள் கிறேட்டா, ஐந்துமணி.

வேக வேகமாகச் சென்று தமிழினியைத் து}க்குகிறாள்... அதன் கண்களைத் துடைத்து மூக்கையும் சிமிந்தி விடுகிறாள். தலைமுடியை விரல்களால் கோதி வாரி விடுகிறாள். முருகனை மடியில் வைத்திருக்கும் பார்வதிபோல பாசமாக ஒரு பாவனை அவள் முகத்தில்...

து}ரத்தே வேலை முடிந்து இளமதி ஓடோடி வருவது தெரிகிறது... கலைந்த கேசம், வியர்வை வடிந்த தோற்றம்.. எங்கோ ஒரு கோழிப்பண்ணையில் மாடாக முறிந்துவிட்டு வருகிறாள்...

குழந்தைக்காக மார்பகங்களில் பால் கசிவது போன்ற உணர்வு. ஐயோ ராத்திரியும் உறக்கமில்லாமல் அழுதது... பாலோடு மனமும் கனத்தது...

ஓடிவந்து தமிழினியைப் பார்க்கிறாள்.. அது சிரிக்க மறந்து அவளையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறது..

, தமிழினி நல்ல பிள்ளை.. ஒரு குழப்படியும் இல்லை.. பிள்ளைக்கு இங்கை வாறதென்றால் நல்ல விருப்பம்... அருமையான பிள்ளை.. ம் ஆ.. , கிறேட்டா குழந்தையை தாயிடம் கொடுத்தபடி சொன்னாள்.

ஒரு குழந்தையின் உளவியல் ஆயிரம் சம்மட்டிகளால் அடித்து நொருக்கப்பட்டு விட்ட கதையை அங்கே யார் யாருக்கு சொல்லப் போகிறார்கள்...

, குஞ்சு... செல்லக்குட்டி... எனம்மா அம்மாவிலை கோபமோ .. சிரியம்மா ! அட சிரிக்கமாட்டியோ... , இளமதி குழந்தை சிரிக்க மறுப்பதைப் புரியாதவளாக மெல்லிய கவலையுடன் நடக்கிறாள்.

, மியாவ்...,

திரும்பிப் பார்க்கிறாள்.. அந்தப் பூனை அவளைப் பார்த்து என்னவோ சொன்னது...

, நீ மாடாய் உழைத்து... நாற்பத்தைந்து வீதம் வரி கட்டி... மிகுதி உழைப்பில் பாதியை பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்துக்குக் கொடுத்து... இரண்டாவது தலைமுறை அகதிப் பெண்கள் அதிக பிள்ளைகள் பெறுகிறார்கள் என்று அவமானப் படுத்தப்பட்டு... உன் பிள்ளையின் சிரிப்பைத் தொலைத்து... அந்தக் குழந்தை உள்ளத்தை நொருக்கி... தாயே இந்த வாழ்வு உனக்குத் தேவையா ?

மியாவ் !

பூனை மனிதர்கள் உலவும் இடத்தைவிட்டு பாய்ந்து ஓடுகிறது.. அதன் ஒலியில் ஆயிரம் அர்த்தங்கள்... அறிந்தும் அறியாதவளாய் தமிழினியுடன் நடக்கிறாள் இரண்டாவது தலைமுறை அகதி இளமதி.

யாவும் கற்பனை. கி.செ.துரை 08.01.2004


நன்றி அலைகள் இணையத்தளம்
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-20-2004, 10:35 AM
[No subject] - by kuruvikal - 02-20-2004, 10:40 AM
[No subject] - by vasisutha - 02-20-2004, 05:17 PM
[No subject] - by Kanakkayanaar - 02-21-2004, 12:53 PM
[No subject] - by Mathivathanan - 02-21-2004, 01:02 PM
[No subject] - by kuruvikal - 02-21-2004, 01:06 PM
[No subject] - by vasisutha - 02-21-2004, 01:08 PM
[No subject] - by vasisutha - 02-21-2004, 01:12 PM
[No subject] - by kuruvikal - 02-21-2004, 01:22 PM
[No subject] - by vasisutha - 02-21-2004, 01:26 PM
[No subject] - by Mathan - 02-21-2004, 02:59 PM
[No subject] - by kuruvikal - 02-22-2004, 10:21 AM
[No subject] - by Mathan - 02-22-2004, 04:35 PM
[No subject] - by kuruvikal - 02-22-2004, 08:35 PM
[No subject] - by Mathan - 02-23-2004, 05:52 PM
[No subject] - by shanmuhi - 02-23-2004, 05:55 PM
[No subject] - by kuruvikal - 02-23-2004, 05:59 PM
[No subject] - by Mathan - 02-23-2004, 06:03 PM
[No subject] - by kuruvikal - 02-23-2004, 06:12 PM
[No subject] - by Mathan - 02-23-2004, 06:59 PM
[No subject] - by kuruvikal - 02-23-2004, 08:35 PM
[No subject] - by Mathan - 02-23-2004, 08:57 PM
[No subject] - by kuruvikal - 02-23-2004, 09:19 PM
[No subject] - by Mathan - 02-23-2004, 09:34 PM
[No subject] - by sOliyAn - 02-23-2004, 11:45 PM
[No subject] - by vasisutha - 02-23-2004, 11:48 PM
[No subject] - by Mathivathanan - 02-24-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 02-24-2004, 11:32 AM
[No subject] - by pepsi - 02-24-2004, 07:17 PM
[No subject] - by sOliyAn - 02-24-2004, 07:26 PM
[No subject] - by kuruvikal - 02-24-2004, 07:39 PM
[No subject] - by Mathan - 03-06-2004, 04:54 PM
[No subject] - by shanthy - 03-06-2004, 05:47 PM
[No subject] - by kaattu - 03-06-2004, 06:58 PM
[No subject] - by Mathan - 03-08-2004, 11:56 AM
[No subject] - by kuruvikal - 03-08-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 03-08-2004, 12:39 PM
[No subject] - by Mathivathanan - 03-08-2004, 12:57 PM
[No subject] - by Mathan - 03-08-2004, 01:00 PM
[No subject] - by Mathan - 03-08-2004, 01:07 PM
[No subject] - by sOliyAn - 03-08-2004, 01:23 PM
[No subject] - by Mathan - 03-08-2004, 01:28 PM
[No subject] - by manimaran - 03-08-2004, 01:46 PM
[No subject] - by sOliyAn - 03-08-2004, 01:48 PM
[No subject] - by Mathan - 03-08-2004, 01:55 PM
[No subject] - by nalayiny - 03-08-2004, 04:02 PM
[No subject] - by kuruvikal - 03-08-2004, 04:28 PM
[No subject] - by sOliyAn - 03-08-2004, 11:12 PM
[No subject] - by nalayiny - 03-08-2004, 11:55 PM
[No subject] - by sOliyAn - 03-09-2004, 12:01 AM
[No subject] - by nalayiny - 03-09-2004, 12:10 AM
[No subject] - by sOliyAn - 03-09-2004, 12:17 AM
[No subject] - by nalayiny - 03-09-2004, 12:21 AM
[No subject] - by Mathan - 03-09-2004, 03:23 AM
[No subject] - by Mathan - 03-09-2004, 09:59 AM
[No subject] - by kuruvikal - 03-09-2004, 12:05 PM
[No subject] - by Mathivathanan - 03-09-2004, 12:16 PM
[No subject] - by kuruvikal - 03-09-2004, 12:25 PM
[No subject] - by Eelavan - 03-09-2004, 12:39 PM
[No subject] - by kuruvikal - 03-09-2004, 12:44 PM
[No subject] - by Eelavan - 03-09-2004, 12:53 PM
[No subject] - by kuruvikal - 03-09-2004, 01:04 PM
[No subject] - by Chandravathanaa - 03-10-2004, 12:02 AM
[No subject] - by vasisutha - 03-10-2004, 12:04 AM
[No subject] - by Mathan - 03-10-2004, 12:25 AM
[No subject] - by nalayiny - 03-10-2004, 12:34 AM
[No subject] - by vasisutha - 03-10-2004, 12:37 AM
[No subject] - by Eelavan - 03-10-2004, 06:52 AM
[No subject] - by Eelavan - 03-10-2004, 06:55 AM
[No subject] - by Eelavan - 03-10-2004, 06:58 AM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 10:44 AM
[No subject] - by Eelavan - 03-10-2004, 05:09 PM
[No subject] - by nalayiny - 03-10-2004, 05:51 PM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 06:08 PM
[No subject] - by vasisutha - 03-10-2004, 06:50 PM
[No subject] - by Eelavan - 03-10-2004, 06:51 PM
[No subject] - by shanmuhi - 03-10-2004, 06:54 PM
[No subject] - by Eelavan - 03-10-2004, 06:57 PM
[No subject] - by Mathivathanan - 03-10-2004, 07:03 PM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 08:06 PM
[No subject] - by Mathan - 03-10-2004, 09:33 PM
[No subject] - by Mathan - 03-10-2004, 09:38 PM
[No subject] - by Mathan - 03-10-2004, 09:43 PM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 10:02 PM
[No subject] - by nalayiny - 03-10-2004, 11:49 PM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 11:54 PM
[No subject] - by nalayiny - 03-10-2004, 11:59 PM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 12:02 AM
[No subject] - by Eelavan - 03-11-2004, 03:40 AM
[No subject] - by Eelavan - 03-11-2004, 03:50 AM
[No subject] - by Eelavan - 03-11-2004, 04:01 AM
[No subject] - by sennpagam - 03-11-2004, 06:42 AM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 11:34 AM
[No subject] - by shanthy - 03-11-2004, 11:49 AM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 12:08 PM
[No subject] - by Eelavan - 03-11-2004, 05:05 PM
[No subject] - by nalayiny - 03-11-2004, 10:26 PM
[No subject] - by nalayiny - 03-11-2004, 10:34 PM
[No subject] - by vasisutha - 03-11-2004, 10:51 PM
[No subject] - by Mathan - 03-11-2004, 11:14 PM
[No subject] - by Eelavan - 03-12-2004, 03:06 AM
[No subject] - by Eelavan - 03-12-2004, 03:13 AM
[No subject] - by shanthy - 03-12-2004, 11:01 AM
[No subject] - by Eelavan - 03-12-2004, 11:21 AM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 12:59 PM
[No subject] - by nalayiny - 03-12-2004, 02:28 PM
[No subject] - by nalayiny - 03-12-2004, 02:33 PM
[No subject] - by nalayiny - 03-12-2004, 03:03 PM
[No subject] - by nalayiny - 03-12-2004, 03:14 PM
[No subject] - by Eelavan - 03-12-2004, 03:33 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 04:22 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 04:36 PM
[No subject] - by nalayiny - 03-12-2004, 05:16 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 05:29 PM
[No subject] - by Mathan - 03-12-2004, 10:23 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 10:52 AM
[No subject] - by yarlmohan - 03-13-2004, 11:17 AM
[No subject] - by Mathan - 03-13-2004, 11:20 AM
[No subject] - by Mathan - 03-13-2004, 11:32 AM
[No subject] - by Eelavan - 03-13-2004, 12:14 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 12:58 PM
[No subject] - by Eelavan - 03-13-2004, 07:01 PM
[No subject] - by Mathan - 03-15-2004, 01:22 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 07:57 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 08:25 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 08:51 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 09:33 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 09:37 PM
[No subject] - by kuruvikal - 03-17-2004, 12:10 AM
[No subject] - by Alai - 03-28-2004, 09:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)