Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மானா பொய்மானா??
#18
<b>தனக்குத்தானே மண்ணை வாரியெறியும் கருணா ?</b>

கருணாவின் தமிழஅலை பத்திரிகையானது கருணா சொல்வதை அப்படியே பிரதிபண்ணி வெளியிடும் பத்திரிகை மட்டுமல்ல. இலங்கை ஒலிபரப்புசேவைக்கு நிகரான பொய்ப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருவது கண்கூடு. சந்திரிகா அரசு மக்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட்டு இல்லையென உலகின் முன் சத்தியம் செய்வதும் , பாடசாலைகள் , தேவாலயங்கள் மீது குண்டுவீசிக்கொன்றுவிட்டு புலிகளை அழித்தேன் என மார்தட்டுவது போல கருணாவும் தனக்கு ஆதரவாக தனது பத்திரிகா தர்மத்தை நிலைநிறுத்துகிறார். இதற்குள் புலம்பெயர்ந்தோர் , தென்தமிழீழ மக்கள் அனைவரையும் தனக்கு ஆதரவாக்காட்டியிருப்பது வேடிக்கையான விந்தையாகும். இவரது துரோகத்தனத்தைப் புரிந்து கொள்ளாத சில அப்பாவிகள் இவரது புழுகுத்தனத்தை உண்மையென நம்பி தமது ஆதரவினை வழங்குகிறார்கள். அண்மையில் இவரது சிறைப்படுத்தலிலிருந்து வெளியேறித் தப்பியோடிய போராளிகள் இவரது திருகுதாளத்தைப் புரிந்து கொண்டு வெளியேறியதை இந்த அப்பாவிகள் புரிவதற்கு நியாயமில்லை.

தமிழ்அலையைத் தனக்கான பிரச்சார ஊடகமாகப்பயன்படுத்தும் கருணா தமிழ்அலை பத்திரிகைக்கு 50 மேற்பட்ட போராளிகளைக்காவலுக்கு நிறுத்தி அங்கு வேலைசெய்வோரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தான் சொல்வதைச் செய்ய வேண்டும் என்ற பணிப்பில் அந்தப்பணியாளர்களையெல்லாம் திறந்த சிறைக்கதவுகளுக்கு மத்தியில் வைத்திருப்பது பத்திரிகா தர்மத்துக்கு எந்த வகையில் உடன்பாடு ?

அண்மையில் பீபீசியில் பேட்டி கொடுத்த கருணா கரிகாலனின் மனைவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அதைவிட அவர் வருத்தக்காறி எனவேதான் நான் கரிகாலனை வன்னிக்கு அனுப்பியதாக சொல்லியிருந்தார். இவரது சகோதரனான றெஜி மற்றும் இன்னும்பல தளபதிகள் யாழ்ப்பாணத்தில்தான் திருமணம் செய்துள்ளார்கள். அப்படியிருக்க இவர் அப்படியொரு தகவலைச் சொன்னது நியாயமானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

றெஜி சகோதரனுக்காக கருணாவுடன் நிற்கிறார். அவரது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனைவியும் 3பிள்ளைகளும் வன்னியில் இருக்கிறார்கள். றெஜி அவர்களை வன்னியில் விட்டுள்ளார். றெஜியின் நிலை உண்மையிலேயே வேதனையானது. ஏனெனில் சகோதரனுக்காக தாயகத்துக்குத் துரோகம் செய்வதா ? தனது மனைவி 3பிள்ளைகளுக்ககா வன்னி செல்வதா என்ற இக்கட்டில் இருந்தும் சகோதரனுடன் நிற்கிறார். கருணாவின் கூற்றுப்படி பார்த்தால் கருணாவின் மைத்துனியான றெஜியின் மனைவிக்கும் வருத்தம் என்பதாலா வன்னியில் இருக்கிறார் ? இதையெல்லாம் கருணாவுக்கு யார் புரியவைக்கப் போகிறார்கள் ???


கருணாவின் பிரதேசவாதத் து}ண்டலானது நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றதை கருணாவின் பிரச்சாரங்களும் , தகவல்களும் உலக , இலங்கை ஊடகங்களிலும் வெளியாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது தமிழ் ஊடகங்களும் கருணாவை முக்கியப்படுத்தி அவரிடம் செவ்வியெடுத்து ஒலிபரப்புவது மிகுந்த வேதனை தரும் விடயமாகும். ஆயினும் இந்தப்பிரிவினைவாதத்தைத் தமக்குச் சாதகமாக இலங்கை அரச ஊடகங்கள் , ஐரோப்பியாவிலிருந்து வரும் ரீபீசி ஆகியன பயன்படுத்திக் கொள்வதை நண்பர்களின் தகவல்கள் உறுதிசெய்கின்றன.

தலைவரின் காலத்திலேயே இப்படியான துரோகம் வெளிவந்ததையிட்டு ஓரளவு ஆறுதலடைய முடிகிறது. ஏனெனில் இன்னொரு துரோகி கருணாவின் உருவாக்கத்தை நமக்கு இல்லாமல் இருக்க எங்கள் தலைவர் காப்பாற்றுவார் தைரியத்தை நமக்குத் தந்திருக்கிறது. இந்த தைரியத்தில்தான் கருணா தன்னைத்தலைவனாகக் காட்டிக்கொண்டிருக்கும் மட்டு - அம்பாறை மாவட்டத்திலிருந்த போராளிகள் , தளபதிகள் வன்னிக்குப் போனார்கள். இதைப்புரியாத கருணா தன்னையே பெருந்தலைவனாகவும் இல்லாத விடயங்களையெல்லாம் து}க்கியெடுத்து தனக்குத்தானே மண்ணை வாரியிறைப்பது எதற்காக ?

TAMILWEBRADIO.COM
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 03-12-2004, 09:22 AM
[No subject] - by sOliyAn - 03-12-2004, 02:00 PM
[No subject] - by Eelavan - 03-12-2004, 03:11 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 04:02 PM
[No subject] - by Eelavan - 03-12-2004, 05:04 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 05:12 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 05:51 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 06:55 PM
[No subject] - by Sangili - 03-12-2004, 06:59 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 07:08 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 07:12 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 07:17 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 07:24 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 07:42 PM
[No subject] - by TMR - 03-12-2004, 09:18 PM
[No subject] - by Sangili - 03-12-2004, 10:38 PM
[No subject] - by vasisutha - 03-12-2004, 11:40 PM
[No subject] - by sOliyAn - 03-12-2004, 11:42 PM
[No subject] - by vasisutha - 03-13-2004, 12:05 AM
[No subject] - by anpagam - 03-13-2004, 12:44 AM
[No subject] - by vasisutha - 03-13-2004, 03:42 AM
[No subject] - by vasisutha - 03-13-2004, 03:48 AM
[No subject] - by TMR - 03-13-2004, 06:10 AM
[No subject] - by Mathivathanan - 03-13-2004, 09:05 AM
[No subject] - by shanthy - 03-13-2004, 10:42 AM
[No subject] - by anpagam - 03-13-2004, 03:47 PM
[No subject] - by Mathivathanan - 03-13-2004, 09:01 PM
[No subject] - by TMR - 03-14-2004, 07:23 AM
[No subject] - by TMR - 03-14-2004, 10:02 AM
[No subject] - by Mathivathanan - 03-14-2004, 11:11 AM
[No subject] - by TMR - 03-14-2004, 03:48 PM
[No subject] - by Mathivathanan - 03-14-2004, 03:54 PM
[No subject] - by TMR - 03-14-2004, 03:58 PM
[No subject] - by anpagam - 03-14-2004, 04:00 PM
[No subject] - by Mathivathanan - 03-14-2004, 04:11 PM
[No subject] - by TMR - 03-14-2004, 04:14 PM
[No subject] - by Mathivathanan - 03-14-2004, 04:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)