Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழருக்கு ஏற்ற வெளிநாடு ?
#52
<b>சிங்கப்பூர் - (1) - சந்திரசேகரன் </b>


சிங்கப்பூர் என்று யார் கூறக் கேட்டாலும் அழகிய கட்டிடங்களும், சுத்தபத்தமும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளும் வாசனைத் திரவியங்களும் உடனே மனதிற்குள் தோன்றும். சென்னை நகர் பரப்பளவை விட ஒரு சுற்று அதிகம் கொண்ட நாடு சிங்கப்பூர். உலக வரைபடத்தை நூறு மடங்கு பெரிது படுத்திப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய அத்தனை சிறிய தீவு. அதன் கடற்பரப்பில் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைக் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பரப்பளவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரில் விளை நிலங்கள் இல்லை. குடிநீர் இல்லை. விவசாயம் இல்லை. இயற்கை வளங்கள் இல்லை. ஆனாலும் கடந்த 35 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. கிழக்காசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மைய வியாபார கேந்திரம். எளிதான வியாபாரக் கொள்கைகள், ஆசிய, மற்றும் உலக நாடுகளுக்கு, சந்தைப் பொருட்களை பரிமாற்றம் செய்ய சிறப்பான துறைமுகங்களும், சுலப வரித் திட்டங்களும் இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம். சீனர்கள் பெரும்பான்மையினராகவும், மலாய் மக்கள், இந்தியர்கள் அடுத்தடுத்ததாகவும் கொண்ட இவ்வூரில் நான்கு தேசிய மொழிகள், சீனம் (மான்டரின் வழக்கு), மலே, தமிழ் மற்றும் ஆங்கிலம். இந்தியர்கள் மொத்த மக்கள் தொகையில் ஒரு 7 சதவீதம். அதிலும் தமிழர்கள் அதிகம்.

சென்னையிலிருந்து மூன்றரை மணி நேர விமானப் பயணத்தில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியவுடன், பிரமிப்பு ஏற்படுவது நிச்சயம். விமான நிலையத்தின் பளபளப்பும், பஞ்சு மாதிரி சீனப் பெண்களும், ஒளிரும் கடைகளும், நகரும் படிக்கட்டுகளும், க்ரீச் ஒலி எழுப்பாத ட்ராலி வண்டிகளும் புதிதாய் வருபவர்களை அசத்திவிடும். நான்கு தேசிய மொழிகளிலும் முக்கிய அறிவுப்புகள் கண்ணைப் பறிக்கும். வெளியில் வந்தவுடன், ஊருக்குள் செல்ல டாக்ஸி, இரயில் (MRT), பஸ் சேவைகள்.

கான்கிரிட் காடுகள் என்று செல்லமாக அழைப்பதற்குத் தோதாக, வானுயர்ந்த கட்டிடங்கள் சாலைகளின் இரு பக்கமும் அமைந்திருக்கும். சிங்கப்பூரின் இடப் பற்றாக்குறையே இத்தகைய உயர்ந்த கட்டிடங்களுக்கு காரணம். முக்கால்வாசிப்பேர், HDB என்றழைக்கப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வசித்து வருவர். கார் ரேஸ் வீடியோ விளையாட்டுகளில் வரும் தெருக்கள் போல் சாலைகள் அலம்பிவிட்ட மாதிரி சுத்தமாக இருக்கும். தெருவில் குப்பை போட்டால் அபராதம் 500டாலர் (13000 ரூபாய்).

இந்தியாவிலிருந்து செல்லும் இந்தியர்கள் இரண்டு வகைப்படுவர், தொழிலாளிகள் (labors) மற்றும் மேதாவிகள் (professionals). இதில் மேதாவிகள் பல்கலைக்கழக ஆசிரியர்கள், கணினி விற்பன்னர்கள், போன்றோர். கட்டிடவேலை செய்வதற்குத் தொழிலாளிகள். இவர்கள் இந்தியாவில் ஏஜென்டுக்கு அநியாயக் காசு கொடுத்துவிட்டு ஒரு நாளைக்கு 18 வெள்ளிக்கு 18 மணி நேரம் உழைக்கும் கூலித்தொழிலாளிகள்.

சிராங்கூன் ரோட் - இந்தியர்கள் (தமிழர்கள்) இடம். குட்டி இந்தியா என்று அழைக்கப்படும். இது ஒரு நீண்ட சாலை. இரு புறமும் கடைகள், கடைகள், கடைகள். பல தரப்பட்ட நகைக் கடைகள் மற்றும் உணவு விடுதிகள். காய்கறி, மளிகை சாமான்கள், பாத்திரம், உடை, அலங்காரம் விற்பனை செய்யும் கடைகள், கிளி ஜோசியம், மல்லிப்பொடி வாசத்துடன் ரைஸ்மில், சீர்காழியின் வெண்கலக்குரல் வழியும் ஒலி நாடாக் கடைகள், நடுவே மணி ஓசையுடன் காளியம்மன் ஆலயம், பிளாட்பாரங்களில் குவிந்திருக்கும் மலிவு விலை சாமான்கள். "ரெண்டு நாப்பது, மூணு, ம்.. ம்... அஞ்சு நாப்பது, மூணு முப்பது... மொத்தம் எட்டு எழுபது" என்று தமிழில் கணக்குப் போடும் சீன காய்கறி வியாபாரிகள், பிளாட்பாரத் தூண்களில் வெற்றிலைக் கரைகள், டாக்சி, பஸ், கார் என்று விரையும் வாகனங்கள். தி.நகர் உஸ்மான் சாலையை ஞாபகப்படுத்துகிறதா? இந்த இடத்தில் மட்டும், இஷ்டம் போல் சாலைகளில் குறுக்கும் நெடுக்கும் போகலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிராங்கூன் தெரு தேக்கா மார்க்கெட்டில் தமிழகத்திலிருந்து வந்த கூலித்தொழிலாளிகளின் ஜனத்தொகை மாம்பலம் ரங்கநாதன் தெரு ஜனத்தை விட ஜே ஜே என இருக்கும். தங்களுக்கு கிடைக்கும் அந்த ஒரு நாள் ஓய்வில் தங்கள் "கூட்டாளி களை" சந்திக்கவும், புதிதாகத் தமிழகத்திலிருந்து வந்திருப்பவர்களிடம் குடும்பத்தினர் செய்தி மற்றும் ஏதேனும் கொடுத்துவிட்டுள்ளனரா என்று அறியவும், தங்கள் ஊருக்குச் செல்பவர்களை ஏக்கத்துடன் பார்த்து "மறக்காம" செய்தி சொல்லச் சொல்லியும், கும்பல் கும்பலாக நின்று கொண்டிருப்பர். பிறகு தங்கள் அடுத்த வாரத் தேவைக்கான காய், மளிகை சாமான்களை பெரிய பெரிய பிளாஸ்டிக் பைகளில் நிரப்பிக் கொண்டு அடுத்த பதினெட்டு மணி நேர தின உழைப்புக்குத் திரும்புவர்.

வீட்டு வேலைக்காக சில செல்வந்தர்களால் பணியில் அமர்த்தப்பட்ட பெண்களும் இவர்களில் உண்டு. இலங்கையிலிருந்து வரும் பணிப் பெண்களே அதிகம். இவர்களுக்கு மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஓய்வு உண்டு. இவர்கள் அப்பகுதியில் உள்ள புத்தர் கோயிலுக்குச் சென்றுவிட்டு தேக்கா மார்க்கெட் வந்துவிடுவர். இவர்களுக்கிடையே பல காதல் சம்பவங்களும், அதன் தொடர்பான சண்டை சச்சரவுகளும், உராய்வுகளும் நடப்பதுண்டு.

சிராங்கூன் ரோடில் மிக முக்கியமான கடை "முஸ்தபா". வருடா வருடம் சிங்கப்பூர் போல் தன் பரப்பளவையும் நிகர வருமானத்தையும் விஸ்தரிக்கும் முஸ்தபா கடையில், சிங்கப்பூர் விசா தவிர எல்லாம் கிடைக்கும். பர்மாபஜார் குருவிகள் காலை விமானத்தில் வந்துவிட்டு, இந்தக் கடையில் எல்லாவற்றையும் வாங்கி பெரிய பெரிய பெட்டிகளில் அடைத்துக் கட்டி, சாயாங்கால விமானத்தில் சென்னைக்கு ஏறி விடுவர்.

(தொடரும்...)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-28-2004, 12:29 AM
[No subject] - by வழுதி - 02-28-2004, 01:11 AM
[No subject] - by tamilini - 02-28-2004, 09:26 AM
[No subject] - by shanmuhi - 02-28-2004, 07:27 PM
[No subject] - by anpagam - 02-29-2004, 12:25 AM
[No subject] - by anpagam - 02-29-2004, 12:45 AM
[No subject] - by shanmuhi - 02-29-2004, 09:11 AM
[No subject] - by Paranee - 02-29-2004, 09:34 AM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:56 AM
[No subject] - by Mathan - 02-29-2004, 12:00 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 12:22 PM
[No subject] - by anpagam - 02-29-2004, 12:58 PM
[No subject] - by tamilini - 02-29-2004, 04:58 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 10:35 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 10:58 PM
[No subject] - by adipadda_tamilan - 03-01-2004, 02:31 AM
[No subject] - by Mathan - 03-01-2004, 01:49 PM
[No subject] - by adipadda_tamilan - 03-02-2004, 06:08 AM
[No subject] - by Mathan - 03-04-2004, 08:27 AM
[No subject] - by Mathan - 03-04-2004, 05:53 PM
[No subject] - by adipadda_tamilan - 03-05-2004, 02:32 AM
[No subject] - by Mathan - 03-05-2004, 08:33 PM
[No subject] - by Rajan - 03-05-2004, 11:06 PM
[No subject] - by vasisutha - 03-06-2004, 12:09 AM
[No subject] - by vasisutha - 03-06-2004, 12:10 AM
[No subject] - by kuruvikal - 03-06-2004, 12:08 PM
[No subject] - by vasisutha - 03-06-2004, 03:21 PM
[No subject] - by Mathan - 03-06-2004, 08:37 PM
[No subject] - by anpagam - 03-07-2004, 01:04 AM
[No subject] - by anpagam - 03-07-2004, 01:18 AM
[No subject] - by kuruvikal - 03-07-2004, 09:40 AM
[No subject] - by TMR - 03-07-2004, 04:59 PM
[No subject] - by adipadda_tamilan - 03-08-2004, 05:39 AM
[No subject] - by Mathan - 03-08-2004, 01:11 PM
[No subject] - by adipadda_tamilan - 03-09-2004, 02:39 AM
[No subject] - by Mathan - 03-09-2004, 02:53 AM
[No subject] - by இராவணன் - 03-09-2004, 03:09 AM
[No subject] - by இராவணன் - 03-09-2004, 03:20 AM
[No subject] - by adipadda_tamilan - 03-09-2004, 04:29 AM
[No subject] - by anpagam - 03-09-2004, 11:16 AM
[No subject] - by kuruvikal - 03-09-2004, 11:35 AM
[No subject] - by kuruvikal - 03-09-2004, 11:52 AM
[No subject] - by anpagam - 03-09-2004, 12:03 PM
[No subject] - by Eelavan - 03-09-2004, 12:16 PM
[No subject] - by adipadda_tamilan - 03-10-2004, 12:59 AM
[No subject] - by vasisutha - 03-10-2004, 01:27 AM
[No subject] - by vasisutha - 03-10-2004, 01:41 AM
[No subject] - by pepsi - 03-10-2004, 04:16 AM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 10:17 AM
[No subject] - by anpagam - 03-10-2004, 11:14 AM
[No subject] - by Mathan - 03-10-2004, 11:05 PM
[No subject] - by Mathan - 03-10-2004, 11:08 PM
[No subject] - by Mathan - 03-10-2004, 11:10 PM
[No subject] - by anpagam - 03-12-2004, 01:52 AM
[No subject] - by Mathan - 03-13-2004, 02:02 AM
[No subject] - by anpagam - 03-16-2004, 02:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)