03-11-2004, 02:47 AM
<b>தமிழ் மக்கள் அணிதிரண்டு நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு பறை சாற்றும் தேர்தலாக இத் தேர்தல் அமைய வேண்டும்: புதுரை இரத்தினதுரை </b>
தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் அணி திரண்டு நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு பறை சாற்றும் தேர்தலாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் அமைய வேண்டும். இதன் மூலமே தமிழர் பலத்தை வெளிக்காட்;ட முடியும். எனவே இந்தத் தேர்தல் ஒரு போடி போக்கான தேர்தலாக அமையக் கூடாது.
இவ்வாறு, தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பிற்பகல் யாழ் பல்கலைக்கழக நு}லகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிதர்சனம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'அம்மா நலமா" என்ற முழு நீளத் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெளியீட்டுரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது விடுதலைப் போராட்டம் ஏதோ ஒரு வகையில் தொடருமா அல்லது சந்தைக் கூட்டம் போல் கூடக் கலையுமா? என்று உலகம் பார்க்கின்றது போல் தெரிகின்றது.
இந்தத் தேர்தல் மூலம் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாவிட்டாலும் ஒன்றேயொன்று ஏற்படப் போகிறது. அது உயிரையும் இரத்தத்தையும் விதைத்து நடக்கின்ற இந்தப் போராட்டம் நின்று விடுமா அல்லது பெரிய முனைப்புடன் தொடர்ந்து இறுதி வரை நடக்குமா என்ற சமிக்ஞையாக இந்த தேர்தல் அமையப்போகிறது.
அதைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக நீங்கள் இருக்கப் போகின்றீர்கள். பல கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் உங்கள் மத்தியில் இருக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் விதைத்துப் புதைத்த அந்த மாவீரர்களின் கனவான இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அது ஒரு சமிக்ஞையாக இந்த பொதுத் தேர்தல் அமையப்போகிறது.
puthinam.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>