03-10-2004, 11:49 PM
Eelavan Wrote:[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!
இதற்கு இரண்டுவிதமாகக் காரணம் கொள்ளலாம்
1)உங்கள் மீதான அதீத அக்கறை அதன் காரணமாக எழுந்த பயம் இயல்பாகவே எல்லோரையும் இப்படிக் கூறத் தூண்டும்
2)தன் உயிர் மேலுள்ள பயம் இது சாதாரணமாகவே எல்லோருக்கும் எழக் கூடியது
இவை இரண்டும் அவருக்கு ஏற்பட முக்கிய காரணி அவர் உங்களின் சாரத்தியத்தில் கொண்டுள்ள அவநம்பிக்கையே அடிப்படை
இதற்கு நீங்கள் இருவகையில் தீர்வு காணலாம் உங்களின் சாரத்தியத்தில் நம்பிக்கை ஏற்படும்படி அவருக்கு எடுத்துக் கூறலாம் அல்லது செய்து காட்டலாம்
அல்லது உங்களின் திறமை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் அவர் சொல்வதற்கு செவிமடுக்காமல் வாகனத்தை ஓட்டலாம்
எது எப்படியிருப்பினும் வாகனம் விபத்துக்குள்ளானால் உங்களுக்கும் பாதிப்பு உண்டு
[size=18]சரி உங்கள் பார்வையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
சரி நீங்கள் ஒருசான்றிதழ் பெற்ற சமையலாளர். புலம் பெயர் நாட்டில் ஒரு உணவு விடுதியில் வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.அங்குள் சகல மனுக்களையும் அழகுற செய்வதில் மிகவும் தேற்சி பெற்றுள்ளீர்கள். ஆனாலும் ஒரே நேரத்தில் பல சாப்பாட்டு கட்டளைகள் வருகிறபோது உங்கள் முதலாளி உங்களிற்கு உதவ வருகிறார். நீங்கள் சகல சாப்பாட்டு கட்டளைகளையும் புரிந்து செயல்படுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். திடீர் என உங்கள் முதலாளி உங்களிற்கு உதவி செய்ய முனைகிறபோது தானும் சகல சாப்பாட்டு கட்டளைகளை வாசித்து விட்டு இறைச்சி இரத்தம் இருக்க கூடியதான பொரிக்கவும் வெங்காயம் சீஸ் எடுத்து வைக்கவும் மறந்து போகாமல் உருழைக் கிழங்கை நீராவிஅவிக்கும் மெசினில் உருழைக் கிழங்கை வைக்கவும் சீசை எடுத்து கூழாக்கவும் என உங்கள் கிரகித்தல் திறனையே சிதறடிக்கிற தன்மை நிகழ்கிறது அப்போது என்ன செய்வீர்கள்? ( ஆனால் நீங்கள் இவற்றில் சிலதை ஏற்கனவே செய்து தயார் நிலையில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் மனநிலை என்ன? உங்கள் சங்கடம் என்ன? எரிச்சல் தரக் கூடியது என்ன? இதை விட வேறு என்ன உணர்வுகள் உங்களிற்கு தோன்றும்?
[b]Nalayiny Thamaraichselvan

