02-24-2004, 03:46 PM
அன்பு கண்டு அடங்கிப்போ
அன்பால் உன்னை அடக்கிப்போ
தாலி என்றும் கழுத்தை நெரிப்பதில்லை
நெரிக்கும் கயிறு தாலியாய் அமைவதில்லை
பணத்திற்காக சொந்த சுகத்திற்காக
கௌரவத்திற்காய் கொண்ட தன்னலத்திற்காய்
முகமறியாதவன் கரம் பிடித்தால்
முகவரியே தொலைந்துபோகும்.
தாய் நாட்டின் சிறகடித்த இறக்கைகளை
புலம்பெயர்ந்து நறுக்கும் கூட்டம்
பாரினுள் பலகோடி உண்டு
அன்பு கொள்
அன்பை கொள்
மனதோடு சேர் உன்னை மணத்தோடு சேர்
சீர் கொடுத்து வாங்காதே
சீருடன் வாங்கப்பார்
பெண் என்றால் என்ன
கடைப்பொருளா ?
உனக்கு கிடைக்கும் அதிகாரம்
உனக்கு கிடைக்கும் சுதந்திரம்
உனக்கு கிடைக்கும் எல்லாமே
அவளிற்கும் பங்குண்டு
ஆயதம் து}க்கிய தலைவன்தான்
ஆணிற்கு சமன் பெண் என்றான்
ஆள்பவன் அவனே ஆமாதித்தபின்
அடங்க நீயும் மறுப்பதேனோ
பெண்ணடிமை விலங்கொடிக்க
கரம் கொடு அன்றேல் விலகி நில்
தாலி என்னும் வேலிகொண்டு தாழ்வாக்காதே
கழுத்தை உறுத்துவதாய் நீயும் கயிறு போடாதே
அவள் மனதில் உதிக்க நீ மனிதனாய் வாழப்பார்
அன்பால் உன்னை அடக்கிப்போ
தாலி என்றும் கழுத்தை நெரிப்பதில்லை
நெரிக்கும் கயிறு தாலியாய் அமைவதில்லை
பணத்திற்காக சொந்த சுகத்திற்காக
கௌரவத்திற்காய் கொண்ட தன்னலத்திற்காய்
முகமறியாதவன் கரம் பிடித்தால்
முகவரியே தொலைந்துபோகும்.
தாய் நாட்டின் சிறகடித்த இறக்கைகளை
புலம்பெயர்ந்து நறுக்கும் கூட்டம்
பாரினுள் பலகோடி உண்டு
அன்பு கொள்
அன்பை கொள்
மனதோடு சேர் உன்னை மணத்தோடு சேர்
சீர் கொடுத்து வாங்காதே
சீருடன் வாங்கப்பார்
பெண் என்றால் என்ன
கடைப்பொருளா ?
உனக்கு கிடைக்கும் அதிகாரம்
உனக்கு கிடைக்கும் சுதந்திரம்
உனக்கு கிடைக்கும் எல்லாமே
அவளிற்கும் பங்குண்டு
ஆயதம் து}க்கிய தலைவன்தான்
ஆணிற்கு சமன் பெண் என்றான்
ஆள்பவன் அவனே ஆமாதித்தபின்
அடங்க நீயும் மறுப்பதேனோ
பெண்ணடிமை விலங்கொடிக்க
கரம் கொடு அன்றேல் விலகி நில்
தாலி என்னும் வேலிகொண்டு தாழ்வாக்காதே
கழுத்தை உறுத்துவதாய் நீயும் கயிறு போடாதே
அவள் மனதில் உதிக்க நீ மனிதனாய் வாழப்பார்
[b] ?

