02-27-2004, 09:22 PM
vasisutha Wrote:தமிழீழத் தேசியத் தலைவர் தான் எமது தலைவர்: யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன்!
யாழிலிருந்து எழின்மதி வியாழக்கிழமை 26 பெப்ரவரி 2004இ 21:47 ஈழம்
தமிழீழத் தேசியத் தலைவரைத்தான் நாம் எமது தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் ரவ10ப் ஹக்கீமை முஸ்லீம் சமூகத்தின் தலைமையாக ஏற்கும் தன்மையில் நாம் இல்லையென யாழ்ப்பாண முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லீம் மக்களால் நாளை சமாதானத்தை வலியுறுத்தி பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.
இப்பேரணி தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
எங்கள் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.
கடந்த காலத்தில் முஸ்லிம்கள் நலனில் மாவீரர் கேணல் கிட்டு லெப்ரினன்ட் கேணல் திலீபன் போன்ற பல மாவீரர்கள் பல அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்திருந்தாலும் இப்போது நாம் தெளிவான மனநிலையுடனும் போதிய புரிந்துணர்வுடனும் மீளக் குடியமர்ந்துள்ளோம் எம்மைப் போன்று வன்னியிலும் முஸ்லீம்கள் கடந்த கால சம்பவங்களைப் புரிந்துகொண்டு தெளிவான மனநிலையுடன் உள்ளனர்.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கூறும் தவறான கருத்துக்களை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதையுமே செய்யவில்லை என்பது தான் உண்மை என்று மேலும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
http://www.eelampage.com/
இது உண்மையாவும் பெரும்பான்மையான முஸ்லீம்களின் குரலாவும் இருந்தா நல்லதுதான்.
இல்லை எதிரிக்கு எதிரி நண்பன் அப்பிடிங்கிற அரசியல் விளையாட்டுல வந்தபேச்சா இருந்தா ஒரு பலனும் இல்ல.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

