02-24-2004, 02:19 PM
சாத்திரியாரிடம் சாத்திரத்தைக் காட்ட
வெளிநாட்டு பயணத்துக்கு யோகம் என்றே
சாத்திரியாரும் சாதகமாய்; மொழி பகர்ந்திட
வெளிநாட்டு மாப்பிள்ளை பட்டியலில்
வரன் பார்த்து நடந்தேறியதோர்
தாய் நாட்டில் ஓர் ஒப்பந்தம்
வெளிநாடு என்றாலே சொர்க்கபுரியாம்
சொன்னார்கள் சொன்னார்கள்
சொல்ல வேண்டியதை சொல்லாமல்
எல்லாவற்றையும் சொன்னார்கள்
இங்கு வந்த பின்தான் உணர்ந்தேன்
சுதந்திரம் என்றால் என்ன என்று
திருமணமே ஓர் போர்க்களமானதே..!
அறிமுகமில்லா ஒருவரோடு திருமணம்
சுமக்கும் தாலியினை கழற்றினால் பாவமாம்
சாகும் வரை தொங்க விட்டார்கள்
பெண்களின் கழுத்திலே தூக்குக்கயிராக….
வெளிநாட்டு பயணத்துக்கு யோகம் என்றே
சாத்திரியாரும் சாதகமாய்; மொழி பகர்ந்திட
வெளிநாட்டு மாப்பிள்ளை பட்டியலில்
வரன் பார்த்து நடந்தேறியதோர்
தாய் நாட்டில் ஓர் ஒப்பந்தம்
வெளிநாடு என்றாலே சொர்க்கபுரியாம்
சொன்னார்கள் சொன்னார்கள்
சொல்ல வேண்டியதை சொல்லாமல்
எல்லாவற்றையும் சொன்னார்கள்
இங்கு வந்த பின்தான் உணர்ந்தேன்
சுதந்திரம் என்றால் என்ன என்று
திருமணமே ஓர் போர்க்களமானதே..!
அறிமுகமில்லா ஒருவரோடு திருமணம்
சுமக்கும் தாலியினை கழற்றினால் பாவமாம்
சாகும் வரை தொங்க விட்டார்கள்
பெண்களின் கழுத்திலே தூக்குக்கயிராக….

