03-10-2004, 05:09 PM
அன்பின் நண்பர் குருவிகாள்
ஆண் ஆண் தான் பெண் பெண் தான் ஆனால் ஆணுக்குப் பெண் எந்தவிதத்தில் சரி சமமென்று கேட்கிறீர் உமக்கு துணையாக உடல் பலத்தை மட்டுமே சாட்சியாகக் கொள்கிறீர்
இலங்கையில் வாழ்ந்த ஆதி திராவிட இனத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெண்ணைக் கூட்டத்தலைவியாக கொண்ட சமூக அமைப்பும் விலங்குகளை வேட்டையாடுவதை மட்டுமல்ல தமது இனத்தவரை விலங்குகள் பகைவர்களிடமிருந்து பாதுக்காப்பதைக் கூட பெண்களே செய்தனரென்றும் தெரியவரும்
ஒட்டகச்சிவிங்கிக்கு காலத்தின் கோலத்தால் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியால் கழுத்து நீண்ட கதை தெரியுமா அதே போன்று தான் பெணகள் போகப் பொருளுக்கு ஆசைப்பட்டு வந்த பிணக்குகளாலும் காலமாற்றத்தாலும் நிலை மாறி ஆண்கள் கைகளில் குடும்பப் பொறுப்பும் சமூகப் பொறுப்பும் வந்து சேர்ந்தது எங்கே தம்மை மேவி விடுவார்களோ என்ற பயத்தால் காலத்துக்குக் காலம் எம்மவர்கள் புராணம் இதிகாசம் என்று ஏதோதோ கூறி பெண்ணெண்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வகுத்ததற்கேற்ப வீட்டிலேயே அடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதனால் உண்டான விளைவுதான் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் பெண்கள் பலவீனமானது
வெறுமனே இதனை மட்டும் ஆதாரமாகக் கொண்டு பெண்கள் ஆண்களுக்கு எந்தவிதத்திலும் நிகரானவரல்ல என்று கூற வேண்டாம் இன்று போராளியாயிருக்கும் ஒரு பெண் உடல் பலத்தில் மட்டுமன்றி மனத்தளவிலும் கூட தனது வயதொத்த ஆண்களுக்கு நிகரானவர் என்பதை நீர் மறுப்பீரா? இதுதான் காலத்தில் ஏற்பட்ட மாற்றம்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதி வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்று வெறுமனே மேடைகளில் முழங்குபவர்களை எனக்கும் பிடிப்பதில்லை

\" \"