06-28-2003, 09:56 PM
நன்றி மதிவதனன், உங்களுக்கு திருப்பி அனுப்பிய கருத்தினை நீங்கள் எத்தனை முறை எழுதியிருக்கின்றீர்கள் என்று உங்கள் முன்னைய கருத்துக்களை திருப்பிப் பாருங்கள். நான் அழிக்க நீங்கள் திருப்பிப் போட என்று இப்படி எத்தனை தரம் "கிளித்தட்டு" விளையாட்டு கடந்த ஒரு சில மணித்தியாலத்தில் நடைபெற்றது? கருத்துக்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த வரைமுறை ஒரு சிலரால் முழுமையாக மீறப்பட்டுள்ளதுதான். அவைகள் தணிக்கை செய்யப்படவில்லைத்தான். நான் இக்களத்துடன் பெருமளவு நேரத்தை செலவு செய்கின்றபோதும், எனது முழுமையான நேரத்தையும் இதனுடன் விட முடியாது. எழுதுபவர்கள் தான் பொறுப்புடனும், நிதானத்துடனும் எழுதி ஒத்துழைப்புத் தரவேண்டும். அதை விடுத்து நான் "செய்வதைத் செய்வேன், நீ செய்வதைச் செய்" என்ற போக்கினைக் கைவிட்டு சரியான முறையில் களத்தினைக் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்.
சேது பற்றி தனிப்பட்ட ரீதியில் எனக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றது. எந்தக் களத்திலும் தேவையில்லாது கருத்துக்களை எழுதுவதாகவும், ஏராளமான எழுத்துப்பிழைகள் இருப்பதாகவும் இம்முறைப்பாடுகள் அமைகின்றன. இந்த இரண்டு விடயத்திலும் சேது கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
இத்தளத்தினை இயக்குவதில் நான் எதுவித லாபமும் அடையவில்லை. மாறாக பெருமளவு பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றேன். இப்படி இருக்கும்போது பொறுப்பற்ற கருத்துக்களால் எனது நேரத்தை மேலும் "வீண்விரயம்" செய்வதை தடுப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
நன்றி
நட்புடன்
மோகன்