Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழச் செய்திகள்
#1
மட்டக்களப்பிலுள்ள சமூகநல அமைப்பின் பிரதிநிதிகளும் பல்லின மத மற்றும் அறிவுசார் பிரமுகர்களும் அடங்கிய உயர்மட்ட சமாதான தூதுக்குழுவொன்று, மட்டக்களப்பு ஆயர் கலாநிதி அதிவண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் டாக்டர் எஸ்.ரவீந்திரநாத் ஆகியோரின் தலைமையில் இன்று திங்கட்கிழமை வன்னிக்குச் சென்று, விடுதலைப் புலிகளின் தலைவருடன் தற்போதைய நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளனர் என்று தமிழ்நெற் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பின் பிரதான தமிழர் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், சமூகநல மற்றும் இன மத அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள், கல்விமான்கள் இணைந்து மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்திய உரையாடல்களின் இறுதியில், ஒரு சமாதான நல்லிணக்கக் குழுவொன்று வன்னி சென்று வன்னித் தலைமையுடன் பேசி, கருணா விடயத்தில் ஒரு சுமூகமான முடிவு காண எத்தனிப்பதென்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மக்கள் தற்போதைய நெருக்கடி விரைவில் அமைதியாகத் தீர்ந்துவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர், தேசியத் தலைவர் கருணா விடயத்தில் அவரது முடிவை மீள்பரிசீலனை செய்து, சுமூகமான தீர்வொன்றைக் காண்பார் என்று நாம் நம்புகிறோம் என்று விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு உறுப்பினர் ஒருவர் தமிழ்நெற்றிற்குத் தெரிவித்துள்ளார். எமது தேசியத் தலைவர், தற்போது அங்கு செல்லும் சமாதான நல்லிணக்கக் குழுவின் வருகையை சாதகமான முறையில் பயன்படுத்துவார் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர் திரு.சேனாதிராஐh nஐயானந்தமூர்த்தி கருத்துக் கூறுகையில், கருணா தனது கருத்துவேற்றுமைகளைக் களைந்து, தேசியத் தலைவருடன் ஓர் இணக்கப்பாடு காணவேண்டுமென்றே தாம் விரும்புவதாகவும், தற்போதைய நெருக்கடிகள் தேர்தலில் தமிழர்களின் வெற்றியைப் பாதித்துவிடலாம் என்று தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேசியத் தலைமையுடன் ஓர் இணக்கப்பாடு காணப்படுவதை கருணா விரும்புகிறார் என்று பலரும் எண்ணக்கூடிய விதத்தில், பிபிசி ஊடகத்திற்கு கருணா வழங்கியுள்ள பேட்டியில், தேசியத் தலைவருக்கு தான் என்றும் விசுவாசமாக நடந்து கொள்வதையும், அவருக்கெதிராக எப்போதுமே தான் பேசியதில்லை என்றும், அதைவிட, மட்டக்களப்பு-அம்பாறை பகுதியில் தனக்கு விசுவாசமான போராளிகளும் தானும் தமிழினத்தின் தேசியப் போராட்டத்திற்கு எந்த இழுக்கும் வந்துவிடாதிருப்பதில் தொடர்ந்தும் உறுதியாய் இருப்போம் என்றும் கருத்துக் கூறியுள்ளார்.

நன்றி: தமிழ்நெற்.கொம்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஈழச் செய்திகள் - by vasisutha - 03-08-2004, 05:50 AM
[No subject] - by adipadda_tamilan - 03-08-2004, 07:20 AM
[No subject] - by yarlmohan - 03-08-2004, 09:26 AM
[No subject] - by shanmuhi - 03-08-2004, 09:41 AM
[No subject] - by yarl - 03-08-2004, 10:51 AM
[No subject] - by vasisutha - 03-08-2004, 05:51 PM
[No subject] - by sivajini - 03-08-2004, 06:25 PM
[No subject] - by Mathivathanan - 03-08-2004, 08:09 PM
[No subject] - by kuruvikal - 03-08-2004, 08:17 PM
[No subject] - by vasisutha - 03-08-2004, 08:32 PM
[No subject] - by Mathivathanan - 03-08-2004, 09:30 PM
[No subject] - by கண்ணன் - 03-09-2004, 12:12 AM
[No subject] - by sOliyAn - 03-09-2004, 12:23 AM
[No subject] - by கண்ணன் - 03-09-2004, 12:32 AM
[No subject] - by sOliyAn - 03-09-2004, 12:34 AM
[No subject] - by கண்ணன் - 03-09-2004, 12:37 AM
[No subject] - by nalayiny - 03-09-2004, 12:38 AM
[No subject] - by adipadda_tamilan - 03-09-2004, 01:00 AM
[No subject] - by adipadda_tamilan - 03-09-2004, 02:46 AM
[No subject] - by vasisutha - 03-09-2004, 03:02 AM
[No subject] - by இராவணன் - 03-09-2004, 03:10 AM
[No subject] - by Eelavan - 03-09-2004, 03:27 AM
[No subject] - by vasisutha - 03-09-2004, 03:29 AM
[No subject] - by adipadda_tamilan - 03-09-2004, 04:08 AM
[No subject] - by vasisutha - 03-09-2004, 05:42 AM
[No subject] - by கண்ணன் - 03-09-2004, 11:43 AM
[No subject] - by adipadda_tamilan - 03-10-2004, 01:38 AM
[No subject] - by vasisutha - 03-10-2004, 03:38 AM
[No subject] - by vasisutha - 03-11-2004, 02:47 AM
[No subject] - by vasisutha - 03-11-2004, 10:12 PM
[No subject] - by PAAMARAN - 03-13-2004, 10:56 PM
[No subject] - by Mathivathanan - 03-13-2004, 11:42 PM
[No subject] - by PAAMARAN - 03-14-2004, 12:01 AM
[No subject] - by Sangili - 03-14-2004, 12:41 AM
[No subject] - by sOliyAn - 03-14-2004, 01:27 AM
[No subject] - by Paranee - 03-14-2004, 05:25 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)