03-11-2004, 03:40 AM
BBC Wrote:Eelavan Wrote:[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!
இதற்கு இரண்டுவிதமாகக் காரணம் கொள்ளலாம்
1)உங்கள் மீதான அதீத அக்கறை அதன் காரணமாக எழுந்த பயம் இயல்பாகவே எல்லோரையும் இப்படிக் கூறத் தூண்டும்
2)தன் உயிர் மேலுள்ள பயம் இது சாதாரணமாகவே எல்லோருக்கும் எழக் கூடியது
இவை இரண்டும் அவருக்கு ஏற்பட முக்கிய காரணி அவர் உங்களின் சாரத்தியத்தில் கொண்டுள்ள அவநம்பிக்கையே அடிப்படை
இதற்கு நீங்கள் இருவகையில் தீர்வு காணலாம் உங்களின் சாரத்தியத்தில் நம்பிக்கை ஏற்படும்படி அவருக்கு எடுத்துக் கூறலாம் அல்லது செய்து காட்டலாம்
அல்லது உங்களின் திறமை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் அவர் சொல்வதற்கு செவிமடுக்காமல் வாகனத்தை ஓட்டலாம்
எது எப்படியிருப்பினும் வாகனம் விபத்துக்குள்ளானால் உங்களுக்கும் பாதிப்பு உண்டு
ஈழவன் மேலே இருக்கின்ற இரண்டு காரணங்களும் புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால் இன்னொரு காரணமும் உண்டு. அது அவர் சொன்னவாறு சொன்ன பாதையில் தான் வாகனம் போகவேண்டும் என்ற நோக்கம். வாகனத்தின் கட்டுப்பாடு தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்ற நோக்கம்.
தாம் தீர்மானித்த பாதையில் வாகனம் போகவேண்டுமென்றது அவரது நோக்காக இருந்தாலும் அடிப்படை என்னவோ விபத்து நடக்காமல் தடுப்பதும் அதில் நான் சொன்ன உங்கள் பாதுகாப்பு மற்றும் தனது பாதுகாப்பும் தான் இல்லவிட்டால் நீங்கள் இடம்போனால் என்ன வலம் போனால் என்ன
ஓட்டுவது அவரது சொந்த வாகனமாக இல்லாதவிடத்து அவரை இறக்கி விட்டு ஓட்டிப் பாருங்கள் இப்படிக் கவலைப் படுகிறாரா என்று உண்மையில் கவலைப் பட்டால் அவர் உணமியிலேயே உங்கள் பாதுகாப்பை விரும்புகிறார்
அதுசரி நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடுதான் வெறுமனே தமிழ் வாழ்க என்று மேடையில் மட்டும் முழங்குவது எனக்கும் பிடிக்காது பேச்சிலும் மூச்சிலும் தமிழ் இருக்க வேண்டும்
நான் வெட்டி ஒட்டுவது பற்றி ஏன் சொன்னேன் என்றால் அந்தந்தக் கருத்துக்குரியவர்களும் களத்தில் உள்ளனர் நீங்கள் அவர்கள் கருத்தை சொல்வதால் அவர்கள் முன் வைக்கும் பதில்கள் கிடைக்காமல் போகும் நீங்கள் உங்கள் கருத்தை மட்டும் முன் வையுங்கள் உதாரணம் வேண்டுமானால் அவர்களைக் காட்டுங்கள்
\" \"

