02-27-2004, 07:33 AM
Quote:கெலில் - ஆசைநான் கெலி எனக் கேள்விப்பட்டுள்ளேன்! உணவுப் பண்டங்களை விழுங்குவதற்குத் துடிக்கும் பிள்ளைகளைப் பார்த்து பெரியோர், "என்ன கெலியில நிக்கிற?" என்று ஏசுவதுண்டு
இப்படி நான் கேள்விப்பட்டது இல்லை.
Quote:இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்"நம்ம இனத்துக்க செய்வமெண்டால,் என்ன பொருத்தம் வரமாட்டனெண்டுது!" அதோடு "இனசனம்" என்றும் சுற்றத்தாரைக் கூறுவதுண்டு.
நாங்கள் சொந்தக்காரர் என்றுதான் சொல்வது வழக்கம்.
Quote:அரியண்டம் - பிரச்சனைஉண்மை!
இதற்கு அருவருப்பு என்றுதான் கூடுதாலக அர்த்தம் எடுப்பதுண்டு.
Quote:பொழுதுபட - மாலைஎன்னப் பொறுத்தவரையில் பொழுதுபட எனபதும் பின்னேரம் எனபதும் இரு வேறு பொழுதுகளைக் குறிக்கின்றன. பொழுதுபடுதல் ="Dusk ", பின்னேரம் ="late afternoon " இலங்கையில் பொழுதுபடுதல் ஆறு மணியளவிலும், பின்னேரம் என்பது இரண்டுக்குப் பின்னரும் பொழுதுபடுதலுக்கும் முன்னரும் உள்ள பொழுதைக் குறிக்கின்றது.
இப்படியும் சொல்வதுண்டு மற்றது
பின்னேரம்
" நான் பின்னேரம் வாறன்'
Quote:நாரி - முதுகுஇதில் எனக்கொரு ஐயம்! நாரி, இடுப்பு, இடை என்ற மூன்றும் ஒன்றா? இல்லை நாரி என்பது "hip"ஐயும், இடை/இடுப்பு எனபது "waist " ஐயும் குறிப்பதாகுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
நாங்கள் இடுப்பைத்தான் நாரி என்று சொல்வது
அத்தோடு சுபாசினி அவர்கள் குறிப்பிட்டது போல் , "கடைக்குப் போனேன் நான்" என்றில்லாமல் "கடைக்குப் போனனான் (போன + நான்)" என்று வரும்.
-

