02-27-2004, 01:52 PM
Eelavan Wrote:BBC Wrote:vasisutha Wrote:ஐந்தறிவுகள்...!
---------------
வெளிச்சத்தின் கருவில் உட்புக எத்தனித்து
சிறகொடியும் விட்டில்கள்...!
ஒற்றை கருஞ் சிறகை கண்டு
பதறி ஓடும் காகங்கள்...!
வாயருகே காட்டும் உணவை
எட்டிப் பிடிப்பதாய் எண்ணி ஓடும் வண்டில் மாடுகள்..!
<span style='color:#1200ff'>பக்கப் பார்வையை மறைத்துக் கொண்டு
நேர்கோட்டில் ஓடும் குதிரைகள்..!
இரப்பவனை விரட்டும், எஜமானுக்கு நன்றி உள்ள நாய்கள்..!
சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிக்கூட்டங்கள்..!
மனிதரிலும் உண்டு!
</span>
-vasisutha-
26/02/2004
எல்லாம் இந்த களத்திலேயே இருக்கா?
மனிதரிலும் உண்டு என்றால் களத்திலும் கட்டாயம் இருக்கும்
என்ன மிருகங்களுக்கு ஐந்தறிவு இவர்கள் ஒன்றை உபயோகிப்பதில்லை
உண்மை. குதிரை மிரளாம இருக்கிறதுக்கு பக்கபார்வைய மறைச்சுக்கிட்டு நேர்கோட்டுல ஓடுது. ஆனா மனுசனுக்கு இது தேவையா? எந்த ஒரு விசயத்தையும் இரண்டு பக்கமும் பாத்து சுயமுடிவை எடுக்க வேணாம்? அப்பிடி இல்லைன்னா எதுக்கு பகுத்தறிவு? நான் சொல்லுறது சரிதானே ஈழவன்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

