02-28-2004, 08:17 AM
அன்பான மச்சாளே...
எனதருமை கண்மணியே.
ஊரான ஊரிருக்க
உறவாக நானிருக்க
பேர் மட்டும் அறிந்தவனை
பெரிதெனவே
போனாயோ!
ஊருக்கென்ன தெரியும்,
உன்னோட அருமை பற்றி.
பேர் வைத்த
நாள்முதலாய்,
பேச்சுத் துணையானாய்.
அடி வைத்த நாள் முதலாய்
அருகிருக்கும் தாயானாய்.
ஊருக்கென்ன தெரியும்
உன்னை நான் சுமந்த
உப்பு மூட்டை பற்றி.
தோளில் சுமக்கையிலே
மனதில் குடி வந்தவளே....
பேரு வைத்த பெற்றவர் தான்
பிரிக்கச் சதி
செய்தாரோ.
கைபிடித்து நீ நடக்க,
நினைவெல்லாம் வழி மீது.
முள்ளுத் தைத்திடுமோ...
முரட்டுக் கல்லடித்திடுமோ...
மனசெல்லாம்
பயம் வழிய
வருவேனே உன் மச்சான்.
ஊரு சொன்ன பொல்லாப்போ...
ஊற்றவனை மறந்ததுவோ...
ஏது இருந்தாளும்
என்னை நீயும் மறந்ததேனோ?
ஒரு வரி எழுதியிருந்தால்
ஒற்றையிலே நின்றிருப்பேன்.
எனதருமை கண்மணியே.
ஊரான ஊரிருக்க
உறவாக நானிருக்க
பேர் மட்டும் அறிந்தவனை
பெரிதெனவே
போனாயோ!
ஊருக்கென்ன தெரியும்,
உன்னோட அருமை பற்றி.
பேர் வைத்த
நாள்முதலாய்,
பேச்சுத் துணையானாய்.
அடி வைத்த நாள் முதலாய்
அருகிருக்கும் தாயானாய்.
ஊருக்கென்ன தெரியும்
உன்னை நான் சுமந்த
உப்பு மூட்டை பற்றி.
தோளில் சுமக்கையிலே
மனதில் குடி வந்தவளே....
பேரு வைத்த பெற்றவர் தான்
பிரிக்கச் சதி
செய்தாரோ.
கைபிடித்து நீ நடக்க,
நினைவெல்லாம் வழி மீது.
முள்ளுத் தைத்திடுமோ...
முரட்டுக் கல்லடித்திடுமோ...
மனசெல்லாம்
பயம் வழிய
வருவேனே உன் மச்சான்.
ஊரு சொன்ன பொல்லாப்போ...
ஊற்றவனை மறந்ததுவோ...
ஏது இருந்தாளும்
என்னை நீயும் மறந்ததேனோ?
ஒரு வரி எழுதியிருந்தால்
ஒற்றையிலே நின்றிருப்பேன்.
\" \"

