03-09-2004, 03:25 AM
கருணாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க விடுதலைப்புலிகள் இணக்கம்?
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ள திரு. கருணாவிற்கு பொது மன்னிப்பு வழங்க தயாராகவுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கருணா ஈடுபட்டுள்ள விரோத நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவாராயின் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க தேசியத் தலைவர் பிரபாகரன் தயாராகவுள்ளதாகத் தெரியவருகிறது.
அசோசியேட் பிரஸ் செய்தி ஸ்தாபனத்திற்கே மேற்படி தகவலை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாக இன்று பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. கருணா தற்போதைய நடவடிக்கைகளை நிறுத்தினால், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடரும் வகையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கருணா ஒரு தனிமனிதனாக இக் காரியங்களில் ஈடுபட்டு வருவதால், ஒரு இராணுவ நடவடிக்கைக்கான தேவையேதும் இல்லையென தான் கருதுவதாக மேலும் தெரிவித்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், மட்டக்களப்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளையினூடாக இப் பொதுமன்னிப்புப் பற்றிய விபரங்கள் கருணாவிற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
நன்றி:
புதினம் இணையத்தளம்
www.puthinam.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>