03-10-2004, 06:58 AM
அன்பின் நண்பர்களே
சந்திவதனா,நளாயினி,சாந்தி அக்காமார் போன்று பெண்ணியம்,பெண்விடுதலை முதலாளித்துவப் பெண்ணியம்,மார்க்ஸியப் பெண்ணியம் இதெல்லாவற்றிலும் எனக்கு அவ்வளவு புலமை இல்லை ஆயினும் அன்பான ஒரு தாய்க்கு மகன் என்ற முறையிலும் பாசமான சகோதரிகளையும் நண்பிகளையும் கொண்டவன் என்ற முறையில் எனது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என நினைக்கிறேன்.வெறுமனே நாண் சார்ந்திருக்கும் ஆண் வர்க்கத்தின் குரலாக பெண்களைக் குறைகூறுவதாக இல்லாமல் எமது சமுதாயக் கட்டமைப்பின் குறைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்
ஒரு காலத்தில் யாழ் மண்ணில் பெண்களுக்குக் கட்டுப்பாடு இருந்தது அதனை அடக்குமுறை என்று சொல்வது பொருந்தாது ஏனெனில் நீங்கள் சொல்வது மாதிரி ஆண்கள் போட்ட சட்டதிட்டங்கள் அல்ல அவை சமூகம் என்ற போர்வையில் பெற்றோரால் அதுவும் குறிப்பாக தாய்மாரால் பல சட்டதிட்டங்கள் போடப்பட்டிருந்தது உதாரணமாக பெண்ணைக் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பாடசாலை அனுப்புதல் சமூகத்தின் மத்தியில் வருவதற்கான கட்டுப் பாடுகள் இவற்றை விதிப்பதில் தாயே முன்னின்றிருப்பாள்
இவையெல்லம் கட்டுப்பெட்டித்தனம் என்று உதறித் தள்ளப்பட்டு ஆண்களுக்குச் சமனாக படிப்பிலும் சரி பல்வேறு துறைகளிலும் சரி போராட்டத்திலும் சரி பெண்கள் மிளிர்ந்து வருகிறார்கள்
இன்று நீங்கள் கூறும் பெண்ணடிமைத்தனம் பற்றிய வரையறைகளைப் பார்த்தால் குடும்பம் என்ற ஒன்றுக்குள் மட்டுமே இன்னும் பெண்ணுக்கு சில உரிமைகள் கிடைக்கவேண்டியிருக்கின்றன
ஆனால் இதனைத் தீர்ப்பதற்கு வெறுமனே மேடைகளில் ஏறி நின்று வேண்டும் பெண்ணுக்கு விடுதலை, ஆண் சமூகமே பேண்ணுக்கு உரிமை கொடு என்றெல்லாம் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்துவதாலேயோ. கொள்கைகள் கோட்பாடுகள் பற்றி பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எழுத்தித் தள்ளுவதாலேயோ முடியாது இவையெல்லாம் வெறும் முகமூடிகளாக மட்டுமே இருக்குமன்றி முகங்களின்
தாற்பரியம் வேறு
இவற்றைத் தீர்ப்பதற்கு சமுதாயத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும் எமது கட்டமைப்பின் படி பெண்ணுக்கு பெண்தான் எதிரி ஒழிய ஆண் அல்ல பாலியல் ரீதியில் மட்டுமே ஆண்களால் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் மற்றும் படி குடும்பங்களில் நடக்கும் பிணக்குகள் சீதனப் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் அடிப்படைப் பிரச்சனை பெண்தான்
"ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்கிடச் செய்பவன் தந்தை மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் தாய்" இது ஆண் மட்டுமே உழைத்துவந்த காலத்து யாழ் குடும்பங்களின் கட்டமைப்பு பின்னர் காலப்போக்கில் வருமானம் செலவீனம் போன்ற காரணிகளால் பெண்களும் வேலைதேடி உழைக்கத் தொடங்கிய போதும் வீட்டு நிர்வாகம் பெண்ணின் கைகளில் தான் ஆண் பெயருக்குக் குடும்பத் தலைவன் சில இடங்களில் விதிவிலக்குகள் இருந்தாலும் இதுதான் பெரும்பாலான நடைமுறை
நாங்களும் உழைக்கிறோம் தானே நாங்கள் மட்டுமா வீட்டு வேலைகள் செய்யவேண்டும் என ஒரு காலத்தில் பெண்கள் குரலெழுப்பினாலும் பின்னர் புரிந்துணர்வுடன் பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகளில் துணை புரிவதை நாம் இன்று கண்கூடாகக் காணமுடிகிறது
எனக்குக் கல்வி கற்பித்த பெரும் பாலான ஆசிரியைகள் வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன் அங்கு பெரும்பாலும் கணவனும் உத்தியோகத்தரகவோ அல்லது ஏதாவது தொழில் புரிபவராகவோ இருப்பர் எப்படியிருப்பினும் வீட்டு வேலைகளில் அவர்களும் பங்கு பற்றுவதை பார்த்திருக்கிறேன் யாழ்ப்பாணத்தில் காதல் திருமணங்கள் பெருகி வருவதும் உயர்கல்வியும் இதற்கு காரணமாக இருக்கலாம்
னீங்கள் வாழும் மேற்குலகில் வேண்டுமானால் பல்வேறு கோட்பாடுகளால் உந்தப்பட்டு பெண்கள் பல்வேறு தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை உணர்ந்துகொண்டாலும் யாழ்ப்பாணப் பெண்களுக்கு அடிப்படை தேவை அல்லது அவர்கள் பிரச்சனை எல்லாமே எனது குடும்பம் என்பதுதான் கல்யாணமாகும் வரை அது தாய் தந்தை,சகோதரர் என்றிருக்கும் கல்யாணமான பின்னர் அது தனது கணவன் தனது குழந்தைகள் என்று அடங்கிவிடும் இது ஆண்களுக்கும் பொருந்துமெனினும் பெண்களின் குடும்பம் மீதான பிடிப்பு பலமானது சமுதாயம் பற்றியோ அல்லது சமுதாயத்தில் பெண்களின் பங்கு பற்றியோ அவர்கள் கவலைப் படுவதில்லை எனது குடும்பம் நன்றாக இருந்தால் தான் சமுதாயம் என்னை மதிக்கும் என்று சமுதாயத்தில் தனது இருப்பை தனது குடும்பத்தோடு பிணைத்துக் கொள்கிறார்கள்
சரி குடும்பத்தில் பெண்களின் இருப்பைப் பார்த்தோமானால் யாழ்ப்பாணப் பெண்க்களுக்கு அவர்களின் குடும்பத்தில் சரியான இடம் வழங்கப்பட்டுள்ளது
அதனை விட தனது குடும்பம் சார்ந்த விடயங்களில் முடிவெடுக்கும் உரிமை இப்போது பெண்கள் கைகளிலேயே உள்ளதை காணலாம் பிள்ளைகளின் படிப்பு கல்யாணம் இன்ன பிற விடயங்களில் ஆண் ஆலோசனை கூறுபவனாகவும் முடிவைச் செயற்படுத்துபவனாகவுமே இருக்கின்றான் அல்லது மனைவியின் கூற்றுக்கு அங்கீகாரம் வேண்டி பேச்சாளனாக இருக்கிறான்
உதாரணமாக பிள்ளையொன்று முதலில் தாயிடம் தான் போய் தனது வேண்டுகோளை வைக்கும் அம்மா நான் தையல் படிக்கப் போகிறேன் என்றோ அல்லது கராத்தே பழகப் போகின்றேன் என்றோ கேட்கும்போது பெரும்பாலான தாய்மார் சொல்வது போய் அப்பாவிடம் கேள் ஆனால் பிள்ளையின் வேண்டுகோள் செயற்படுத்தக் கூடியதா இல்லையா என்பது தாயால் தான் முடிவெடுக்கப்படும் தந்தை கூட மனைவியின் கருத்தறிந்தே சொல்வார் யார் எதனைச் சொன்னாலும் இது யாழ்ப்பாணத்தில் இன்றைய நடைமுறை இப்படியான சமுதாயக் கட்டமைப்பில் பெண்விடுதலை பற்றிய கோசங்கள் தேவையா என்பதுதான் எனது கேள்வி
நீங்கள் சொல்வது போல பெண்ணை வற்புறுத்தி கல்யாணம் கட்டிவைப்பது ஆணாதிக்கத்தின் ஒரு வெளிப்பாடு என்பது கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது பெண்ணை கல்யாணத்துக்கு வற்புறுத்துவது பெற்றோர் என்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்துதானே இதில் எப்படி ஆணை மட்டும் குறை சொல்லமுடியும் அதிலும் பொதுவாக தந்தையர்கள் பெண்பிள்ளைகள் மேல் பாசம் உள்ளவர்கள் அப்படியிருக்க தாஇயினால் எடுக்கப்படும் முடிவே செயற்படுத்தப்பட ஆணை எப்படிக் குற்றம் சாட்டலாம்?
அடுத்தது சீதனம் இன்று யாழ்ப் பெண்களுக்கு முக்கிய எதிரி சீதனம் இதனால் தான் இன்று யாழ் மண்ணிலும் சரி வெளிநாட்டில் வாழும் யாழ்ப்பாணத்தவர் மத்தியிலும் சரி குடும்பங்களுக்குள் குழப்பங்களும் மனமுறிவுகளும் ஏற்படுகின்றன
இந்தச் சீதனம் என்பதை ஒரு பெண்ணிடமிருந்து கேட்டு வாங்குவது இன்னொரு பெண்தான் ஆணைப் பேரம் பேசுவது அவனைப் பெற்றவளும் பெண்ணைப் பெற்றவர்களும் தான் ஒரு வழமையான யாழ்ப்பாணத்து பெண்தேடும் படலத்தைப் பார்த்தால் ஆண் வீட்டார் சம்பந்தம் பேசும் போது ஆணின் தகப்பனார் பல்வேறு விடயங்களையும் பேசுவார் ஆனால் சீதன விடயம் பேசுவது தாய் தான் அல்லது மரியாதை நிமித்தம் மனைவியின் கருத்தைத் தாம் ஒப்பிப்பார் இங்கே அந்தப் பெண்மணி தான் தனது குடும்பம் என்பதை மட்டுமே பார்ப்பார் ஒழிய அந்தக் குடும்பத்தின் நிலமை அல்லது இதனால் பாதிக்கப்படப் போவது இன்னொரு பெண்தான் என்பதைக் கவனிக்கமாட்டார்
எனது கண்கூடாக எத்தனை ஆண்களைப் பார்த்திருக்கிறேன் படிக்கும் காலத்திலும் சரி பட்டம் பெற்ற காலத்திலும் சரி சீதனம் வேண்டாமல் தான் கல்யாணம் செய்வேன் என்று சபதமிட்டுவிட்டு பின்னர் சீதனம் வாங்கியவர்கள் இவர்கள் வாங்கிய சீதனம் இவர்கள் பேரம் பேசி வாங்கியதல்ல தாயாரால் கேட்கப்பட்ட சீதனத்துக்கு படித்த பகுத்தறிவுவாதிகள் என்ற பெயரில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கடைசியில் தாயாரின் கட்டளைக்கும் கண்ணீருக்கும் பயந்து தலையை நீட்டியவர்கள் எத்தனை பேர்
மகன் காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன் உண்ணவிரதம் இருந்து மனதைக் கலைத்த தாய்மர்கள் எத்தனைபேரைப் பார்த்திருக்கிறேன் தனக்குத் தெரியாமல் சீதனம் இல்லாமல் கல்யாணம் செய்த மகன் மீதுள்ள வன்மத்தை வந்தவளில் காட்டும் எத்தனை தாய்மார் சகோதரிகளைப் பார்த்திருக்கிறேன்
தங்களுக்குச் சீதனத்துக்காக தமையன் வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உழைக்க அல்லது கொழுத்த சீதனத்துக்காக இன்னொருத்திக்கு கணவனாக தலையை நீட்ட பொது மேடைகளில் பெண்ணடிமை பற்றி முழங்கும் எத்தனை சகோதரிகளைப் பார்திருக்கிறேன் இவர்கள் யாராவது தம்மால் பாதிக்கப்படப் போவது இன்னொரு பெண்தான் என்று உணர்வார்களா
பெண்விடுதலை என்று முழங்கிய எத்தனை பெண்கள் தமது மகனை சீதனம் வாங்காமல் திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள்
கொழுத்த சீதனம் கொடுத்து கல்யாணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் இவரது சகோதரிகள் அல்லது தாயார் நன்றாக இருக்க எனது சகோதரன் அல்லது தந்தை எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்ற உண்ர்வு மேலோங்கும் போது அவளது வன்மம் கணவனில் குறைபிடிப்பதாகத்தான் வெளிப்படும்
இப்படி எத்தனை ஆண்கள் தாய் சகோதரிக்காக சீதனம் வங்கி விட்டு அதனை அனுபவிக்க முடியாதவராய் அதன் மூலம் மனைவியின் வெறுப்பையும் சம்பாதித்தவராக நரக வாழ்க்கை வாழ்கிறார்கள் இவற்றை பெண்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே பெண்விடுதலை சாத்தியப்படும்
வெறுமனே ஆணாதிக்கம் பெண்விடுதலை என்று கடந்து போன கசப்பான காலகட்டங்களை நினைவுக்குக் கொண்டுவருவதை விட்டு பெண்ணினாலே பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைய இவர்கள் முன்வரவேண்டும்
இவை சமுதாயத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு அன்பு பாசம் நேசம் என்பவற்றின் அடிப்படையில் ஏற்படுவது அதனை வெறுமனே மேடைகளில் முழங்குவதால் சட்டப்படி 8 மணி நேர வேலை போன்று சட்டப்படி கணவன் மனைவி உறவைத் தான் ஏற்படுத்தலாமேயொழிய குடும்பத்தை உருவாக்கமுடியாது

\" \"