03-12-2004, 04:02 PM
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.....
இன்று எமது தாய் மண்ணில் நிகழும் சம்பவங்கள் மிகுந்த மனவேதனையைத் தருகின்றன
இதுவரை காலமும் இது தலைவருக்கும் தளபதிக்கும் இடையிலான பிரச்சனை விடுதலைப் புலிகளின் உள்வீட்டுக் குழப்பம் என்றவாறு புலம்பெயர் உறவுகள் என்ற முறையில் கைகட்டி கண்ணீர் மல்கப் பார்த்திருந்தோம்
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றவாறு மூண்ட உள்வீட்டுப் போரில் இணையத் தளங்களும்,செய்தி நிறுவனங்களும்,வானொலிகளும் குளிர்காய்கின்றன வாய்க்கு வந்தபடி அரசியல் பார்வைகள் ஆய்வுகள் பேட்டிகள் என்று ஊடகங்கள் சூடு பறந்த வேளையிலும் நாம் கைகட்டிப் பார்த்தவண்ணம் இருந்தோம்
இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் படங்கள் வெளிவந்தன அம்மானின் தளத்தின் ஆயுத பலத்தின் வெளிக்காட்டலாய் அவை இருந்தன சந்தோஷம் மழையிலும் குளிரிலும் கஷ்டப்பட்டு நாம் உழைத்த பணத்தின் ஒரு பகுதி இன்று எறிகணையாகவும் எறிகணை செலுத்தியாகவும் மாறியிருக்கின்றன
ஆனல் அந்தோ பரிதாபம் எந்தவொரு எதிரியிடமிருந்து எம்மண்ணைக் காபதற்கு நாம் இவற்றை கொடுத்தோமோ அவை இன்று அதே எதிரியின் சொல் கேட்பனவாய்
எந்தவொரு தலைவரை நம்பி நாம் இவற்றை ஒப்படைத்தோமோ அதே தலைவருக்கும் அவரது போராளிகளுக்கும் ஏன் எம் எல்லோருக்கும் எதிராக அவற்றின் சுடுகுழல்கள் திரும்பியிருக்கின்றன
இவற்றுக்குக் கூட எம்மால் முடிந்தது பெரு மூச்சும் ஒரு துளி கண்ணீரும்தான்
அம்மானுக்குத் தான் தெரியும் போர் முனையின் வேதனை என்றால் எமக்குத் தான் தெரியும் அந்த போர்முனையை அம்மானுக்குச் சாதகமாக மாற்றியது எமது பணம் என்றும் அதற்காக நாம் பட்ட வேதனையும்
இன்று எமது பணம் எந்தவொரு உறவுகள் வெற்றிகளைக் குவிக்கவேண்டுமென்று நாம் கொடுத்தோமோ அதே உறவுகளின் உதிரம் குடிக்கத் தயாராகவிருக்கிறது இதற்கும் நாம் வாளாவிருப்போமேயானால் அவமே போவதைத் தடுக்கமுடியாது
இப்போது நிலைமை அபாயகரமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது அம்மானது சுயநலத்துக்கு அப்பாவிப் பொதுமக்களைப் பலி கொடுக்கத் துணிந்து விட்டார்கள்
எந்தவொரு மக்களுக்காக தலைவர் மௌனம் காக்கிறாரோ அதே மக்களைப் பகடைக் காயாக்கி விளையாடத் துணிந்துவிட்டனர்
ஏதுமறியா அப்பாவிப் பொதுமக்கள் சிலரை உண்ணவிரதமிருக்கவைத்து எந்தவொரு சக்தியை, ஈகத்தை, உன்னத தியாகத்தை நாம் எமதென்று இறுமாந்திருந்தோமோ அந்த வழியை அன்னை பூபதியும் அண்ணன் திலீபனும் காட்டிய வழியைக் கொச்சைப்படுத்தும் நோக்குடன் திட்டமிட்டுள்ளார்கள்
இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் இவர்களது துரோகத் தனதுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிவிடக் கூடாது
தென் தமிழீழ மக்களுக்காகப் போராடி அவர்கள் காலடியில் உயிர்விடுவதை தனது வாழ்வின் உன்னத நோக்கமாக அறிவித்த கருணா தனக்காக உண்ணாவிரதமிருக்க ஏதுமறியா அப்பாவிகளை அழைத்தது ஏன்? தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை மட்டு அம்பாறை மாவட்டங்களுக்கு தான் வேண்டும் நீதி கிடைக்கும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கலாமே
போராடப் பயப்படாத கருணா உயிரைத் துச்சமென மதிக்கும் கருணா உண்ணாவிரதத்துக்கு மட்டும் மக்களைப் பலிகொடுக்க முயல்வது ஏன்?
இதனையும் பார்த்துக் கொண்டிருப்போமேயனால் நாம் போராட்டத்திற்கு இதுவரை காலமும் வழங்கி வந்த தார்மீக ஆதரவு விழலுக்கு இறைத்த நீராகிவிடும்
எந்தவொரு சர்வதேச சமூகத்திற்கும் மனித உரிமை நிறுவனங்களுக்கும் தமது உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாய் இவர்கள் நாடகமாடவிருக்கிறார்களோ அந்த மைப்புகளுக்கு நாம் நிலைமையைத் தெளிவு படுத்தவேண்டும் அதே அமைப்புகள் மூலம் அழுத்ததைப் பிரயோகித்து கட்டாயத்தின் பேரில் உண்ணாவிரதமிருக்கும் எமது உறவுகள் மீட்டெடுக்கப்படவேண்டும்
அதே போன்று பிரதேசவாதக் கருத்துக்கள் மறந்து ஒன்றுபட்ட தமிழ்த் தேசியம் என்பதையும் வலியுறுத்தவேண்டும் இதன் முதற்கட்டமாக சர்வதேச தமிழ் மாணவர் அமைப்புகள் சார்பில் குரலெழுப்புவதற்கு ஆவன செய்து வருகிறோம்.
அதே போன்று நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் நிறுவனங்கள் என்பவற்றினதும் ஒட்டுமொத்த ஆதரவு தமிழ்த் தேசியத்துக்கே என ஒலிக்கவேண்டும்
உங்கள் ஆதரவுடன் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவர், ஐரோப்பியத்தமிழ் மக்கள் என்ற பெயர்களில் வெளிவரும் பித்தலாட்டங்களை மூட்டை கட்டி அனுப்புவோம்
தமிழர் தாகம் தமிழீழத் தாயகமேயன்றி வடதமிழீழம் ,தென் தமிழீழம் என்ற பிரதேசவாதமல்ல
சர்வதேச தமிழ் மாணவர்களில் ஒருவனாக
ஈழவன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பழையதுகளை ஞாபகமூட்டுறியள்..

Truth 'll prevail