06-27-2003, 12:49 PM
மாற்றுக் கருத்துக்களை நாம் வரவேற்போம். அப்போது தான் மாற்றுக் கருத்துக் கூறுபவர்களின் உண்மைச் சொருபம் எமக்கு விளங்கும். இன்று நல்லது எது கெட்டது எது என்று பார்த்துச் செயல்பட வேண்டிய காலமல்ல. நாளைய எம் சந்ததியினரின் வளமான வாழ்விற்காய் எதைச் செய்தாலும் சரியென்று ஏற்றுக் கொள்வதே சிறந்தது. பேரினத்தைப் பார்த்தாவது இந்தப் பாடத்தைப் படித்துக் கொள்வோம். எம்மை அழிக்கும் ஒழிக்கும் பணியில் ஒன்றுபட்டு நிற்பதையாவது பார்த்து தமிழன் என்ற கோதாவில் ஒரு அணியாய் சேர்வதே நாளைய எம் இனத்தின் வாழ்வுக்கு வழி. மாற்றுக்கருத்துக்களை வைப்பவர்கள் அவர்களது எஜமானர்களுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்கின்றார்கள். இவர்களுக்கு பேரினத்தின் அடியை விட்டால் போய்ச் சேர இடமில்லை. மிக விரைவில் தமிழருக்குப் பதில் சொல்லித்தானாக வேண்டும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

