06-26-2003, 11:46 PM
ஏதோ சில குழுக்கள் துாண்டுதலினால் தமிழருக்கு எதிராக கொடுமைகள் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.. 83 கலவரத்தில்.. முன்னால் காடையர் கடைகளை எரித்துக் கொண்டு போக.. அவர்களின் பின்னே தெமட்டகொடவில் இருந்து வெள்ளவத்தை இராமடகிருஸ்ண மிஷன் வரை நடந்து வந்தவன்.. அப்போது எத்தனையோ கடை முதலாளிகள்.. சிப்பந்திகளை.. வேலைக்குச் செல்ல வென வந்து.. வீதியில் நின்ற சிங்களப் பெண்கள் காடையரின் முன்பே துணிவாகச் சென்று.. கத்தி.. காப்பாற்றி உயிர்தப்ப வைத்ததை நேரடியாகவே கண்டவன்.. ஆகவே மனிதத்துக்கு மொழி கட்டாகாது... ஆகவே சிங்களவன் என்று மொட்டையாக விளிப்பதை தவிர்ப்பது நலம்..
.

