02-28-2004, 11:23 AM
மச்சான்
உனக்கென்ன பித்தா...?!
சின்னதில் செய்ததுகள்
சென்னி விளங்கியா செய்தது...!
நானும் பருவமாகி
குமரியான பின்
உன்னோடு காதல் என்று
கனவு கண்டதும் இல்லை
கல்யாணம் என்று
கதை பறையவும் இல்லை...!
இப்ப எல்லாம் மாறிப்போச்சு
நானும்
மாற்றானின் தாலி கொண்டு
வாழ்க்கைப்பட்டாயிற்று...!
வாழ்வில் கசப்பும் இன்னிப்பும்
என்னோடென்றாயிற்று...!
நீயும்
தாலி தந்து
இன்னொருத்தி சொத்தாயிற்று...!
இப்ப நான் சொன்ன என் சங்கதி
நாளை உன் தங்கைக்கு
என் கதி வேண்டாம் என்பதற்காய்...!
சென்னி தெளிந்து
உன் சமுதாயம்
சொல்லிவை
நாம் படும் வேதனை இங்கு..!
அது போதும்
நீ என் மீது
கொண்ட பாசத்திற்கு....!
அக்கரைக்கு இக்கரை
பச்சை என்போரே....!
வந்து ஒருக்கா
நேரில் தரிசித்தால்
தெரியும் எங்கரையில்
பசுமை அதிகம் என்று....!
வேம்படியில் படிச்சவளும்
சுண்டுக்குளியில் சுத்தியவளும்
இந்து மகளிர் இருந்து வந்தவளும்
கொழும்பென்றால்
இராமநாதன் மகளிரும்
கொன்வென்றுக் கெட்டிக்காரியும்
பிள்ளை பெற்று
வண்டில் தள்ளும்
வேலையாட்களாய்
லண்டன் வீதியில்....!
(ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன் மேற்கில் இதுதான் நம்ம பலரின் கதி....)
ஒரு காலை வேளை
நடை பயின்று பாரும்....!
விடுதலை வேட்கை கொண்டவள்
இங்கோ வீட்டுக்கு வேலைக்காரி...!
வெள்ளைக்காரி வராள் வேலைக்காரியாய்
அதுதான் நாம் இங்கே
இறக்குமதிப் பொருளாய்....!
எப்படிச் செப்புவேன்
உம் சென்னி தெளிய
நீர் தெளியும் போது
நான் நானாய் இரேன்....! :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உனக்கென்ன பித்தா...?!
சின்னதில் செய்ததுகள்
சென்னி விளங்கியா செய்தது...!
நானும் பருவமாகி
குமரியான பின்
உன்னோடு காதல் என்று
கனவு கண்டதும் இல்லை
கல்யாணம் என்று
கதை பறையவும் இல்லை...!
இப்ப எல்லாம் மாறிப்போச்சு
நானும்
மாற்றானின் தாலி கொண்டு
வாழ்க்கைப்பட்டாயிற்று...!
வாழ்வில் கசப்பும் இன்னிப்பும்
என்னோடென்றாயிற்று...!
நீயும்
தாலி தந்து
இன்னொருத்தி சொத்தாயிற்று...!
இப்ப நான் சொன்ன என் சங்கதி
நாளை உன் தங்கைக்கு
என் கதி வேண்டாம் என்பதற்காய்...!
சென்னி தெளிந்து
உன் சமுதாயம்
சொல்லிவை
நாம் படும் வேதனை இங்கு..!
அது போதும்
நீ என் மீது
கொண்ட பாசத்திற்கு....!
அக்கரைக்கு இக்கரை
பச்சை என்போரே....!
வந்து ஒருக்கா
நேரில் தரிசித்தால்
தெரியும் எங்கரையில்
பசுமை அதிகம் என்று....!
வேம்படியில் படிச்சவளும்
சுண்டுக்குளியில் சுத்தியவளும்
இந்து மகளிர் இருந்து வந்தவளும்
கொழும்பென்றால்
இராமநாதன் மகளிரும்
கொன்வென்றுக் கெட்டிக்காரியும்
பிள்ளை பெற்று
வண்டில் தள்ளும்
வேலையாட்களாய்
லண்டன் வீதியில்....!
(ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன் மேற்கில் இதுதான் நம்ம பலரின் கதி....)
ஒரு காலை வேளை
நடை பயின்று பாரும்....!
விடுதலை வேட்கை கொண்டவள்
இங்கோ வீட்டுக்கு வேலைக்காரி...!
வெள்ளைக்காரி வராள் வேலைக்காரியாய்
அதுதான் நாம் இங்கே
இறக்குமதிப் பொருளாய்....!
எப்படிச் செப்புவேன்
உம் சென்னி தெளிய
நீர் தெளியும் போது
நான் நானாய் இரேன்....! :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

