Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொற்சிலம்பம்
#8
Quote:முடியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள் வழுதி. ஆவலாய் காத்திருக்கிறேன்.

பேரவாவொடு மாசுணம் பேர (பெயர), வே பேர,
ஆவொடு, மா சுணம் பேரவே

ஆர (ம்) ஆரத்தினோடு மருவியே
ஆரவாரத்தின் ஓடும் அருவியே.

பேரவாவொடு(பெயர) -அசைய,
(அவற்றை உண்ணும் நோக்கில்), ஆவொடு - அசைந்து செல்லும்படியாகவும்,

ஆர (ம்) ஆரத்தினோடு மருவியே - முத்தானது முத்தோடு உரசுவதனால் ஒலிக்கின்ற,
ஆரவாரத்தின்- அருவியானது ஓடிக்கொண்டிருக்கின்றது.

பாம்புகள் மிகவும் விருப்பத்துடன் அசைந்து ஊர்ந்து திரிகின்ற மூங்கில்கள் ஆற்றிலே மிதந்து செல்ல அதனை உண்ணும் நோக்கிலே பசுக்கள் ஆற்றங்கரையூடே ஓடிச் செல்ல அதனால் எழுந்த பெரும்புழுதிக் கூட்டமும் தொடர்ந்து செல்லும்படியான ஆரவாரத்துடனும் முத்துக்கள் ஒன்றோடொன்று மோதுவதான ஒலியுடனும் அந்த ஆறானது ஓடிக்கொண்டிருக்கின்றது.

இதுதான் அப்பாடலின் கருத்து.

நண்பர் BBC மன்னித்தருள்க..

நன்றி.

வழுதி/-
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-28-2004, 09:22 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 10:49 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 10:51 PM
[No subject] - by வழுதி - 02-29-2004, 10:53 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:08 PM
[No subject] - by வழுதி - 02-29-2004, 11:35 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 11:41 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:46 PM
[No subject] - by nalayiny - 02-29-2004, 11:50 PM
[No subject] - by Mathan - 03-01-2004, 12:01 AM
[No subject] - by Eelavan - 03-01-2004, 06:10 AM
[No subject] - by phozhil - 03-03-2004, 12:39 PM
[No subject] - by vasisutha - 03-04-2004, 01:08 AM
[No subject] - by phozhil - 03-04-2004, 10:11 AM
[No subject] - by phozhil - 03-04-2004, 10:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)