Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழருக்கு ஏற்ற வெளிநாடு ?
#53
<b>சிங்கப்பூர் - (2) - சந்திரசேகரன் </b>


சரி, சிங்கப்பூர் முஸ்தபா கடையைவிட்டுச் சற்று வெளியே வருவோம். இரண்டு நாட்களுக்கு முன் சீனப் புத்தாண்டு. அதைப் பற்றி அருமையாக இணையப் பெரியவர் திரு ஜே.பி. அகத்திய மடற்குழுவில் எழுதியுள்ளார். சீனர்களுக்குப் பிடித்த நிறம் சிவப்பு. பிடித்த நம்பர் 8. பிடித்த பழம் ஆரஞ்சு.

சீனர்கள் நல்ல உழைப்பாளிகள். ஆனாலும் சூதாட்ட விரும்பிகள். நாலு நம்பர் (4D) லாட்டரி ஆட்டத்துக்கு டாலர் டாலராக செலவு செய்வர். ஏதேனும் கார் விபத்துக்குள்ளானதா ? உடனே அந்தக் காரின் நம்பரில் நாலு நம்பர் லாட்டரி வாங்குவர். அதாவது, ஒரு துரதிருஷ்டத்திற்குப்பின் வரக்கூடியது அதிர்ஷ்டம்தான் என்ற ஏராள நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் நாம், "பட்ட காலிலே படும்" என்று புலம்பிக்கொண்டிருப்போம்.

வீட்டில் இருக்கும் சீன மாதுக்கள், சகாக்களை சேர்த்துக் கொண்டு காசு வைத்து மாஜோங் ஆட்டம் நாள் முழுதும் ஆடுவர். தங்கள் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அந்த துக்க நிகழ்ச்சியைத் தெரு முழுதும் ஷாமியானா அடைப்பு போட்டு, ரவுண்டு ரவுண்டாக டேபிள் சேர் போட்டு துக்கம் விசாரிக்க வரும் நபர்களுக்கு, வறுத்த வேர்க் கடலை, பூசணி விதை, தேநீர் கொடுத்து உபசரிப்பர். பின்பு இரவு முழுதும் மாஜோங் போன்ற சூதாட்டங்கள் விளையாடுவர்.

அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தினுசு தினுசான சீன உணவுகள் சிங்கப்பூரில் பிரசித்தம். முதலை மாமிசம் கூட கிடைத்தது. இப்பொழுது தடை செய்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.

சூரியனுக்கு முதுகைக் காட்டும் எல்லா உயிரினங்களையும் சீனர்கள் உண்பர் என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. சீனர்களுக்குப் பன்றி முக்கிய உணவு. மலாய்க்காரர்களுக்கு பன்றி முதன்மை எதிரி. ஒருமுறை ஆர்ச்சர்ட் ரோட் சென்ட்ரல்பாயிண்ட் ஷாப்பிங் அருகில் ஒரு கடையில் அதிரசம் என்று என் நண்பர் ஏமாற்றி ஒரு பண்டத்தைக் காட்டினார். அருகில் சென்று பார்த்தால் அசைவ உணவை அறியாத என் மூக்கில் அதிரடித் தாக்குதல். பன்றி மாமிசத்தை உள்ளங்கை அகலத்துக்கு சதுரமாகவோ, வட்டமாகவோ சீவி வெல்லச் சீனி போட்டு நெய்யில் பொரித்தெடுத்து அதிரசம் போல் அடுக்கி வைத்து சுடச் சுட வியாபாரம். அசைவம் அறியாததால் பார்த்துவிட்டு நொந்துபோனேன்.

நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாம்பா - என்று நூடுல்சை நோகுதலுக்கு ஒப்பிட்டு சினிமா வசனங்கள் கேட்டுள்ளோம். ஆனால் நூடுல்சில் பல வகை உண்டு. சேமியா (மீ) வகை, நாடா (கேத்தியாவ்) வகை, தேன்குழல் வகை, முள்ளு முறுக்கு வகை என்று தினுசு தினுசாகக் கிடைக்கும். கொதிக்கும் நீரில் பச்சை பன்றி மாமிசத்துண்டுகள் போட்டு, நூடுல்சுடன் கலந்து "ச்ருட், ச்ருட்" என்று உறிஞ்சி சாப்பிடுவார்கள்.

சீனர்கள் மரக்கறி (வெஜிடேரியன்) சாப்பிட மாட்டார்களா? சாப்பிடுவார்கள். அதற்கென்றே தனிப்பட்ட உணவகங்கள் உண்டு. எல்லாம் சோயா மாவில் செய்யப்பட்ட மாமிசம் இல்லாத பண்டங்கள். ஆனால் அந்தப் பண்டங்களை மாமிச உணவு போல் வடிவமைத்திருப்பதுதான் சோகமே!

ஹாக்கர் சென்டர் சிங்கையில் பிரசித்தம். ஒரு பெரிய கட்டிடத்தின் ஒரு தளத்தில் சிறிய ஸ்டால்களாக பல உணவுக்கடைகள் ஒன்று கூடியிருக்கும். தோல் உரிக்கப்பட்ட வாத்துகள் தொங்கிக் கொண்டிருக்கும். கண்ணாடிப் பெட்டிகளில் உயிருடன் கடல் வாழ் உயிரினங்கள் விதி வலி தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கும். சீன, மலாய், இந்திய, கிழக்காசிய நாட்டு உணவுக் கடைகளின் சங்கமம் தான் இந்த ஹாக்கர் சென்டர். பழக்கம் இல்லாதவர்களுக்கு, அதன் "நறுமணம்" வயிற்றைக் குமட்டும்.

ஏதேனும் ஒரு டேபிள் பிடித்து உட்கார்ந்தவுடன், எல்லா விரல்களிலும் பெரிய மோதிரங்கள் அணிந்து, இடுப்பில் ஒட்டியாணப் பணப்பை அணிந்த நடுத்தர வயது மாது, "குடிக்க என்ன வேண்டும்" என்று சீன மலாய் உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் விசாரிப்பார். ஐஸ் கட்டிகள் போட்ட ஒரு கிளாஸ் சுடுதண்ணீருக்கு முப்பது காசு. பிரசித்தி பெற்ற டைகர் பியர் முழு பாட்டிலுக்கு சுமார் 6 வெள்ளி. மற்ற காபி (கோப்பி), ஹார்லிக்ஸ் போன்றவையும் ஓரிரண்டு டாலருக்குள் கிடைக்கும். உணவு வேண்டுமானால், உங்களுக்குப் பிடித்த உணவு ஸ்டாலுக்குச் சென்று, காசு கொடுத்துவிட்டு வேண்டிய உணவை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பக்கத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள், பெரிய நண்டுகளும் சிறிய ஆமைகளும், பெரிய குழாய் மீன்களும் (லாப்ஸ்டர் / ஷெல்?பிஷ்) உயிருடன் நீந்திக் கொண்டிருக்கும். வேண்டியதைச் சொன்னால், அதைப்பிடித்து, வருத்தோ, அவித்தோ, பொரித்தோ கொடுப்பார்கள். இவ்வகை உணவுகளுக்கு விலை அதிகம் வசூலிப்பார்கள். ஆனால் பெரிய ரெஸ்ட்டாரெண்ட்களைவிட விலை கம்மி.

மதிய உணவு நேரச் சமயங்களில் சென்றால் இவ்வகை ஹாக்கர் சென்டர்களில் இடம் கிடைப்பது அரிது. நெருக்கி அடித்து உட்கார்ந்து கொண்டு, அடுத்தவர் தட்டில் "சாப்" ஸ்டிக்கோ, முள் கரண்டியோ படாமல் சாப்பிட வேண்டியிருக்கும். சாப் ஸ்டிக் என்பது இரண்டு ஒல்லியான குச்சிகள் கொண்டு, உணவுப் பண்டங்களை தட்டிலிருந்து பிடித்துச் சாப்பிடுப் பயன்படுவது. பட்டன் மஷ்ரூம் இக்குச்சிகளில் சிக்காமல் வழுக்கி வழுக்கி ஓடும். பொரித்த கடலையும் இக்குச்சிகளில் பிடிபடாது. அலுவலக கேளிக்கை விளையாட்டுகளில் ஸ்பூன்-எலுமிச்சம்பழம் ரேஸ் போல் இக்குச்சிகளில் கோலிக்குண்டுகளைப் பிடித்து இன்னொரு டப்பாவில் போடும் சவால் விளையாட்டுகளும் உண்டு.

நியூட்டன் சர்க்கிள் என்ற இடத்தில் மிகப் பெரிய ஹாக்கர் சென்டர் உள்ளது. மாலை நேரத்தில் இங்கு எக்கச்சக்க கூட்டம் கூடும். அமெரிக்க, ஐரோப்பியர் நிறையப் பேர் இங்கு வருவர். நள்ளிரவு வரை குடியும், வித வித உணவுமாக ஆண்களும் பெண்களும் பொழுதைக் கழிப்பர். வெள்ளிக் கிழமை இரவு இந்த இடம் மிகப் பிரசித்தம். அவ்வப் பொழுது குடியில் மூழ்கி, குடி முழுகிப் போன மாதிரி நடக்கும் அடிதடி சண்டையும் காணக் கிடைக்கும்.

(தொடரும்...)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-28-2004, 12:29 AM
[No subject] - by வழுதி - 02-28-2004, 01:11 AM
[No subject] - by tamilini - 02-28-2004, 09:26 AM
[No subject] - by shanmuhi - 02-28-2004, 07:27 PM
[No subject] - by anpagam - 02-29-2004, 12:25 AM
[No subject] - by anpagam - 02-29-2004, 12:45 AM
[No subject] - by shanmuhi - 02-29-2004, 09:11 AM
[No subject] - by Paranee - 02-29-2004, 09:34 AM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:56 AM
[No subject] - by Mathan - 02-29-2004, 12:00 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 12:22 PM
[No subject] - by anpagam - 02-29-2004, 12:58 PM
[No subject] - by tamilini - 02-29-2004, 04:58 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 10:35 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 10:58 PM
[No subject] - by adipadda_tamilan - 03-01-2004, 02:31 AM
[No subject] - by Mathan - 03-01-2004, 01:49 PM
[No subject] - by adipadda_tamilan - 03-02-2004, 06:08 AM
[No subject] - by Mathan - 03-04-2004, 08:27 AM
[No subject] - by Mathan - 03-04-2004, 05:53 PM
[No subject] - by adipadda_tamilan - 03-05-2004, 02:32 AM
[No subject] - by Mathan - 03-05-2004, 08:33 PM
[No subject] - by Rajan - 03-05-2004, 11:06 PM
[No subject] - by vasisutha - 03-06-2004, 12:09 AM
[No subject] - by vasisutha - 03-06-2004, 12:10 AM
[No subject] - by kuruvikal - 03-06-2004, 12:08 PM
[No subject] - by vasisutha - 03-06-2004, 03:21 PM
[No subject] - by Mathan - 03-06-2004, 08:37 PM
[No subject] - by anpagam - 03-07-2004, 01:04 AM
[No subject] - by anpagam - 03-07-2004, 01:18 AM
[No subject] - by kuruvikal - 03-07-2004, 09:40 AM
[No subject] - by TMR - 03-07-2004, 04:59 PM
[No subject] - by adipadda_tamilan - 03-08-2004, 05:39 AM
[No subject] - by Mathan - 03-08-2004, 01:11 PM
[No subject] - by adipadda_tamilan - 03-09-2004, 02:39 AM
[No subject] - by Mathan - 03-09-2004, 02:53 AM
[No subject] - by இராவணன் - 03-09-2004, 03:09 AM
[No subject] - by இராவணன் - 03-09-2004, 03:20 AM
[No subject] - by adipadda_tamilan - 03-09-2004, 04:29 AM
[No subject] - by anpagam - 03-09-2004, 11:16 AM
[No subject] - by kuruvikal - 03-09-2004, 11:35 AM
[No subject] - by kuruvikal - 03-09-2004, 11:52 AM
[No subject] - by anpagam - 03-09-2004, 12:03 PM
[No subject] - by Eelavan - 03-09-2004, 12:16 PM
[No subject] - by adipadda_tamilan - 03-10-2004, 12:59 AM
[No subject] - by vasisutha - 03-10-2004, 01:27 AM
[No subject] - by vasisutha - 03-10-2004, 01:41 AM
[No subject] - by pepsi - 03-10-2004, 04:16 AM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 10:17 AM
[No subject] - by anpagam - 03-10-2004, 11:14 AM
[No subject] - by Mathan - 03-10-2004, 11:05 PM
[No subject] - by Mathan - 03-10-2004, 11:08 PM
[No subject] - by Mathan - 03-10-2004, 11:10 PM
[No subject] - by anpagam - 03-12-2004, 01:52 AM
[No subject] - by Mathan - 03-13-2004, 02:02 AM
[No subject] - by anpagam - 03-16-2004, 02:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)