02-27-2004, 05:46 AM
thampu Wrote:vasisutha Wrote:தமிழீழத் தேசியத் தலைவர் தான் எமது தலைவர்: யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன்!
தமிழீழத் தேசியத் தலைவரைத்தான் நாம் எமது தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீமை முஸ்லீம் சமூகத்தின் தலைமையாக ஏற்கும் தன்மையில் நாம் இல்லையென யாழ்ப்பாண முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன் தெரிவித்துள்ளார்................
http://www.eelampage.com/
யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீனின் அரசியல் கருத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் வேண்டி உயர்ந்த உங்கள் குரலில் நாகரீகம் உள்ளது என்பேன்.
இதை நீங்கள் ரவூக் ஹக்கீமுக்கும் அளிப்பீர்களானால் உங்கள் குரலில் உள்ள நாகரீகம் உண்மையானது என்பேன்.
தன்பையா,
அல் அமீம் மர்லினின் பேச்சையும் கக்கீமின் பேச்சையும் நீங்கள் ஒன்றாக்க முனைகின்றீர்கள். ஒன்று மட்டும் உங்களுக்கு விளங்க வேண்டும், கக்கீமின் பேச்சு மரியாதைப் படுத்தக்கூடிய பேச்சல்ல. கக்கீம் பேசுவதெல்லாம் இனத்துவேசமும் (மதத்தை வைத்து) பிரித்தாளும் தன்மையும். அப்படி அவர் பேசுவது நாகரீகமென்றால் இங்கு பதில் தொடுத்த அனைவருடைய பேச்சும் நாகரீகமானதே.
கக்கீமின் ஒவ்வொரு பேச்சையும் ஆழ்ந்து கவனித்தீர்களானால் அவரின் தமிழருக்கெதிரான அனாகரிகமான பேச்சை நீங்கள் விளங்கிக்கொள்ளலாம் (உங்களுக்கு விளங்குதோ தெரியாது). இப்படியானவர்களால்தான் இன முரன்பாடே உன்டாகின்றது.. இதை அவர் தவிர்ப்பது நல்லது.
hock:
...... 8)

