03-09-2004, 11:35 AM
ஐயா அடிபட்ட தமிழன் நாங்கள் சம்பாந்துறை அரிசியும் மட்டக்களப்பு வாவி மீனும் மூதூர் நண்டும் வன்னிப்பயறும் ஆனைக்கொய்யாவும் யாழ்ப்பாணத்து நொங்கும் பனங்காய்பணியாரமும் கொழும்புப் பாணும் பருப்பும் நுவரெலியா சிலோன் அப்பிளும் தேனீரும் உண்டு குடித்து வளர்ந்தவர்கள்...எமக்குள் உறிய இரத்தம் அவை தந்த உணவில் வர உணர்வுகள் மட்டும் எப்படித் தனித்திருக்கும் நண்பரே.....!நாம் எல்லாம் ஒருவர்...தமிழர்கள் நண்பரே....!எமக்குள் உணர்வுகளும் உறவுகளும் ஒன்றாய் இருக்க ஏன் இந்தப்பாகுபாடு...சுயநலத்துப் பிசாசுகளே கொஞ்சம் சிந்திப்பீரா...வன்னியில் நீர் உண்ட சாப்பாடும் மக்கள் ஊட்டிய அன்பும்....மட்டக்களப்பு அன்னையவள் தன் செல்வன் என்று சொல்லி தலைவனுக்காயும் தமிழருக்காயும் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட கதையும் தலைநகராம் திருமலையில் சிங்கக் கொடி எரித்து உயிர்விட்ட மானத்தமிழனும்...தமிழீழதேசத்தவன் என்று.....!
எனவே சகோதரனே யார் எழுத்தும் உங்களை மட்டும் காயப்படுத்தி இருக்கமுடியாது அது உம் சகோதரங்கள் எம்மையும் தான் காயப்படுத்திவிட்டிருக்கும்....என்பதையும் மறவாதீர்...!
உமக்காய் வருந்திய படி கண்ணீரில் எழுதும் உன் அன்பு நண்பர்களின் ஆறுதல் வரிகள்...! நீர் இங்கு வேண்டும் இன்றேல் நாமும் இங்கு இல்லை எனும் நிலை சொல்வோம்....!
இவை வெறும் வார்த்தைகள் அல்ல...யதார்த்த வரிகள்....! யாழ் நகர் முதல் கல்முனைவரை காற்றுண்டு சீவித்தவர்கள் நாம் என்ற வகையில் எமது உணர்வுகள்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>