02-27-2004, 08:50 PM
adipadda_tamilan Wrote:[quote=Kanakkayanaar]ஈழவன் இயம்பியது:
Quote:நாம் பேசும் போது நெருங்கிய நண்பர்களாக இருந்தால் வாடா போடா என்போம் அவர்கள் \"லா\" சேர்ப்பது சிறிது நாகரீகமாக தெரிந்தாலும் தமிழ் மொழியின் அழகைக் கெடுக்கிறது என்பதே<span style='font-size:25pt;line-height:100%'> உண்மை</span>
சுபாவுடனும் ஈழவனுடனும் இதில் நான் ஒத்துக்கொள்கிறேன். 8)
"லா" போட்டுப் பேசினால் அழகாய் இருப்பதென்ப்து உண்மையல்ல. இதனால் தமிழின் அழகு குறைகின்றதேயன்றி ஓங்கவில்லை. நானும் சிங்கப்பூரர்களுடன் கதைத்திருக்கிறேன். சில நேரங்களில் "லா" பொட்டு அவர்கள் பேசும்போது கேட்பதற்கு அரியண்டமாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை "லா" என்பது அன்னியோன்யத்தை கூட்டுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சில நேரம் இவர்கள் இந்த "லா" போட்டுக் கதைப்பதால் புதியவர்களுக்கு நிச்சயமாக நிறைய குழப்பங்கள் வரும் - அதாவது என்னடா இவர்கள் என்ன கதைக்கிறர்கள் என்று.hock:
"லா" போட்டுப் பேசினால் தான் அழகுன்னு சொல்லலை. அது அந்த இடத்தோட தனிதன்மைய காட்டுறதால அழகாயிருக்கு. நீங்க அதை அரியண்டம் அப்பிடின்னு சொல்ல முடியாது.
நீங்க சொல்லுற அரியண்டம், கதைக்கிறது இது கூட அவங்களுக்கு புரியாது. இது இலங்கை தமிழோட தனித்தன்மை. இதை அவ்ங்க என்ன இவங்க தமிழ் அருவெறுப்பா இருக்குன்னு சொல்லமுடிமா முடியாது தானே. அதனால அவங்க மண்ணோட தனிதன்மையான பேச்சு தமிழ மதிக்கணும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


hock: