02-26-2004, 09:10 AM
தாயானவள் தங்கத்திலும் தரம் கூடியவள்!
தனை மறந்து உனைச் சுமந்தவள்!
அது அவள் மறு பிறுப்பென்று தெரிந்திருந்தும்
மனம் வருந்தாது உனக்காக காத்திருந்தவள்!
மழழையாய் நீ தவழ மார்பினில் தாலாட்டி
ரத்தத்தை பாலாக்கி இரவுகளை பகலாக்கி
உன்னை கரைசேர்கும்வரை
உயர வளர்த்தவள் அவள்
இவளின் மகிமையை நீ உணர வேண்டுமானால்
நீயும் தாயாகிப்பார் அதன் சுகமும்
சுமையும் உனக்குத் தெரியும்!
தனை மறந்து உனைச் சுமந்தவள்!
அது அவள் மறு பிறுப்பென்று தெரிந்திருந்தும்
மனம் வருந்தாது உனக்காக காத்திருந்தவள்!
மழழையாய் நீ தவழ மார்பினில் தாலாட்டி
ரத்தத்தை பாலாக்கி இரவுகளை பகலாக்கி
உன்னை கரைசேர்கும்வரை
உயர வளர்த்தவள் அவள்
இவளின் மகிமையை நீ உணர வேண்டுமானால்
நீயும் தாயாகிப்பார் அதன் சுகமும்
சுமையும் உனக்குத் தெரியும்!

