03-10-2004, 11:10 PM
<b>சிங்கப்பூர் - (3/இறுதிப் பகுதி) - சந்திரசேகரன் </b>
மலாய் (மலே) மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். ஆண்களும், பெண்களும் பூப் போட்ட கலர் சட்டை போட்டுக் கொண்டு காணப்படுவர். இஸ்லாமியக் கடமைகளும், தொழுகைகளும் கடைப்பிடித்தாலும் மதுக் கடைகளிலும், இரவு விடுதிகளிலும் எல்லாச் சமூகத்தாரைப் போலும் பங்கு பெறுவர். கடின வேலைகளில், அமெரிக்காவில் கருப்பினத்தவர் போல், அதிகம் ஈடுபடுவர். டாக்சி (டெக்ஸி) ஓட்டிகளாகவும், மதுக் கடைகளில் குண்டர்களாகவும் (பவுன்சர்), ராணுவத்திலும் அதிகம் காணப்படுவர். பெரும்பாலானவர்கள் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொண்டு பொருளாதாரத்துக்கு அல்லாடுவர்.
மலேசியாவிலிருந்து மலாய் மக்கள் சிங்கப்பூர் தொழிற்சாலை வேலைகளுக்கு அதிகம் வருவர். சிங்கப்பூர் அரசின் தொடர் ஊக்குவிப்பாலும் மலேசியத் தலைவர் மகாதிரின் 20/20 அம்சக் கொள்கைகளாலும், மலாய் மக்கள் உயர் கல்வியின் முக்கியத்துவம் புரிந்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர்.
இவர்கள் நாஸி லெமாக் என்ற பெயரில் செய்யும் தேங்காய் சாதம் புகழ் பெற்றது. தேங்காய்ப்பாலில் சமைக்கப்பட்ட சாதமும், ஒரு வறுத்த சிறிய மீனும் கொண்ட இந்த நாசி லெமாக்கை காலை உணவாக ஹாக்கர் சென்டர்களில் விற்பனை செய்வார்கள். மலாய் கடைகளில் ஜிகினாத் துணிகளும், பத்திக் வகை உடைகளும், ஓலைப் பாய்களும், விசிறிகளும் கிடைக்கும்.
தமிழர்கள் இருவகைப் படுவர். தமிழகத்திலிருந்து வந்தவர்கள் மற்றும் சிங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவகையினரும் இருப்புப்பாதை மாதிரி இணையாமல் இணைந்து காணப்படும் ஒரு தோற்றம் உண்டாக்குவர். கோவிந்தசாமி பிள்ளை என்பவர்தான் முதன் முதலில் தமிழர்களுக்கான மளிகைக் கடை ஆரம்பித்தவர் என்ற கருத்து உண்டு. ஒரு காலத்தில் மிகவும் அந்தக் கடை பிரபல்யமாய் இருந்தது. இப்பொழுது அது இடிக்கப் பட்டு, சிறிய பெட்டிக் கடையாக அவரது சந்ததியரால் நடத்தப்பட்டு வருகிறது. முன்பைவிட சிங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கடந்த இருபது வருடங்களுக்குள் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.
தர்காக்களும், கிறித்தவ, இந்து, சீக்கியர் கோயில்களும் நிறைய உண்டு. சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலும், செட்டியார் கோவில் என்றழைக்கப்படும் முருகன் கோயிலும் பிரபலம். தோபாயோ என்ற இடத்திற்கருகில் இருக்கும் சிவன் ஆலயத்தில் பக்தர்களே அபிஷேகம் செய்யும் வகையில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் உணவகங்களுக்கும் குறைவில்லை. தமிழர் கடைகளில் மற்ற இனத்தவர் சுலபமாகத் தோசைகளை சட்னி சாம்பாரில் முக்கி சாப்பிடும் காட்சி சர்வ சாதாரணம். கோமளவிலாஸ் உணவகம் சைவ உணவுக்குப் புகழ் பெற்றது. வாழையிலையில் பொரியல், கூட்டுடன், கமகம சாம்பாருடன் நம் தென்னிந்திய சாப்பாடு இங்கு பிரபலம். மாடர்னாக சாப்பிட விரும்புவோர் அவர்களின் இன்னொரு கிளையான கோமளாஸ் செல்லலாம். இங்கு அதே உணவுகளை அட்டைப்பெட்டியில் கிடைக்கும்.
அசைவ உணவு வேண்டுவோருக்கும் ஹாக்கர் சென்டர்களில் இந்தியரின் உணவுக் கடைகளும், கோமளாஸ் போல் நாகரிக ரெஸ்ட்டாரண்ட்களும் உண்டு. முத்துக்கறி உணவகம், மீன் தலைக்கறி உணவுக்குப் பெயர் பெற்றது. பிரியாணி, பரோட்டா போன்ற சமாச்சாரங்களும் உண்டு. முர்தபா என்று பெரிய பரோட்டாவில் வருத்த இறைச்சித்துகள்களை வைத்து, ஸ்ட?ப்டு பரோட்டா ரேஞ்சுக்கு 5 வெள்ளிக்கு குறையாமல் விற்பார்கள்.
தமிழர் பண்டிகை, திருவிழா போன்ற சமயங்களில் சிராங்கூன் சாலையில் திடீர்க் கடைகள் தோன்றும். அப்பண்டிகைக்கானப் பொருட்களை சந்தை ஏற்றுவர். வாழை மரம், மாவிலை, தோரணம், கரும்பு, மஞ்சள் கொத்து எல்லாம் கிடைக்கும். தமிழ்ப் பத்திரிகைகள், அமுதசுரபியிலிருந்து, ஷகிலா அட்டைப்படம் போட்ட திரைவிருந்து, திரைச்சுவை வரை எல்லாம் உடனே உடனே கிடைக்கும். குமுதம் இதழ் ஒன்று 2 டாலருக்கு விற்றனர்.
தமிழ் சினிமா இரண்டுமூன்று திரையரங்குகளில் வெளியிடுவர். சூப்பர் ஸ்டார் படத்துக்கு மட்டும் சூப்பர் கூடுதல் காசு வசூலிப்பர். சிடி இசைத் தட்டுகள், ஒலி நாடாக்கள் நிறைய உண்டு. மலேசியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும் இவை ரோடு கடைகளில் எல்லாம் கிடைக்கும். முஸ்தபா போன்ற அங்காடிகளிலும் அடுக்கு வைத்திருப்பர். தமிழகத்தில் கிடைக்காத விசிடி, டிவிடி எல்லாம் கிடைக்கும். விலையும் அதிகம் இல்லை. இரண்டாண்டுக்கு முன் உன்னிகிருஷ்ணனின் கர்நாடக கச்சேரி விசிடி ஒன்றை நான்கு (சி)டாலருக்கு வாங்கியிருக்கிறேன்.
தமிழ் ஒலி 96.8 தமிழர்களிடையே பிரசித்தி பெற்ற வானொலி நிலையம். இருபத்து நான்கு (அல்லது 22 ?) மணி நேரமும் நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் கேட்கலாம். இப்பொழுது இணையம் மூலமும் சேவை வழங்குகிறார்கள். "எளிய இலக்கணம்" என்று பெயர் வைத்து, கடின இலக்கிய விளக்கங்கள் அளிப்பார்கள்.
இந்தி பேசும் வட இந்தியர்களுக்கான இடம் ஹைஸ்ட்ரீட் எனப்படும். இங்குள்ள துணிக்கடைகள் நிறைய பஞ்சாபிகளால் நடத்தப் படுகின்றன. இப்பகுதியில் உள்ள உணவுக் கடைகளில் ரொட்டி, சப்பாத்தி, பஞ்சாபி தாபா வகை உணவுகள் கிடைக்கும். சிங்கப்பூர் தமிழர்கள், டர்பன் கட்டிய சீக்கியர்களை "வங்காளி" என்றே அழைப்பது வினோதம்.
சிங்கப்பூரர்கள் தாங்கள் பேசும் இறுதி வார்த்தையுடன் அடிக்கடி "லா" என்று சேர்த்துச் சொல்வார்கள். ஒருவேளை சிங்கப்பூரில் லா (Law) கடுமையாகக் கடைப்பிடிப்பதை உணர்த்த அவ்விதம் பேசுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும். சூயிங்கம் மென்று துப்பி இடத்தை அசிங்கமாக்குவதாலும், யாரோ ஒரு துஷ்டன் வேக இரயில் கதவுகளுக்கிடையே கம்மை ஒட்டி, கதவுகள் சரியாக வேலை செய்யாததாலும், சிங்கப்பூரில் சூயிங்கம் விற்பதற்குத் தடை செய்துள்ளனர். ஆனால் மக்கள் பக்கத்து ஊரான ஜொஹ?ர்பாரு (மலேசியா) சென்று ரகசியாமாய் வாங்கி வருவர்.
அடிக்கடி கோடம்பாக்கத்திலிருந்து நடிகர்களும், நடிகைகளும், சிங்கப்பூர் வந்து தையத்தக்கா டான்ஸ் ஆடிவிட்டு, சில பல பெரும் பணக்காரர்களுக்கு கம்பெனி கொடுத்துவிட்டு, முஸ்தபாவில் மேக்கப் சாமான்கள், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு சென்னை சென்றுவிடுவர்.
ஆர்ச்சர்ட் ரோட் முக்கியமான இடம். பல பெரிய அங்காடிகளும் செல்வந்தர்கள் மட்டுமே செல்லக்கூடிய பெரிய ஹோட்டல்களும் இங்கு அதிகம். CK TANG எனப்படும் அங்காடி சரித்திரப் புகழ் பெற்றது. இவரும் கிட்டத்தட (கோவிந்தசாமி பிள்ளை மாதிரி) சீனாவிலிருந்து சிறு பெட்டியுடன் வந்து (பெட்டிக்குள் பணம் எல்லாம் இல்லை !) சிறு கடை ஆரம்பித்து, பெரிய வளர்ச்சி கண்டவர். ஆர்ச்சர்ட் சாலையின் மையத்தில் சீனப் பாரம்பரியத்துடன் இந்தக் கடை அமைந்துள்ளது. தக்காசிமாயா என்ற ஜப்பானிய பல அடுக்கு, பள பள அங்காடியில் எல்லாவித சாமான்களும் கிடைக்கும்.
செந்தோசா தீவு என்ற சுற்றுலா மையத்துக்கு கேபிள் கார் அல்லது படகில் சென்று வரலாம். சிங்கப்பூரின் சரித்திரத் தகவல் நிலையமும் இசைக்கு ஏற்ப ஆடும் நடன நீரூற்றுகளும் இங்கு ரம்மியமானவை. ஜுரோங் பறவைப் பூங்காவில் கக்கட்டு எனப்படும் ராட்சதக் கிளிகள் சைக்கிள் ஓட்டும். மிருகக்காட்சிசாலையில் குரங்குகள் செய்யும் மாஜிக் நிகழ்ச்சி, யானைகளின் கூட்டணி, கடல் சிங்கங்களின் விளையாட்டு, மலைப்பாம்பைக் கழுத்தில் அணிவித்து போட்டோ, என்று நிறைய பொழுதுபோக்குகள் உண்டு.
சிங்கப்பூர் அரசு, மக்களுக்கான அரசாங்க சேவைகளில் முதலிடம் வகிக்கிறது. எல்லாவற்றிலும் ஒழுங்கு கட்டுப்பாடு என்று சற்று மிகையாகத் தோன்றினாலும், இடம், இனம், மக்கள் என்று பார்க்கும் பொழுது, இவ்வகைக் கட்டுப்பாடுகள் அவர்களின் வசதியான வாழ்வுக்குத் தேவை எனத் தெரிகிறது. இவ்வகைக் கட்டுப்பாடுகள் தற்போதைய தலைமுறைகளுக்கு இரத்தத்தில் ஊறி விட்டதால் வரும் ஆண்டுகளில் இது பெரிதாகத் தோன்றாது.
நிறைய சுற்றுலா இடங்களும், அழகான கட்டிடங்களும், பல இன மக்கள் சேர்ந்து அமைதியாக வாழும் இடமாகவும் உள்ள சிங்கப்பூர் உண்மையிலேயே "ஜாய்?புல் சிங்கப்பூர்" தான்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>