02-23-2004, 08:57 PM
மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஷ்டிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.
***************************************************************************
இருந்தும் என்ன?????.
இத்தனை வருடங்கள் போயும்; என்ன ?????.
கொம்பியூட்டர் யுகம் வந்துமென்ன?????.
ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண் என்பவள் ஆணின் உடைமை என்பது மறுக்கப் பட்டு விட்டதா?
இல்லையே !
பெண் என்பவள் உற்பத்தி மெசின் என்பது மறுக்கபப்பட்டு விட்டதா?
இல்லையே!
இப்படி இன்னும் எத்தனை இல்லைகள்.
இந்தப் பெண் என்பவள் தனக்கே தான் சொந்தமாக இருக்கிறாளா?
அது கூட இல்லையே“
அவள் எதை உடுக்க வேண்டும் ,
எப்படி வாழ வேண்டும்,
எப்படிச் சிரிக்க வேண்டும்,
எதைப் படிக்க வேண்டும்,
யாருடைய குழந்தையை எந்த முறையில் தனக்குள் சுமக்க வேண்டும்-----!
இவையெல்லாமே மற்றவர்களால்தான் தீர்மானிக்கப் படுகின்றன.
அது மட்டுமன்றி இவைகளெல்லாம் மற்றவர்களுடைய சர்ச்சச்சைக்குரிய விடயங்களாகவுமே கருதவும்; படுகின்றன.
பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று ஆங்காங்கு கூக்குரல்கள் கேட்கிறதுதான்.
ஆனாலும் இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை.
எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும் சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அநுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று.
இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்விடுதலை என்பது, - சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை........இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள் வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
அப்போதுதான் பெண் விடுதலையின் தாத்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.
பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்கவேண்டும்.
பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும்.
பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாதசட்டங்கள்அழித்தொழிக்கப் படவேண்டும்.
பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப் படவேண்டும்.
நன்றி - சந்திரவதனா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>